2019 ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்குமாம்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

2019 ஆம் ஆண்டு எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

விருச்சிகம்

மிகவும் மர்மமான ரகசிய குணங்களை கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் அங்கிருக்கும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அதிர்ஷ்டம் என்று வரும்போது அவர்களுக்கு அது குறைவுதான். ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது. அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக இது இருக்கும்.

சிம்மம்

ஆற்றலும், ஆர்வமும் நிறைந்த சிங்கத்தை கொண்டு குறிப்பிடப்படும் ராசி சிம்மம். மற்ற ராசிகளை விட சிம்ம ராசிக்காரர்கள் அனைவராலும் விரும்பப்படுவபவர்களாக இருப்பார்கள். உங்களின் வசீகரம் அனைவரையும் உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் வசீகரத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றிதான்.

மீனம்

இரட்டை மீன்களால் குறிப்பிடபடும் மீன ராசியானது அவர்கள் தங்களுக்கான இடத்தை தானே உருவாக்கி தனக்கான இடத்தில தனிமையில் வசிக்க விரும்புவார்கள். அவர்கள் தனக்கான அமைதியை தனக்குள்ளே தேடுபவர்கள். அவர்களின் கருணை மற்றவர்களிடம் வெளிப்படையாக பழக தூண்டும். அவர்களின் உறவுகளும், தொடர்புகளும் அவர்களுக்கு தேவையான வெற்றியை உண்டாக்கும்.

துலாம்

நியாயத் தராசை சின்னமாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவாக கைகொடுக்காது. அவர்களின் விழிப்புணர்வு அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள உதவும். ஆனால் 2019 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். அவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை நடக்கும் அனைத்தையும் நம்பவேண்டியது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்