இந்த 6 ராசிக்காரர்கள் தான் சொல்லி அடிப்பவர்கள்!

Report Print Kabilan in ஜோதிடம்

எந்தெந்த ராசிக்காரர்கள் திட்டமிட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.

சில ராசிக்காரர்கள் பல காரியங்களில் சரியான முறையில் திட்டமிட்டு, அதனை வெற்றிகரமாக செய்துமுடிப்பார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்போதும் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் எந்த வேலையை செய்தாலும், எங்கு அதனை செய்தாலும் தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

அந்த அளவிற்கு இவர்களின் திறமையை சுற்றியிருப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். எனவே தன்னிச்சையாக இவர்கள் திட்டமிடுவார்கள்.

அது சரியாக வேலை செய்து இவர்களுக்கு பாராட்டுக்களையும் தேடித் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு திட்டமிடுவது என்பது மிகவும் பிடிக்கும். ஏனெனில் இவர்களுக்கு எப்போது எதிர்காலத்தில் நடப்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து திட்டமிடுவதால், பெரும்பாலும் சொதப்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. சவால்களை எதிர்கொள்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் சிறப்பு திட்டங்களை எப்போது தீட்டி வெற்றி பெறுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய திட்டங்களை தீட்டுவதுடன், அதனை வழிநடத்தி செல்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்களின் சூழ்நிலையை தங்கள் திட்டமிடுதலின் மூலம் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால், அதனை முழுமையாக நம்பலாம் என்ற அளவிற்கு வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரகள் மிகவும் செயல்திறன் கொண்டவர்கள், அதேசமயம் இவர்களின் திட்டமிடுதல் காரணமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பார்கள்.

அனைத்து விதமான நிகழ்ச்சிகள், பார்ட்டிகளையும் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் மையப்புள்ளியாக இவர்கள் இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை விட திட்டமிடுவதில் வல்லவர்கள். அந்த நம்பிக்கை வரும் வரை அவர்களே அதனை நம்ப மாட்டார்கள்.

இவர்கள் தனக்கு ஒன்று வேண்டும் என்றால், அதனை தாம் தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை நம்புவார்கள். எனவே தங்களது திட்டங்களை சிறப்பாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் அதிகம் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் திட்டங்களை பற்றிய எண்ணங்களையே கொண்டிருப்பார்கள். இவர்கள் சாகசத்தை அதிகம் விரும்புவதால், அதற்கான திட்டங்களையும் சவாலான செயல்களை செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதாக இருப்பதுடன், ரசனைமிக்கதாகவும் இருக்கும். எனவே இவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்கலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...