டிசம்பர் மாத ராசிப்பலன்கள்: அதிர்ஷ்டம் அடிக்க போவது எந்த ராசிக்கு?

Report Print Kavitha in ஜோதிடம்

2018ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் செவ்வாய் பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதில் சில ராசிக்காரர்களுக்கு பலன்களும், சிலருக்கு பாதகமான பலன்களும் ஏற்படும் என்று பார்ப்போம்.

மேஷம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும் டிசம்பர் 16ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.

புதன் எட்டாம் இடத்தில் இருக்கிறார். படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். டிசம்பர் 23ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு மாறுகிறார். தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் பிரயாணத்தினால் அலைச்சல் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும் செல்வ வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்

ரிஷபம்

சூரியன் ஏழாம் இடத்தில் இருப்பதால் அரசு முறை பயணம் ஏற்படும். ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும் வரும் 16ஆம் தேதிக்கு மேல் சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். ஏழாம் வீட்டில் குருவுடன் புதன் இணைந்துள்ளனர். கூட்டுத்தொழில் சிறப்படையும் தாய்மாமனால் நன்மை உண்டாகும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் இருக்கிறார் செய்யும் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார்

வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் வீட்டில் பிரச்சினை உண்டாகும் கவனம் தேவை.

சனி எட்டாம் வீட்டில் இருப்பதால் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

மிதுனம்

சூரியன் ஆறாம் வீட்டில் இருப்பதால் செய்யும் தொழிலில் பிரச்சினை ஏற்படும். 16ஆம் தேதிக்கும் பின்னர் ஏழாம் வீட்டிற்கு நகவர்வதால்

அரசுமுறை பயணம் உண்டாகும். ஆறாம் வீட்டில் புதன் அமர்ந்திருப்பதால் தாய் மாமனுடன் பிரச்சினை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண தட்டுபாடு உண்டாகும் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்கவும்

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். 16 ஆம் தேதிக்குப் பிறகு ஆறாம் வீட்டிற்கு நகர்வதால் வேலைகளில் கவனம் தேவை.

செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளிடம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் கல்வியில் மேன்மை உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார் மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும்.

சிம்மம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். 16ஆம் தேதிக்குப் பிறகு ஐந்தாம் வீட்டிற்கு மாறுகிறார்.

பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். புதன் ராசிக்கு நான்காம் வீட்டில் இருப்பதால் படிப்பில் சிறந்த நிலை உண்டாகும் தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற வகை தொழில்களில் விருத்தி உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்

குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள்.

ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும். 16ஆம் தேதிக்குப் பின்னர் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

புதன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருப்பதால் எதிர்பாராத நல்ல தகவல் வந்து சேரும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் சிக்கல் உண்டாகும் கூர்மையான பொருட்களால் காயம் உண்டாகலாம்.

குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இயந்திரத் தொழிலில் சிறப்படையும் விவசாயம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். 16ஆம் தேதிக்குப் பிறகு மூன்றாம் வீட்டிற்கு மாறுவதால் பணி செய்யும் இடத்தில் சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும் அரசாங்க பதக்கம் விருது கிடைக்கலாம்.

புதன் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் பேச்சில் கனிவும், இனிமையும் அதிகரிக்கும். மதிப்பு உயரும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும்.ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளை துவங்குவீர்கள் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் அமர்திருப்பதால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேர்வு முடிவுகள் சாதகமாக வரும். 16ஆம் தேதிக்குப் பிறகு இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்வதால் சம்பள உயர்வும், பண வரவும் அதிகரிக்கும். ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார். வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம்.

ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கிறார் முகம் பொலிவு பெறும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும் புத்தியில் தெளிவு பிறக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் கடுமையான வார்த்தைகளை தவிர்க்கவும், பாத சனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பதால் தொழில் நிமித்தம் வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.

புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அதிக செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கல்விக்காக செலவுகள் உண்டாகும் திருக்கோயில் பணிகளுக்கு தர்மம் செய்வீர்கள்.

சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் சொத்துச் சேர்க்கையும் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும், 16ஆம் தேதிக்குப் பிறகு 12 ஆம் வீட்டிற்கு மாறுவதால் வெளியூர் பயணம் ஏற்படும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழில் சிறப்படையும் ஆசிரியர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வருமானம் உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும்.

குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா ஆசைகளும் நிறைவேறும் மனதில் நிம்மதி பிறக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10 ஆம் வீட்டில் இருக்கிறார்.

சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும். உங்கள் ராசி நாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் செலவுகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

சூரியன் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் செய்யும் வேலையில் கவனம் தேவை. 16ஆம் தேதிக்குப் பிறகு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதன் பத்தாம் வீட்டில் இருப்பதால் வியாபாரம் விருத்தியாகும் சுய தொழில் சம்பந்தமான படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும் எல்லா முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண விஷயத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

மீனம்

சூரியன் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை, 16 ஆம் தேதிக்குப் பிறகு வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். புதன் ராசிசக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் அன்ன தானத்திற்கு நிதி உதவி செய்வீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம், சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எல்லா செயல்களும் வெற்றி பெறும்

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றிபெறும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்