ஜனவரி மாத ராசி பலன்கள்! யாருக்கு அதிர்ஷ்டம்?

Report Print Kavitha in ஜோதிடம்

ஜனவரி மாதம் தனுசு ராசியில் சூரியன், சனி, புதன் இணைந்திருக்க, கடகத்தில் ராகு மகரத்தில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

துலாமில் உள்ள சுக்கிரன் விருச்சிகத்தில் குரு உடன் இணைகிறார். செவ்வாய் மீனத்தில் சஞ்சரிக்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மாத துவக்கத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். சனியும், புதனும் ஒன்பதாம் இடத்தில் கூட்டணி அமைத்து அமர்ந்திருக்க நன்மைகள் நடைபெறும் காலம்தான். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் மாத பிற்பகுதியில் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சூரியன் 10ஆம் வீட்டிற்கு நகர்வதால் சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், மனக் குழப்பத்தை தவிர்க்கவும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருப்பதால் பெண்களால் சிலருக்கு மனகஷ்டம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்துவரும் சிறப்படையும், மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் களைகட்டும், சிலருக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நன்கு கவனமாக படிக்க வேண்டும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். ஞாயிறு சூரிய நமஸ்காரம் செய்யலாம். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும். கந்த சஷ்டி கவசம் கவலையை மறக்கச் செய்யும்.

ரிஷபம்

சூரியன் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி, புதனோடு இருக்கிறார். அஷ்டமத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கையினால் செலவுகள் அதிகம் வர வாய்ப்புள்ளது சிக்கனத்தை கடைபிடிக்கவும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். தாய் மாமனால் சங்கடம் உண்டாகும், 21தேதிக்கு மேல் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும், மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும், தொழிலில் தடை உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

மிதுனம்

சூரியன், புதன், சனி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருப்பதால் பணவரவும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் எட்டாமிடத்திற்கு மாறுவதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் செயல்கள் மனதை சங்கடப்படுத்தும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் மாத பிற்பகுதியில் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மாமியார் விஷயத்தில் மனைவியிடம் சண்டையிட வேண்டாம்.

கடகம்

சூரியன், சனி, புதன் கிரகங்கள் கூட்டணி அமைத்து ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் பிறர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். 15ஆம் தேதிக்கு மேல் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 21ஆம் தேதியன்று ஏழாமிடத்திற்கு வருவதால் தொழில் விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பண வரவு உண்டாகும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தினை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஐந்தாம் வீட்டில் சனி,புதனோடு சஞ்சரிப்பதால் அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பு செய்வீர்கள். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஆறாமிடத்திற்கு வருவதால் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 21ஆம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும்.குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும், அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 12மிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி, புதனோடு அமர்ந்திருக்கிறார். 15ஆம் தேதிக்கு மேல் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் நான்காமிடத்தில் இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 21ஆம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும், வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்குவீர்கள், வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 11மிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருப்பதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். 15ஆம் தேதிக்கு மேல் நான்காமிடத்திற்குச் செல்வதால் வீட்டு வாடகை மூலம் பண வரவு உண்டாகும், அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் 21ஆம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும், அக்கம்பக்கத்தாரால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 10மிடத்தில் இருக்கிறார் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சனி, புதனோடு சேர்ந்திருக்கிறார். அப்பா மூலம் பண வரவு உண்டாகும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் மூன்றாமிடத்திற்கு வருவதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் மூலம் பண வரவு அதிகரிக்கும் 21ஆம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், செல்வ வளம் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும், அக்கம்பக்கத்தாரால் தொல்லை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 9மிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களில் பிரச்சினை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு 3மிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

தனுசு

சூரியன் சனியோடு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் உண்டாகும், அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் அப்பா மூலம் பண வரவு உண்டாகும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைக் கொடுக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் 21ஆம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும், வங்கிகளில் முதலீடு செய்வீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8மிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு 2மிடத்தில் இருக்கிறார் தேவையற்ற குழப்பம் உண்டாக்கும் பேச்சினை தவிர்க்கவும்.

மகரம்

சூரியன் சனியோடு உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவதால் உயர் அதிகாரிகளினால் மன சங்கடம் உண்டாகும், ஆன்மீக பயணங்கள் ஏற்படும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும், பண லாபம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும், வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 7மிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனியோடு சேர்ந்திருக்க நன்மைகள் அதிகம் நடைபெறும் காலமாகும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்குச் செல்வதால் அரசாங்க கட்டணங்களை செலுத்திவிடுவது சிறப்பு, தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் மாத பிற்பகுதியில் புதன் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும், குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 6மிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மனதைரியம் உண்டாகும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோவில்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சனியோடு சேர்ந்திருக்க கூடவே புதனும் இணைகிறார். படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 15ஆம் தேதிக்குப் பின்னர் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருவதால் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், பண வருவாய் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் மாத பிற்பகுதியில் பதினொன்றாமிடத்திற்கு புதன் வருவாதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு சரளமாக இருக்கும், குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 5மிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் நிறைவேறும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers