2019 புத்தாண்டு ராசிபலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு செல்வம், செல்வாக்கு உயரும்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

மகரம் ராசியினரே! பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள்.

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்றீர்களே!

இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே! இனி அரவணைத்துப் போவீர்கள். செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள். மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். 12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்துச் செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, பிரச்னைகளெல்லாம் வந்துச் செல்லும். ஆனால் 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள்.

திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும்.

திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரையச் சனியாக வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கன்னிப்பெண்களே!

காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தாயுடனான கருத்து வேறுபாடுகள் விலகும். இனி அந்த நிலை மாறும். ஆடை ஆபரணம் சேரும். கல்யாணம் விமர்சையாக முடியும். விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள்.

மாணவர்களே!

உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள்.

அரசியல்வாதிகளே!

ஓய்வெடுக்க முடியாதபடி தொகுதி வேலைகளை பார்க்க வேண்டி வரும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். என்றாலும் கட்சிக்குள் சில சதித்திட்டங்களும் நடக்கும்.

வியாபாரிகளே!

சரக்குகளை நிரப்பிவைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.

வேலையாட்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தந்தார்களே! இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். கணினி துறையினர்களே! வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.

உத்யோகஸ்தர்களே!

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்னைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே! அதெற்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவிஉயர்வையும் எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையினர்களே!

எப்படியும் கிடைத்துவிடும் என காலம் கடத்திக் கொண்டிருந்தீர்களே! இனி பொறுப்பாக செயல்பட்டு சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

விவசாயிகளே!

நவீனரக உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். இந்த 2019ம் ஆண்டு ஆரோக்ய குறைவையும், போராட்டத்தையும் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers