மார்கழியும், தையும் இணையும் இந்த வாரம்- எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது?

Report Print Fathima Fathima in ஜோதிடம்

இன்றைய நாளுக்கான, வாரத்திற்கான, மாதத்திற்கான ராசியை தெரிந்து கொண்டு நாளை தொடங்குபவர்கள் ஏராளம்.

அந்த வகையில் மார்கழி, தை மாதம் ஒன்றாக இணையும் இந்த வாரத்திற்கான ராசி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். கவுரவம் கூடும். பிரச்னைகளுக்கு எளிய தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனலாபம் காண்பீர்கள். பேச்சில் விவேகம் வெளிப்படும். உடனிருப்பவர்களுடன் அனுசரணையாக இருப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளை எளிதாக்கும். உறவினர்கள் முக்கியமான உதவி கேட்டு உங்களை நாடி வரக்கூடும். பிள்ளைகளின் துறுதுறுப்பான செயல்கள் மகிழ்ச்சி தரும். வயிறு சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். உங்கள் எண்ண ஓட்டத்தை நெருங்கிய நண்பரோடு பகிர்ந்துகொள்வது நல்லது. அவரது ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்குத் துணைநிற்கும். அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் விரயம் ஏற்படும். மாணவர்கள் வேகமாக எழுதும் திறனைப் பெறுவர். மதிப்பு உயரும் வாரம் இது.

ரிஷபம்

பொருளாதார நிலை உயரும். தடைகளைத் தகர்த்து எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பு உயர்வடையும். கடன் பிரச்னைகள் குறையும். நண்பர்கள் தங்கள் வீட்டுப் பிரச்னையை உங்களோடு பகிர்ந்து கொள்வர். உறவினர் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி கேட்டு வரக்கூடும். பிள்ளைகளின் செயல்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. தம்பதியராக இணைந்து செயல்படும் காரியங்களில் வெற்றி கிட்டும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பை சுமக்க நேரிடும். மாணவர்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முயற்சித்து முன்னேற்றம் காண வேண்டிய வாரம் இது.

மிதுனம்

நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறி உண்டாகும். வரவு சீராக இருக்கும். புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தாரோடு மனஸ்தாபம் தோன்றும். குடியிருக்கும் வீட்டினை மாற்றியமைக்க எண்ணுவீர்கள். உறவினர்கள் வழியில் கலகங்கள் தோன்றும். பிரயாணத்தின்போது பொருளிழப்பை தவிர்க்க எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். அதிக டென்ஷனால் உடல்நிலையில் சிரமம் காண்பீர்கள். தம்பதியருக்குள் மனஸ்தாபம் தோன்றி மறையும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சங்கடங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் அவசரப்படாமல் வினாக்களுக்கு விடையளிப்பது அவசியம். கலைத்துறையினர் கடன் பிரச்னையால் அவதியுறுவர். சராசரி பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.

கடகம்

சுறுசுறுப்பு கூடும். வேகத்தை தவிர்த்து விவேகமாக செயல்படுவது நல்லது. அவசரத்தால் இழப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வரவு தொடர்ந்து சேமிப்பு உயர்வடையும். வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. வித்தியாசமாக சிந்தித்து நற்பெயர் காண்பீர்கள். உடன்பிறப்புடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உங்களைத் தவறாக எண்ணியிருந்த உறவினர் ஒருவர் உண்மை உணர்ந்து உங்களை நாடி வருவார். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும். ஓயாத உழைப்பால் உடல் அசதிக்கு ஆளாவீர்கள். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். மாணவர்கள் எழுத்துத்திறனை உயர்த்திக் கொள்வது நல்லது. சுறுசுறுப்பான வாரமிது.

சிம்மம்

நெருக்கடி இருக்கும். படிப்படியாக கடுமையான முயற்சியால் நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். முகத்தில் கோபத்தை காட்டுவதை தவிா்க்கவும். வரவு தடைபடலாம். பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளை சுலபமாக்கும். பிள்ளைகளின் சாமர்த்தியமான செயல்களைக் கண்டு பூரிப்பீர்கள். வயிற்றுவலி, அஜீரண பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் வெற்றி பெறும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பணிகளைச் செய்து முடிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாடு கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருது கிடைக்கும். சோதனை தரும் வாரம் இது.

கன்னி

சாதகமான பலன்கள் உண்டு. வேகத்தோடு விவேகமும் இருக்கும். தன்னம்பிக்கை உயரும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். உறவினர்களின் குத்தலான பேச்சுக்களை காதில் வாங்காமல் உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷம் தரும். உஷ்ணத்தால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும். பண விவகாரங்களைக் கையாளும் போது அதிக கவனம் தேவை. வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பினை சுமக்க நேரிடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப்பார்ப்பது அவசியம். செயல்வேகம் கூடும் வாரம் இது.

துலாம்

சுய முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.எதையும் விரைந்து செய்து முடிக்க சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேகமாகச் செயல்பட்டாலும் அடுத்தவர்களின் மனநிலையையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செல்வதற்குள் பெரும் அவஸ்தை இருக்கும். எதிர்பார்த்த வரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வித்தியாசமான முயற்சிகள் விரயம் தரும். பிள்ளைகளின் செயல்களை கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கலைத்துறையினர் தனலாபம் காண்பர். உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னையை சந்திக்க நேரும். மாணவர்கள் சிறுசிறு தவறுகள் நேரா வண்ணம் கவனத்தோடு படிக்க வேண்டியது அவசியம். முயற்சியின் பேரில் வெற்றி காணும் மாதம் இது.

விருச்சிகம்

எதிலும் நிதானித்து செயல்படுங்கள். வேகத்தை விட விவேகம் சிறந்தது என்பதில் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்க சாதுர்யமாகப் பேச வேண்டி வரும். சரியான நபர்களைக் கொண்டு உங்கள் பணிகளை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். சேமிப்பு உயரும். கடன்பிரச்னைகள் குறையும். உடன்பிறந்தாரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். விடுபட்டிருந்த சொந்தம் ஒன்று உங்கள் உறவை மீண்டும் நாடி வரலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்குத் துணை புரியும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் அதிகார பதவியை பெறுவர். மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு பாடங்களில் கவனம் செலுத்துவர். கலைத்துறையினர் வெற்றி காண்பர். நன்மை தரும் வாரம் இது.

தனுசு

சிரமங்கள் குறைந்தாலும் எடுத்த காரியத்தை போராடியே முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வரவு சிறக்கும். உங்கள் பேச்சு அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. உடன் பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். உணவில் ருசிக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிள்ளைகளின் பெயரில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. நரம்பியல் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவப்போய் சிக்கலை சந்திக்க நேரிடும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல் போக்கை காண்பர். மாணவர்கள் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கலைத்துறையினர் அலைச்சலுக்கு ஆளாவார்கள். தடைகளைத் தாண்டி வெற்றிகாணும் வாரம் இது.

மகரம்

பணிகள் எளிதாகும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள காலநேரம் சாதகமாக அமையும். புதிது புதிதாக எதையாவது செய்து மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தனவரவு சீராக இருக்கும். நேரத்திற்குத் தகுந்தாற் போல் பேசி பிரச்னையை எளிதில் சமாளிப்பீர்கள். புதிய ஃபர்னிச்சர்கள் வாங்கும் முயற்சிகள் தள்ளிப்போகும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். உடல் உஷ்ணத்தால் வயிறு சார்ந்த பிரச்னைகள் தோன்றக்கூடும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். உத்யோகத்திற்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். சுய தொழில் செய்வோர் கூடுதல் லாபம் பெறுவர். கலைத்துறையினர் தனலாபம் காண்பர். மாணவர்கள் தேர்வு எழுதும் கலையில் பயிற்சி பெற வேண்டியது அவசியம். சாதகமான பலன்களைக் காணும் வாரம் இது.

கும்பம்

எளிதில் முடிய வேண்டிய காரியங்களுக்கும் அதிக அலைச்சல் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் கூடினாலும் அதற்குரிய வரவுநிலையும் சிறப்பாக அமையும். சொன்ன சொல்லைக் காக்க மிகவும் மெனக்கெடுவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம். பணியாளர்களால் உங்களின் பணிச்சுமை கூடும். அண்டை, அயலாருடன் மனஸ்தாபம் தோன்றும். உறவினர்களின் இல்ல விசேஷங்களில் உண்டாகும் சந்திப்பு மனமகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். மைக்ரேன், ஒற்றைத் தலைவலியால் அவதியுற நேரிடும். வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் காண்பீர்கள். வேலைக்குச் செல்வோர் உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல இயலாமல் தடைகளை காண்பர். மாணவர்கள் தேர்ந்தெடுத்து வினாக்களைப் படிப்பதில் ஆர்வம் கொள்வர். கலைத்துறையினர் வெற்றி காண்பர். தடைகளைக் கடந்து வெற்றி காணும் வாரம் இது.

மீனம்

நெடுநாளைய விருப்பம் பூர்த்தி அடையும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் நீங்கள் திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரம் இது. வரவு சீராக இருக்கும். சொன்னபடி நடப்பதை கவுரவமாக எண்ணுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். உறவினர் ஒருவர் உதவி கேட்டு உங்களை நாடி வரக்கூடும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எண்ணுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் வருத்தம் தரும். அதிக அலைச்சலால் உடலில் அசதி தோன்றும். வாழ்க்கைத் துணையின் ஆதரவான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும். குறைந்த விலையுள்ள பொருளை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்கள் கடுமையாக பயிற்சி பெற வேண்டியது அவசியம். சாதகமான பலனைத் தரும் வாரம் இது.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers