இன்றைக்கு இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும் பொருளும் சேர போகுதாம்

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

புனித யாத்திரைகள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெற்றோர்களுடைய உடல் நிலை சீராகும். நீண்ட கால நண்பர்களைச் சந்திப்பதன் மூலமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான சூழல்கள் உருவாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

வீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய் வழியிலான உறவுகளினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும்.

மனதுக்குள் ஒருவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

மூலிகை சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மனக் குழப்பங்கள் நீங்கும்.

புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்

உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

மறைமுகமாக வரும் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். தொழில் வளம் பெருக ஆரம்பிக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

வணிகத்தின் மூலமாக நீங்கள் எதிர்பாரத லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முழு வாய்ப்புகளும் உண்டாகும். பொதுப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். இணைய தளம் சம்பந்தப்பட்ட பணிகளில் நல்ல லாபங்கள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் பல தடைகளுக்குப் பிறகு நடந்து முடியும்.

சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்

வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும்.

குடும்பத்தில் சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எண்ணிய செயல்களால் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகளும் தாமதங்களும் அகல ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த தன வரவுகள் கிடைக்க கால தாமதமாகும்.

இளைய உடன் பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

வேலை செய்யும் இடங்களில் மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.

நண்பர்களின் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களினால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மகரம்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவுறும். உங்களுக்கு நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய இழுபறியான செயல்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய திருமண முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த எண்ணங்களினால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மீனம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதில் புதிய புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

தன வரவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்