இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்று 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்

வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு நல்ல மாற்றமான சூழல்கள் உருவாகும். உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

வீடு, மனை அபிவிருத்தியினால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களால் நல்ல காரியங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

திருமணப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் உங்களுக்கான மதிப்புகள் உயரும்.

பெரியோர்களின் உபதேசங்கள் மூலம் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தலைமைப் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள். ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மிதுனம்

புதிய நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகள் நீங்கள் நினைத்தபடி பலன்களைக் கொடுக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்

கணவன், மனைவிக்கு இடையே இருக்கின்ற உறவு மேம்படும். விளையாட்டு சம்பந்தப்பட்ட துறையில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

பணியில் நீங்கள் எடுத்த செயலை முடித்துக் காட்டுவதில் உங்களுடைய செல்வாக்கு உயரும். சின்ன சின்ன பயணங்களின் வழியாக உங்களுக்கு பெரும் மாற்றம் ஏற்படும்.

எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

வெளியிடங்களுக்கு சுற்றுலாக்கள் செல்வதற்கு திட்டத்தை வகுப்பீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை.

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகள் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

கன்னி

தொழிலில் உங்களுடைய மேன்மைக்காக புதிய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.

மனதுக்குள் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மனம் மகிழ்ச்சி ஏற்படும். சமூக சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞசிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கூடுதல் கவனம் செலுத்தப்பட் வேண்டும். வியாபாரங்கள் தொடர்பான வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத சுப செய்திகளின் மூலமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

முக்கியப் பணிகளில் உள்ளவர்களிடம் சக பணியார்களிடம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவினால் நல்ல சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உங்களுடைய நீண்ட நாள் நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான சூழல்கள் உருவாகும்.

ஆன்மீக வழிபாட்டில் மனம் லயிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு

இணைய தளங்கள் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுக்குள் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சொந்த ஊருக்கு சென்று வருவதன் மூலம் நல்ல மன மாற்றங்கள் உண்டாகும்.

தொழில் மேன்மைக்கான புதிய முயற்சிகள் நீங்கள் நினைத்த பலன்களைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் செய்கின்றவர்களுக்கு உங்களுடைய முயற்சிகளின் மூலம் லாபங்கள் உண்டாகும்.

சுய தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்பட்டு வந்த பண சிக்கல்கள் தீரும் சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும்.

உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலம் நட்பு பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்

அலைச்சலிகளின் மூலமாக வியாபாரத்தில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் அமைதியுடன் இருப்பது நல்லது.

விலையுயர்ந்த பொருள்களை கையாளுவதில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் பொருள் தேக்க நிலை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பலவண்ண நிறங்களும் இருக்கும்.

மீனம்

தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளுடன் இணைந்து செய்கின்ற காரியங்களால் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்களுக்குக் கல்வியில் சாதகமான சூழல் உருவாகும். சர்வதேச தொழில் பயண்ஙகள் மூலம் நீங்கள் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்