தமிழ் வருடப்பிறப்பு: விசாகம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை..... அதிர்ஷ்டமா?

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

விசாகம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை

விசாகம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஒன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

லாபத்தை அதிகரிக்க பாடுபடும் விசாகம் நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும்.

பணவரவு சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னை குறையும்.

பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும். மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.

அனுஷம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இருபதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

வெளியூர் பயணத்தில் ஆர்வமுடன் இருக்கும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.

கடன் பிரச்னை தீரும். செல்வ நிலை உயரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்றியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம்

நன்றாக நடக்கும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

புதன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஐப்பசி, தை, மாசி.

கேட்டை

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பத்தொன்பதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

கனிவுடைய பேச்சால் அனைவரையும் கவரும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்:

புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல் தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், புதன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.

மூலம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும். கலைத்துறையினர் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

பரிகாரம்:

மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சூரியன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆவணி, மார்கழி.

பூராடம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினேழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

எச்சரிக்கையாக எந்த காரியத்தையும் செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான பலன் வரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். பெண்கள் எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினர் யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம். கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்:

கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

குரு, சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

வைகாசி, ஐப்பசி, தை, பங்குனி.

உத்திராடம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினாறாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

தன்னிச்சையாக செயல்படும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரவு அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

பரிகாரம்:

நவகிரகத்தில் உள்ள குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சூரியன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆவணி, மார்கழி, தை.

திருவோணம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினைந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

வழக்கத்தைவிட அதிகமாக உழைக்கத் தயாராகும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

பணவரவு திருப்திதரும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரலாம்.

வெற்றிபெற தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப் படி செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்:

வினாயகருக்கு அறுகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

வைகாசி, ஆடி, தை.

அவிட்டம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினான்காம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

சுறுசுறுப்பு அதிகம் கொண்ட அவிட்ட நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரியானுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகி நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.

எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சூரியன், சந்திரன், செவ்வாய்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆடி, கார்த்திகை, தை.

சதயம்

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதின்மூன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

உழைப்புக்கு அஞ்சாத சதய நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது.

பேச்சில் நிதானத்தைக் கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. பெண்களுக்கு பணவரவு கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். கலைத்துறையினர் வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைள் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினர் ஆயுதங்களைக் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்:

சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், புதன், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வியாழன்

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஆனி, புரட்டாசி, மார்கழி.

பூரட்டாதி

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பன்னிரெண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

பிள்ளைகள் மீது அதிக கவனம் கொண்டிருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது. இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.

நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவச் செலவு உண்டாகலாம். வயிற்று சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரியானுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.

உத்திரட்டாதி

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினொன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

செயல்களில் வேகம் கொண்டுள்ள உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும்.

கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும்.

வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும்.

தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

புதன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஐப்பசி, தை, மாசி.

ரேவதி

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பத்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

பலன்:

நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்குப் பிறகே செய்ய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சைத் தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம்.

பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரையொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். கலைத்துறையினர் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்:

புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், புதன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.

தமிழ் வருடப்பிறப்பு: விசாகம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை..... அதிர்ஷ்டமா?

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...