இந்த வார ராசிபலன்கள்(26.05.2019 முதல் 01.06.2019 வரை): எந்த ராசிக்கு யாருக்கு லாபம்?

Report Print Kavitha in ஜோதிடம்

இந்த வாரம் 26.05.2019 முதல் 01.06.2019 வரை) எந்த ராசிக்கு நன்மை? தீமை என்று பார்ப்போம்.

மேஷம்

இந்த வாரத்திய கிரஹ நிலை உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். கௌரவத்திற்காக செய்யும் செலவுகள் உயரும். செலவுகளால் சேமிப்பு கரையும்.

முக்கியமான பணிகளில் நேரடியாக இறங்காமல் தகுதியான நபர்களின் துணையோடு செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரலாம். பகல் பொழுது உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பண விவகாரங்களைக் கையாளுவது நல்லதல்ல.

அடுத்தவருக்கு உதவ முற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பெற்றோருடன் வீண் மனஸ்தாபம் தோன்றக்கூடும்.

உறவினர்களை சமாளிப்பதில் சிரமம் காண்பீர்கள். பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவுகள் தோன்றும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும்.

கலைத்துறையினரின் படைப்பு வெற்றி பெறும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் வீண் பழியைச் சுமக்க நேரிடும். சங்கடங்களை சமாளித்து வெற்றி காண வேண்டிய வாரம் இது. சண்டிகேஸ்வரரை வழிபடுங்கள்.

ரிஷபம்

இந்த வாரத்திய கிரஹ நிலை உங்களை திறம்பட செயலாற்றச் செய்யும். இதுநாள் வரை கண்டு வந்த காரியத்தடை விலகும். நினைத்த காரியங்களை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். செலவுகள் கூடுவதால் சேமிப்பு கரையலாம். அதிகம் பேசாமல் அமைதியாகப் பணி செய்ய வேண்டியது அவசியம்.

குடும்பத்தினர் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதாக உணர்வீர்கள். உறவினர்கள் இல்ல விசேஷங்களில் முக்கியப் பொறுப்புகளைச் சுமக்க நேரிடும்.

ருசியான உணவு வகைகளை அதிகம் விரும்புவீர்கள். அண்டை அயலார் வீட்டுப் பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு காண்பீர்கள்.

தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். கௌரவத்திற்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்கள் உங்கள் பணிகளுக்குத் துணையிருப்பர்.

கலைத்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் போட்டி, பொறாமையால் அநாவசிய பிரச்னையை சந்திக்க நேரும். சரிசம பலன்களைத் தரும் வாரம் இது. சூரிய நாராயணனை வழிபடுங்கள்.

மிதுனம்

இந்த வாரத்தில் உங்கள் செயல்திறன் கூடும். அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் உங்கள் காரியத்தில் கண்ணாய் இருப்பீர்கள். வாரத்தின் பிற்பாதியில் சிறப்பான பொருள் வரவு கிட்டும். அடுத்தவர் வீட்டுப் பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு காண நேரிடும்.

சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். குடியிருக்கும் வீட்டினை அலங்கரிக்க ஒரு சில மாற்றங்களைச் செய்ய நேரிடும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயர்வடையும்.

சிந்தனையில் இருப்பதை செயல்படுத்துவதில் அதிக தயக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபித்து முன்னுரிமை பெறுவர்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த தனலாபமும் வெற்றியும் இந்த வாரத்தில் வந்து சேரும். நன்மை தரும் வாரம் இது. துர்கையம்மனை வழிபடுங்கள்.

கடகம்

இந்த வாரத்திய கிரஹ நிலை சற்று சிரமத்தைத் தரக்கூடும். கடுமையான அலைச்சலுக்கு ஆளாவீர்கள். திட்டமிட்டிருக்கும் பணிகளை செய்து முடிப்பதில் படபடப்புடன் செயல்படுவீர்கள்.

வாரத்தின் துவக்கத்தில் சுபவிரயம் உண்டாகும். எந்த ஒரு பணியும் எளிதில் முடிவிற்கு வராது இழுபறியைத் தரும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.

செலவுகளைச் சமாளிக்கும் வகையில் பணவரவு நன்றாக அமையும். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரும். வாழ்க்கைத்துணையோடு வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும்.

கலைத்துறையினர் தொழில்முறையில் ஏற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரின் ஒத்துழைப்பின்றி சிரமத்தினைக் காண்பர். சரிசம பலன்களைத் தரும் வாரம் இது. அனுமனை வழிபடுங்கள்

சிம்மம்

நவக்ரஹங்களின் சாதகமான சஞ்சார நிலை இந்த வாரத்தில் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கிறது. வாரத்தின் முற்பாதியில் மும்முரமாகப் பணியாற்றும் நீங்கள் பிற்பாதியில் சற்று ஓய்வாக அமர்ந்து உங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பீர்கள்.

திட்டமிட்டுச் செயலாற்றுவதால் எதிர்பார்க்கும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு சாதகமாக உள்ளது. அதிகாரமான வார்த்தைகளை அன்போடு பிரயோகித்து அடுத்தவர்களை அழகாக வேலை வாங்குவீர்கள்.

செல்போன், கம்ப்யூட்டர் முதலான சாதனங்களின் உபயோகத்தினைக் கற்றுக்கொள்வீர்கள். வீட்டினில் ஃபர்னிச்சர் சாமான்கள் சேரும். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பினைப் பெறுவர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் நிர்வாகத் திறமையின் மூலம் தனித்துவம் பெறுவர். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது. லக்ஷ்மிகுபேரனை வழிபடுங்கள்.

கன்னி

இந்த வாரத்திய கிரஹ நிலை உங்களை திறமையாகச் செயல்பட வைக்கும். இடம், பொருள் அறிந்து உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். எதிரில் உள்ளவர்களின் மன நிலையை எளிதில் புரிந்துகொண்டு அவரவருக்கு தகுந்தாற்போல் சாதகமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும்.

செலவினை சமாளிக்கும் வகையில் பண வரவு அமையும். வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும் உங்கள் காரியத்தில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரலாம்.

அவ்வப்போது மனதில் தோன்றும் கற்பனையான எண்ணங்கள் வீண் பயத்தைத் தருவதோடு உடல்நிலையிலும் சிரமத்தை உண்டாக்கும். ஒற்றைத்தலைவலி, பித்தம், உடல்அசதி ஆகியவற்றால் அவதிப்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு செலவு கூடினாலும் மனதில் திருப்தி கிட்டும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய பதவியை இந்த வாரத்தில் அடைவர். திறமையினால் முன்னேறும் வாரம் இது. கருமாரியம்மனை வழிபடவும்.

துலாம்

இந்த வாரத்தில் நெருங்கிய நபர்களால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். துரோகம் இழைப்போரைக் கண்டு மனம் வருந்துவீர்கள். குடும்பத்தில் நிலவும் சலசலப்பினைப் போக்க முயற்சிப்பீர்கள். குடும்ப விவகாரங்களில் அந்நியரின் தலையீட்டினைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வரவு நிலை நன்றாக இருந்தாலும் செலவுகள் கூடும்.

சேமிப்பில் தடை உண்டாகும். உடன்பிறந்தோருடன் வீண் மனஸ்தாபம் தோன்றும். உறவினர் இல்ல விசேஷத்தில் முக்கியமான பொறுப்பினை சுமக்க நேரும். கடன் கொடுக்கல் வாங்கலில் நெருங்கிய நண்பருடன் வீண் பிரச்னை தோன்றும். முன்பின் தெரியாத நபர்களால் சங்கடங்கள் உருவாகும்.

தம்பதியருக்குள் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். கலைத்துறையினர் தொழில்முறையில் தடைகளைச் சந்திக்க நேரும். உத்யோகஸ்தர்கள் அதிக அலைச்சலைக் காண்பர். தடைகளைத் தாண்டி வெற்றி காண வேண்டிய வாரம் இது. தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

விருச்சிகம்

இந்த வாரத்தில் இனம்புரியாத காரணத்தால் சற்று விரக்தியான மன நிலைக்கு ஆளாவீர்கள். இழுபறியில் இருந்து வரும் காரியங்களுக்கு உங்கள் தனித்திறமையின் மூலம் முடிவிற்குக் கொண்டு வருவீர்கள். அதே நேரத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் சிரமம் தோன்றும்.

குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதாக உணர்வீர்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்படும் முயற்சி பயனற்றுப் போகும். முற்பகலில் பண வரவும் பிற்பகலில் செலவும் தொடரும். குடும்ப விவகாரங்களில் அந்நியரின் தலையீட்டினால் பிரச்னைகள் பெரிதாகலாம்.

உங்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று முன்வருபவர்களால் தேவையற்ற சங்கடத்தினை சந்திப்பீர்கள். ஞாயிற்றுக்கிழமையில் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது.

தம்பதியராக இணைந்து செய்யும் வேலைகள் வெற்றி அடையும். கலைத்துறையினர் கடும் போட்டியால் கவலை கொள்வர். உத்யோகஸ்தர்கள் அலுவல் கோப்புகளைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. தடையினைத் தாண்டி வெற்றி காணும் வாரம் இது. கந்தபெருமானை வழிபடுங்கள்.

தனுசு

கடந்த சில நாட்களாக சற்று தடுமாற்றம் காணும் நீங்கள் இந்த வாரத்தில் சாதகமான சூழலைக் காண்பீர்கள். மனதில் உற்சாகம் பெருகும். புதன், வியாழன் ஆகிய இருநாட்கள் தவிர மற்ற நாட்கள் முழுமையான வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பொருளாதார நிலை சீராக உயர்ந்து வரும். சொல்ல நினைக்கும் கருத்துக்களை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள்.

அநாவசிய செலவினைக் குறைப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். இந்த வாரத்தில் உறவினர் இல்ல விசேஷத்திற்காக வெளியூர் பிரயாணம் செல்ல நேரிடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கலைத்துறையினரின் கற்பனைகள் பாராட்டினைப் பெறும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் அனுசரணையான அணுகுமுறையால் தங்கள் பணிச்சுமையைக் குறைத்துக் கொள்வர். நற்பலன் விளையும் வாரம் இது. ஷீரடி பாபாவை வழிபடவும்.

மகரம்

இந்த வாரத்தில் அதிக நிதானத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். இந்த வாரத்தில் எதிர்பார்ப்புகளையும், ஆசைகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. முக்கியமான பணிகளைச் செய்து முடிக்க வாரத்தில் இறுதி மூன்று நாட்கள் துணை புரியும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பொருளாதார நிலை சீராக அமையும். கடன் பிரச்னைகள் சற்றே தலையெடுக்கும். யாரைத்தான் நம்புவது என்று எல்லோர் மீதும் ஒரு வித சந்தேக எண்ணம் தோன்றும்.

பிள்ளைகளின் சுறுசுறுப்பினைக் கண்டு மனதின் மூலையில் ஒருவித அச்சம் தோன்றும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குத் துணையிருப்பார்.

கலைத்துறையினரின் படைப்புகள் அங்கீகாரம் பெறும். உத்யோகஸ்தர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளைச் செய்து முடித்தாலும் அதற்குரிய ஆதாயம் கிடைப்பதில் இழுபறியைக் காண்பர். தேவையற்ற மனக்கலக்கத்தினால் சற்றே தடுமாற்றம் காணும் வாரம் இது. ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கும்பம்

இந்த வாரத்தில் சாதகமான பலன்களைக் காண உள்ளீர்கள். ராசிநாதன் சனியின் பலம் சுறுசுறுப்பாக செயல்படவைக்கும். உங்கள் மனதில் தோன்றுவதைத் தயக்கமில்லாமல் செய்வதன் மூலம் நினைத்த காரியத்தில் சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு சிறப்பாக அமையும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கு அம்சங்களை மனம் விரும்பும்.

நண்பர்களால் உண்டாகும் கலகத்தினை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைத்துறையினரின் நீண்ட நாள் ஆசை ஒன்று இந்த வாரத்தில் நிறைவேறும். வரும் சனிக்கிழமையன்று உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தம்பதியர் இணைந்து செயல்படும் காரியங்களில் சிறப்பான வெற்றி கிட்டும்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் மதிப்புயரக் காண்பர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வாரம் இது. மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்

இராசிநாதன் குரு பகவானின் பார்வை பலம் உங்களுக்கு வளர்ச்சியைத் தரும். சுகமான சூழலை அனுபவிப்பீர்கள். கடந்த சில வாரங்களில் தடைபட்டு வந்த காரியங்கள் மெல்ல நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகளைக் களைய முயற்சிப்பீர்கள்.

கடன்பிரச்னைகள் சற்றே தலையெடுப்பதால் பொருளாதார சிக்கல் தொடரும். தைரியம் நிறைந்த பேச்சு உங்கள் நேர்மையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்.

உறவினர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் வழியில் 30, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் செலவினை சந்திப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சம்பந்தமில்லாத விவகாரங்களில் வீண்பழி சுமக்க நேரலாம். கலைத்துறையினருக்கு பேசும் வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை. நற்பலன்களைக் காணும் வாரம் இது. கண்ணபிரானை வழிபடுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்