இந்த ராசிக்காரர்கள் மிகவும் பலவீனமானவர்களாம்! உங்க ராசி இருக்கிறதா?

Report Print Kabilan in ஜோதிடம்

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மனம் எப்பொழுதும் சமநிலையில் இருக்காது என்பதை இங்கு காண்போம்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் குழப்பமான மனநிலையுடன் இருப்பார்கள். ஏனெனில், இவர்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவு செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள்.

இவர்களின் சமநிலை இல்லாத மனதால் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள். மேலும் தங்களது வாழ்விற்கு எது நல்லது என்பதையும், எது கெட்டது என்பதையும் கண்டறிவதில் அதிக குழப்பத்துடன் இருப்பார்கள்.

ஒரு இலக்கை அடைய இவர்கள் மற்ற அனைத்தையும் கோட்டை விடுவதுடன், இறுதியில் அவர்களின் குழப்ப மனநிலையால் இலக்கையும் தொலைத்து விடுவார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சமநிலையின்மை அதிகமாக இருப்பவர்களாக காணப்படுவார்கள். ஏனெனில் இவர்களின் அளவீடுகள் எப்பொழுதும் சமமின்றியே இருக்கும். இவர்களின் குறிக்கோள் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்கும்.

ஆனால், இவர்களின் மீது இவர்களுக்கே இருக்கும் சந்தேகத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திப்பார்கள். ஆகவே, இவர்களின் வெற்றிக்கு தடையாக இருப்பது இவர்களின் சுயசந்தேகம் தான்.

மகரம்

பாதுகாப்பற்ற உணர்ச்சிதான் மகர ராசியில் பிறந்தவர்களின் வீழ்ச்சிக்கான காரணமாகும். இதனால் தான் மகர ராசிக்கார்கள் பெரும்பாலும் சோர்வாகவே காணப்படுவார்கள்.

இவர்களிடம் நம்பிக்கை காணப்பட்டாலும், இவர்களின் மோசமான முடிவுகளும், தவறான தேர்வுகளும் தோல்வியை உறுதிப்படுத்தும். எனவே எப்போதாவது தான் இவர்கள் வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்

அதிக செயல்பாடுகள் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், தங்களது லட்சியத்தில் கவனம் செலுத்துபவராக இருப்பார்கள். ஒற்றை குறிக்கோளை மனதில் வைத்து அதற்காக உழைப்பார்கள்.

இவர்களின் குறிக்கோளுக்காக உழைக்கும்போது, மற்ற முக்கியமான விடயங்களில் இவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்த மாட்டார்கள். இறுதியில் அவர்களின் தடுமாறும் மனதால் அவர்களின் குறிக்கோளை தவிர வேறு எதுவும் அவர்களுடன் இருக்காது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்களின் முடிவுகள் மீதும், தேர்வுகளின் மீதும் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். எப்போதுமே அவர்களின் தேர்வை விட சிறந்தது எதுவென்று சிந்தித்தே நிம்மதியை இழப்பார்கள்.

இவர்களின் இந்த தேடல் இவர்களை எப்பொழுதும் இவர்களுக்கு தேவையானவற்றில் இருந்து விலக்கியே வைத்திருக்கும். எனவே இவர்கள் தங்களின் உள்ளுணர்வை நம்பவே மாட்டார்கள். இதன் காரணமாக எப்பொழுதும் தங்களுக்கான சூழ்நிலையை உருவாக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் சமநிலை இல்லாத மனதால், இவர்கள் மட்டுமன்றி இவர்களை சுற்றியுள்ளவர்களும் பெரிதும் சிரமப்படுவார்கள். இவர்களின் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ இவர்கள் எதிர்பார்க்கும்படி நடக்காத போது, இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து தவறாக செய்வார்கள். தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இவர்கள் இருக்கமாட்டார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers