இன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...

Report Print Abisha in ஜோதிடம்

இன்றைய தினத்தில் 12 ராசிக்கும் எப்படி நாள் அமையும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.

 • தெய்வீக திருப்பணிகளிலும் ஆன்மீக காரியங்களிலும் மனம் அதிகமாக ஈடுபடும்.
 • நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி அடைந்தாலும் மனக் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
 • எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதை ஆட்கொள்ளும்.
 • குழந்தைகளைப் பற்றிய கவலைகள் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
 • சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்ல பலன்களைத் தரும்.
 • சுபகாரிய முயற்சிகள் மற்றும் திருமண முயற்சிகள் காலதாமதமானாலும் வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

 • நீங்கள் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.
 • அடுத்து வரும் இரு நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பின்வரும் இரண்டு நாட்களில் நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தையும் இன்று முடித்துக் கொள்வது நல்லது.
 • புதிய முயற்சிகள் எதையும் பின்வரும் இரண்டு நாட்களுக்கு துவக்க வேண்டாம்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 • கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதையும் உண்டாகும்.
குறிப்பு: முருகப்பெருமானின் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும்.

 • குடும்பத்தில் சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
 • கணவன் மனைவி ஒற்றுமை சற்று பிரச்சினையுடன் கூடியதாக இருந்தாலும், பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • உடல் ஆரோக்கியம் சமமாக இருந்து வரும்.
 • சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும். அவைகளில் நல்ல முடிவை எட்டுவீர்கள் கல்வி நன்றாக இருக்கும்.
 • குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொண்டு விலகும்.
 • குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று மனக் கசப்புகள் ஏற்பட்டாலும், நாளை சரியாகிவிடும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பெயரை பெறுவார்கள்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.
 • நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டுதனவரவு இருக்கும்.
 • குழந்தைகள் கல்விகளில் மேல் நிலையை அடைவார்கள்.
 • குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும்.
 • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.
 • வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.
 • குடும்ப ஒற்றுமை மேம்படும் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.
 • வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் கல்வி மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அச்சமும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.
 • வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இடமாற்றத்தை பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும்.
 • விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
குறிப்பு: அம்மன் வழிபாடு ஆக்கம் தருவதாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தருவதாக இருக்கும்.

 • எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.
 • உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும்.
 • புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள்.
 • கூட்டுத் தொழில் ஆதாயம் தருவதாக அமையும்.
 • திருமணம் மற்றும் சுபகாரியங்கள் வெற்றியில் முடியும்.
 • பெண்களுக்கு தேவையான ஆடை ஆபரணச் சேர்க்கை நாளாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு இனிய நாளாக இருக்கும்.

 • நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
 • முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 • மாணவர்களின் கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு.
 • கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
 • காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு.
 • அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலமாக இன்றைய நாள் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களுக்கு உங்கள் ஜென்ம ராசியிலேயே சந்திரன் அமைந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகச் சேர்க்கை ஆகும்.

 • தன வரவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 • புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
 • வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டைப் பற்றிய சிந்தனைகள் இருக்கும்.
 • குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
 • நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையும் அவர்களால் செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு.
 • கலைத்துறை பத்திரிக்கைத்துறை மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும், வெற்றி காண்பீர்கள்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் அதிகபட்ச அலைச்சலை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

 • புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவது முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் சற்று குழப்பம் காணப்படும்.
 • மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.
 • குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.
 • கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும்.
 • நண்பர்களால் செலவுகளும், அலைச்சலும் வர வழி உண்டு.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனைத்துமே சற்று அதிகமாக இருந்தாலும், அவைகளில் வெற்றி காண்பார்கள்.

மகரம்

மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவும், தனவரவை கொடுக்கக்கூடிய நாளாகவும் அமையும்.

 • காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு.
 • புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
 • திருமண முயற்சிகள் வெற்றியடையும்.
 • இனிமையான கனவுகள் வந்து செல்லும்.
 • சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் அடைவீர்கள்.
 • உடல் நலம் நன்றாக இருக்கும். உணவுத்துறை அவற்றில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக அமையும்.

 • உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் ஓம் சந்திரனும் சஞ்சாரம் செய்வது தொழில் ஸ்தானத்தை விரிவு படுத்துவதாக இருக்கும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
 • ஊதிய உயர்வு இருக்கும்.
 • குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வி மேம்படும்.
 • கணக்குத் துறை தகவல் தொழில்நுட்பத் துறை அரசுத்துறை சுற்றுலாத்துறை வாகனத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.
 • நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே அமையும்.

 • வாகன வகையிலும் சொத்து வகையிலும் ஆதாயம் உண்டு.
 • புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.
 • வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
 • எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும்.
 • நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்யக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
 • மாணவர்களுக்கு கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்