இந்த வார ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்?

Report Print Kavitha in ஜோதிடம்

இந்த வார ராசி பலனில் (22-03-2019 முதல் 28-03-2019 வரை ) எந்த எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்க போகுது என்று பார்ப்போம்.

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இருந்தாலும் வார மத்தியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.

ராசியில் இதுநாள் வரை இருந்த செவ்வாய் பகவான் இனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சச்சரவுகள் வந்து போனாலும் சந்தோசமான நிகழ்வுகளும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதன் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். குரு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கையில் இருக்கும் பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்க வேண்டாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் பாக்கெட்டில் பணம் நிறையும்.

சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும் தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்வது நல்லது.

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது.

வார இறுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் புதனோடு இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் பெண்களின் உதவி கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் தேடி வரும்.

புது வேலைகள் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் கேது உடன் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சைத் தவிர்க்கவும்.

மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். விடைகளை எழுதிப்பார்க்கவும். பெண்களுக்கு இது சாதகமான வாரம். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் விளக்குப் போட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். பொருளாதார ரீதியான வளர்ச்சி அதிகரிக்கும். சந்திரன் இந்த வாரம் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் மனதில் அமைதி குடியேறும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்க முயற்சி செய்யலாம். புதனுடன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் செய்யும் செயல்ககளில் வெற்றி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கேது உடன் சஞ்சரிக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் கவனம் தேவை.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக்குழப்பத்தை தவிர்க்கவும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களின் உடல் நிலையில் லேசான அசதி ஏற்படும் மருத்துவமனைக்கு சென்று கவனியுங்கள். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்ல நன்மைகள் நடைபெறும்.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் பாக்ய ஸ்தானத்தில் இருக்கிறார் பரம்பரை தொழில் சிறப்படையும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் வளம் பெருகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

புதன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் உடன் சேர்ந்திருப்பதால் விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தவும். பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்க்கவும்.

சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் கேது உடன் சஞ்சரிப்பதால் உடல் உழைப்பு அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் பழைய பொருட்களில் முதலீடுகள் அதிகரிக்கும்.

பெண்கள் ஆலய தரிசனம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை. உடலில் உஷ்ணம் கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது.

மனதில் அமைதி குடியேறும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் புதனுடன் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் கேது உடன் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் சுகாதாரமான உணவுகளை சாப்பிடவும், தேர்வு நேரங்களில் கவனமாக எழுதி பார்க்கவும். ஞாயிறு கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நிதானம் தேவை. வீட்டில் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. வார இறுதியில் மன சஞ்சலம் நீங்கும் அமைதி அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் முன்னோர்களின் சொத்துகளில் பங்கு கிடைக்கும்.

வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கேது உடன் சேர்ந்திருப்பதால் அலைச்சல் கூடும். விவசாயம் சிறப்படையும். உடல் உழைப்பினால் சோர்வு ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளையை துவக்குவீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு மனை வாங்குவீர்கள். மாணவர்களின் கல்வித்திறம் மேம்படும். தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்வீர்கள். பெண்கள் உடல் நலனிலும் கணவரின் நலனிலும் அக்கறை செலுத்துங்கள். வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் ஆரோக்கியம் தேவை. எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் துவக்கத்தில் மன உளைச்சலை தந்தாலும் வார இறுதியில் மனதில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

நெருப்பு விசயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பங்களை தவிர்க்கவும்.

ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் வில்லங்கம் உண்டாகும் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். மாணவர்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்வீர்கள். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்கவும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தில் மனதில் உற்சாகம் பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் நிலை சிறப்படையும்.

செய்யும் செயல்களில் அலைச்சல் கூடும். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வருமானத்துடன் புகழ் அதிகரிக்கும். பணவரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளும் கூடும் சிக்கனத்தை கடைபிடிக்கவும். புதனுடன் இணைந்து சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும்.

வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவை தவிர்க்கவும். மாணவர்களின் கல்வித்தரம் சீராகவே இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திங்கட்கிழமையன்று சந்திரனை வணங்கவும், சில ஆலய தரிசனம் செய்யவும்.

தனுசு

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அலைச்சல்கள் கூடும் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும்.

பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உடன் பிறந்த சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் அசதி அதிகரிக்கும். சோர்வும் கூடும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரின் ஆதரவும் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் அக்கறை காட்டுங்கள். புதன்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். அரசு முறையில் சிறு பயணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையிலான சொத்தில் பங்கு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.

பெரிய அளவில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தான தர்மம் செய்வீர்கள். மாணவர்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருப்பது நல்லது. பெண்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரம் மன அமைதி ஏற்படும். செவ்வாய்கிழமைகளில் முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு வகையில் வருமானம் அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் நிம்மதி பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக புதிதாக இயந்திரங்களை வாங்குவீர்கள்.

வீடு, மனை வாங்கும் அளவிற்கு வருமானம் கூடும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சுய தொழில் சிறப்படையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

புதன் சுக்கிரன் உடன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் யாவும் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும். தொழில் வியாபாரம் சிறப்படையும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கவும். மாணவர்கள் உணவில் கவனம் செலுத்தவும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன்பிறப்புகளின்களின் உதவி கிடைக்கும்.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் புனித தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் காலமாகும். கடன்கள் அடைபடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

புதன் சுக்கிரன் உடன் இணைந்து உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர சுகபோகங்கள் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சிறப்படையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்கள் செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு போட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்