இந்த ஐந்து ராசிக்காரர்களும் பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது ரொம்ப கடினமாகுமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

12 ராசிக்காரர்களில் பொய் கூறினால் உடனே கண்டுபிடிக்கும் திறமை கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரரிடம் பொய் கூற சென்றால் உங்களுக்கு வாழ்த்து சொல்லித்தான் அனுப்ப வேண்டும். இவர்கள் மனித உருவில் இருக்கும் பொய்யை கண்டுபிடிக்கும் கருவிகள் ஆவர்.

கன்னி ராசிக்காரர்கள் கூர்மையான புத்திக்கூர்மை கொண்டவர்கள், மேலும் வேடிக்கை மற்றும் தீர விசாரிப்பது இவர்களின் முக்கியமான குணங்களாகும்.

எனவே நீங்கள் எந்த பொய் கூற முயற்சித்தாலும் அவர்கள் அதனை எளிதில் கண்டறிந்து விடுவார்கள். இவர்களின் கண்களே ஒரு சோதனை குழாய்தான் அதனை வைத்தே மற்றவர்களின் பொய்யை கண்டுபிடிப்பது இவர்களுக்கு மிகவும் எளிதானதாகும்.

மிதுனம்

சிறந்த பேச்சாளர்களிடம் பொய் கூற முடியுமா? அப்படி கூறினால் அது மிகவும் வேடிக்கையானதாகத்தான் இருக்கும்.

இவர்களுக்கு மற்றவர்கள் கூறுவது பொய் என்று சிறிய சந்தேகம் வந்தாலும் அவர்கள் வாயாலேயே உண்மையை கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி கேட்பதில் மட்டும் கேட்கும் பதிலை பகுப்பாய்வதிலும் இவர்கள் சிறந்தவர்கள். எனவே எதாவது கதை சேர்த்து கூறினாலும் இவர்கள் எளிதில் தெரிந்து கொள்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரரிடம் ஒருபோதும் பொய் கூற முயற்சிக்காதீர்க்ள ஏனெனில் அது உங்களுக்கு சாதகமாய் அமையாது. பொய் கூறுவதை கண்டறிய இவர்களுக்கு அதிக நேரம் எடுக்காது.

விவேகமும், துப்பறியும் குணமும் இவர்களுக்கு கூடவே பிறந்தது. சந்தேகம் இவர்களுக்குள் எழுந்து விட்டால் உண்மையை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் துப்பறிவதை நிறுத்த மாட்டார்கள்.

அதற்காக எவ்வளவு நேரத்தையும், ஆற்றலையும் செலவிட தயங்க மாட்டார்கள். நீங்கள் பொய் கூறியதை அவர்கள் கண்டுபிடித்து விட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

மகரம்

இவர்கள் பொய்யை எளிதில் கண்டறிய காரணம் இவர்கள் அதீத நேர்மையாய் இருப்பதுதான், அதனால் அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் முகபாவனைகளை கூட நன்றாக கவனிப்பார்கள் அதனால் எளிதில் பொய்யை விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர்கள் மற்றவர்களையும், அவர்கள் கூறுவதையும் நம்ப அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் கண்களை பார்த்து பேசுவார்கள், அவர்கள் அதனை முறித்துக்கொண்டால் இவர்கள் சந்தேகப்பட தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு உங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டால் நீங்கள் அதனை விளக்கியே தீரவேண்டும் இல்லையென்றால் பிரச்சினைதான்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் பொய் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடுவார்கள், அதற்கு காரணம் அவர்களின் புத்திக்கூர்மையும், கவனிக்கும் ஆற்றலும்தான். கேட்கும் கேள்விகளுக்கு மாற்றி மாற்றி பதில் சொல்வது, விலகியே நிற்பது போன்றவற்றை வைத்தே இவர்கள் எளிதில் பொய் கூறுவதை கண்டறிந்து விடுவார்கள்.

இவர்கள் பொய்யை கண்டுபிடித்தால் கூட அதற்காக பழிவாங்க மாட்டார்கள் மாறாக அவர்களை மன்னிக்கவே முயலுவார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்