2019 ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவருக்கு தான் திடீர் லாபம் கிடைக்க போகுதாம் ?

Report Print Kavitha in ஜோதிடம்

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்களின் யாருக்கும் நன்மை, யாருக்கு தீமை என்று பார்க்கலாம்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நாம் நினைத்த காரியத்தை தைரியமாக செயல்படுத்த நினைக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது.

காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை.

வியாபாரம் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும்.

பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: தினமும் சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கும் திறன் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பெண்கள் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் சந்திர ஹோரையில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனக்கஷ்டத்தை வெளிக்காட்டாமல் அன்பை மட்டும் வெளிப்படுத்தும் குணம் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம்.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மனமகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கடன் பிரச்சனை தீரும். அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குருவை வியாழக்கிழமை அன்று வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிறர் செய்த குற்றங்களை தைரியமாக சுட்டிக்காட்டும் நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.

பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றி அமைத்துக் கொள்ளும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும்.

பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும்.

பெண்களுக்கு தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

செய்ய நினைப்பதை தெளிவாகவும் கவனமாகவும் செய்யும் ஆறாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்கள் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும்.

சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது பக்கபலமே எனது குடும்பம் தான் என்ற எண்ணம் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவர்களால இருந்து வந்த வீண் பிரச்சனைகள் அகலும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும். எடுத்த முயற்சிகளில் இருந்து வந்த தாமதப் போக்கு மாறும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். தேவையற்ற இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பாடுபட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும்.

மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும்.

பெண்களுக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மற்றவர்களிடம் அன்பை மட்டுமே காட்டும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெற்றோர் வழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்குரு கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers