2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

2019ம் ஆண்டு சனி பகவான் தொடர்ந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

ஏப்ரல் மாதம் 30ம் தேதி சனி பகவான் வக்ரம் ஆகி 18, செப்டம்பர் 2019 வரை வக்கிர கதியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

20 ஜனவரி, 2019 அன்று வக்கிர நிவர்த்தி பெரும் சனி பகவான், மறுமுறை 27 டிசம்பர் 2019 அன்றும் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

31 ஜனவரி 2019 வரையில் சனி பகவான் தனுசு ராசியில் இருக்கிறார்.

சனிப்பெயர்ச்சி எல்லா 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆகவே 2019 ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்களை இப்போது காணலாம்.

மேஷம்

இந்த சனிபெயர்ச்சி மேஷ ராசிக்கு நல்ல பலன்களை அளிக்கவில்லை. உங்கள் வருமானம் இறங்குமுகமாக இருக்கும்.

உங்கள் உடன்பிறப்புகளுக்கு அதிக கவனம் மற்றும் பராமரிப்பு தேவை. உங்கள் எதிரிகளால் அதிக தொந்தரவு ஏற்படும். உங்களுக்கு இருக்கும் கெட்ட நடத்தைகளால் பெரிய பிரச்சனைகள் உண்டாகும் வாய்புகள் உண்டு.

அதிக செலவு மனதிற்கு ஒரு வித அழுத்தத்தை உண்டாக்கும். உங்கள் கெட்ட குணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் எல்லா வேலையிலும் போதுமான அளவு கவனம் செலுத்தவும். எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டிருங்கள். எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி திடீர் இழப்பை உண்டாக்கும். உங்கள் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதால் அவருக்கு போதிய அக்கறை தேவைப்படும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் போதிய கவனம் தேவைப்படும்.

புதிய முதலீடுகள் செய்வதற்கு தகுந்த காலகட்டம் இதுவல்ல. வருகிற அக்டோபர் மாதத்தில் குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

வேலை மற்றும் குடும்பம் ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் உங்கள் வேலையில் உயர்வு தேடி வரும்.

மிதுனம்

இந்த சனிப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பல விதங்களில் நன்மை புரிகிறது. புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த காலம் இது.

உங்கள் வாழ்க்கையில் வெற்றியை சுவைக்க குடும்பம் மற்றும் வேலை ஆகியவற்றில் ஒரு சமநிலையை கொண்டு வாருங்கள்.

உங்கள் தாயின் உடல்நிலை நலிவடைய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் இழுத்துக் கொண்டிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் உண்டு.

உங்கள் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்த சில பிரச்சனைகள் நீங்கி உங்களுக்கு நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை ஆகிய இரண்டிலும் அதிக முன்னேற்றம் காணப்படுவது உறுதி. ஆக, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சந்தோசம் மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டையும் தரப் போகிறது.

கடகம்

கடக ராசியினராகிய உங்கள் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் உங்கள் வருமானம் முழுவதும் உங்கள் உடலை சீராக்க செலவு செய்யப்படும்.

வேலை பார்ப்பதில் சிரமம் உண்டாகும். உங்கள் உடன்பிறப்புகளோடு உள்ள உறவில் சிக்கல் உண்டாகும். பிரயாணங்கள் அதிகரிக்கும்.

இதனால் உங்கள் உடல்நிலை பாதிக்கப்படும். மனஅழுத்தம் உண்டாகும். எந்த காரணம் கொண்டும் மற்றவர்களிடம் வாக்குவாதம் புரிய வேண்டாம்.

பிரச்சனை உண்டாக்கும் சூழ்நிலையிலிருந்து தள்ளி இருப்பது நல்லது. உங்கள் உடல் நிலையில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். நன்றாக ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

சிம்மம்

இந்த சனிபெயர்ச்சி சிம்ம ராசி மாணவர்களுக்கு அதிக நன்மை அளிக்கிறது. புதிய வியாபாரம் தொடங்க இது சிறந்த காலம்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை மாற்றம் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றம் நல்ல பலனைத் தரும். உங்கள் உடல்நிலையில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. காதல் கல்யாணமாக கனியும் காலம் இந்த காலம். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

உடல்நிலையில் பின்னடைவு ஏற்படாமல் இருக்க தரமான வாழ்க்கைமுறையை பின்பற்றுங்கள். உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் இருந்தாலும், அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

கன்னி

இந்த சனிபெயர்ச்சி கன்னி ராசியினருக்கு நல்ல பலனைத் தருவதில்லை. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதில் தொந்தரவு இருக்கும். புதிய வியாபாரத்தில் பல பாதிப்புகள் உண்டாகலாம்.

புதிய வியாபாரம் தொடங்க ஏதுவான காலம் இதுவல்ல. வேலை பளு மிக அதிகமாக இருக்கும் காலகட்டம் இது.

உங்கள் வீட்டை மாற்றும் எண்ணம் உங்களுக்கு உண்டாகலாம். உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை வழக்கமாக செய்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கடினமாக உழையுங்கள்.

முதலீட்டிற்கான எந்த ஒரு திட்டத்தையும் இப்போது வகுக்க வேண்டாம். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்களுக்கு அமைதியைக் கொடுக்கும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பல நோய்களை உங்களுக்கு வரவழைக்கலாம். ஆகவே உணவு மற்றும் தினசரி பழக்கங்களில் அதிக கவனம் தேவை.

துலாம்

மாணவர்களுக்கு உயர் கல்விக்கான அதிக வாய்ப்புகள் உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த இது சரியான நேரம் அல்ல. இருப்பினும், தற்போது நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் முன்னேற்றமான பாதையில் சென்று லாபத்தைக் கொடுக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

நல்ல முதலீட்டிற்கான முடிவுகளை தற்போது எடுக்க நேரலாம். நீண்ட தூர பயண வாய்ப்புகள் ஏற்படலாம். செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் அதனை நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு உண்டு.

ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் நிதி நிலை சீராக இருக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

உங்கள் முதலீடுகள் நல்ல வருவாயை ஈட்டித் தரும். உங்கள் தொழிலில் நல்ல சாதகமான விளைவுகளைப் பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். விவாதங்களில் எப்போதும் ஈடுபட வேண்டாம்.

உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். கோபம் கொள்ள வேண்டாம். உங்கள் கோபம் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. உங்களுக்கு மன அழுத்தம் அதிகரித்தாலும், அனைத்தும் நன்மைக்கே என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வேலையில் சற்று இடைவெளி கொடுத்து உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கில் உங்களை ஈடுபடுத்தி மனதை புத்துணர்ச்சி பெறச் செய்யுங்கள்.

உங்கள் துணையின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். சிறிய முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுங்கள். உங்கள் துணையின் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்துங்கள். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்

வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் விரும்பும் மாணவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆனால் அவ்வப்போது சில தடங்கல் உண்டாகும்.

சட்ட விரோத நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட நேர்ந்தால் தண்டனை தவிர்க்க முடியாததாகும். கடின உழைப்பும், தொடர்ந்த முயற்சியும் நல்ல விளைவுகளை உங்களுக்குக் கொடுக்கும்.

வரவும் செலவும் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வியாபாரம் அல்லது வேலை தொடர்பான அலுவல் காரணமாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலை உண்டாகலாம்.

கும்பம்

கும்ப ராசியினர் சனி பெயர்ச்சியில் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் சிறந்த காதல் அனுபவங்களைப் பெறுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் பல சிறந்த வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கும்.

ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வியாபாரம் செழித்து வளர்ந்து நல்ல லாபம் பெருகும். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலம் என்று சொல்லலாம். கல்வியில் கவனம் அதிகரித்து சிறந்த விளங்குவார்கள்.

உங்கள் துணையிடம் எதையும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இதனால் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும். காலம் கனியும் வரை காத்திருக்கவும்.

மீனம்

உங்கள் குடும்பத்துடன் சிறந்த பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இது ஒரு சிறந்த காலமாக விளங்குகிறது. இந்த சனிபெயர்ச்சி பல வழிகளில் உங்களுக்கு நன்மை புரிவதாக உள்ளது. பணம் தொடர்பான நன்மைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. வெற்றியைக் காண, அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

ஒரு பக்கம் உங்கள் வருமானம் அதிகரித்தாலும், மறுபக்கம் செலவும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வேலை மாற்றம் இந்த கால கட்டத்தில் நன்மையைத் தராது. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகும்.

அவசர தேவைக்காக பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு முதலீட்டையும் இப்போது செய்ய வேண்டாம். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல் உண்டாகும் வாய்ப்புகள் நேரலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers