ஆனி மாத ராசிப்பலன்கள் 2019 : மேஷம் முதல் துலாம் வரை... யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆனி மாத ராசிப்பலன்களில் எந்த ராசிக்கு நன்மை, தீமை என்று பார்ப்போம்.

மேஷம்

இந்த மாதம் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். முக்கிய கிரகங்களில் 3ல் இருக்கும் ராகு தொடர்ந்து நன்மை தருவார்.

சுக்கிரன் ஜூன் 29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன்24 வரை மிதுனத்தில் இருந்து முன்னேற்றம் கொடுப்பார். அதன் பிறகு கடகத்திற்கு மாறுவதால் நன்மை குறையும்.

குரு 8ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அவர் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.

வீண்விரோதத்தை உருவாக்குவார். ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.

குடும்பத்தில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. ஜூன் 29க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

ஜூன் 27,28,29ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 22,23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்கள் சிறப்பான பலன் பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன் 29க்குள் கேட்டு பெறவும். சுக்கிரனால் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவியும் தேடி வரும். ஜூன் 20,21 சிறப்பான நாளாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் அடைவர். சுக்கிரனால் ஜூன் 29 வரை அரசின் சலுகை கிடைக்கும். அதன் பின் புதனால் அரசு வகையில் பிரச்னை வரலாம். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். ஜூலை 8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் அடைவர். சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தை பெறுவர்.

மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் சிரத்தை எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்கப் பெறலாம். குறிப்பாக நெல்,கோதுமை, சோளம், மானாவாரி பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்கும். கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. ஜூன் 24க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவீர்கள். கணவனின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு விரையில் பூர்த்தியாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,27,28,29, ஜூலை 3,4,8,9,10,11,12

கவன நாள்: ஜூன் 16,17, ஜூலை 13,14

அதிர்ஷ்ட எண்: 1,9

நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம் - வெள்ளியன்று துர்கை வழிப்படுதல், செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம் செய்தல், புதன் பகவானை வழிபட்டு நெய்தீபம் ஈடுதல்.

ரிஷபம்

முக்கிய கிரகங்களில் 7ல் உள்ள குரு நன்மை தருவார். சுக்கிரன் ஜூன்29ல் உங்கள் ராசியில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை ஏற்படும். செவ்வாய் ஜூன்24ல் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்.

குரு 7ம் இடத்தில் இருப்பது மிக உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையனைத்தும் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். சூரியன், புதன் 2-ம் இடத்தில் இருப்பதால் சிலர் வீண் அவப்பெயருக்கு ஆளாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம். ஜூன் 24 வரை செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீட்டில் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும். ஜூன் 24க்கு பிறகு பக்தி எண்ணம் மேம்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குறிப்பாக ஜூன்30, ஜூலை1ல் உதவிகரமாக இருப்பர். ஜூன் 25,26ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை 6,7ல் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு குருவால் உத்தியோகம் சிறப்படையும். பதவி உயர்வும் கிடைக்கும். மாத முற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது. ஜூன் 22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன் 24க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூன்29க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர்.

அரசு வகையில் விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். செவ்வாயால் பகைவர்கள் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையிலுள்ள அனுகூலமற்ற போக்கு முதலியன ஜூன் 24க்கு பிறகு மறையும்.

அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன்27,28,29, ஜூலை2,3ல் சந்திரனால் தடைகள் வரலாம். வீண்விரயம் ஏற்படலாம். ஜூலை10,11,12ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உருவாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

விவசாயிகள் கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்களில் அதிக மகசூல் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஜூன் 24க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனியும்.

மாணவர்கள் கல்வியில் சுமாரான வளர்ச்சி காண்பர். உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜூலை 4,5 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.

புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 16,17, ஜூலை13,14ல் சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 24க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் தொல்லை இருக்காது.

நல்ல நாள்: ஜூன் 16,17,22,23,24,25,26,30, ஜூலை 1,4,5,10,11,12,13,14

கவன நாள்: ஜூன் 18,19 ஜூலை 15,16

அதிர்ஷ்ட எண்: 2,3

நிறம்: மஞ்சள், வெள்ளை.

பரிகாரம் - தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்தல் , வெள்ளியன்று ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்தல், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிப்படுதல்.

மிதுனம்

இம்மாதம் சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு நற்பலன் உண்டாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வீண்அலைச்சலும், சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் உடல்நிலை பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருவின் பார்வை பலத்தால் எந்த இடையூறும் விலகும். மந்தநிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

குடும்பத்தில் புதனால் வீட்டில் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சுக்கிரனால் மாத பிற்பகுதியில் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 2,3ல் அதிக நன்மை கிடைக்கும். ஜூன் 27,28,29ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை8,9ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகியிருக்கவும். ஜூலை 6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 24க்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் விரும்பிய இடமாற்றத்தை காணலாம். ஜூன் 25,26ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி மேற்கொள்வீர்கள். ஜூன்24க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைப்பது அரிது. மேலும் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.

ஜூன்30, ஜூலை1,4,5ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும்.

முயற்சியில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு ஜூன் 29க்கு பிறகு மறையும். அதன் பிறகு கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். சகபெண் கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம். சக மாணவர்களிடம் விழிப்புடன் பழகவும். குருவின் பார்வையால் தேர்வில கூடுதல் மதிப்பெண் கிடைக்க பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் போகலாம்.

பெண்கள் வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டுக்குள் விட்டுக் கொடுப்பது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஜூன் 29க்குள் சுக்கிரனால் ஆடம்பர பொருட்கள் சேரும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது.

ஜூன்18,19 ஜூலை15,16 தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். ஜூலை6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம்.

நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,25,26,27,28,29, ஜூலை2,3,6,7,13,14,15,16

கவன நாள்: ஜூன் 20,21 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,8

நிறம்: வெள்ளை, பிரவுன்

பரிகாரம் - திங்கட்கிழமை மாலையில் சிவாலய தரிசனம் செய்தல், செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தல், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிப்படுதல்.

கடகம்

சுக்கிரன் ஜூன்29ல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு வந்து நன்மை தருவார். ராசிக்கு 6ல் உள்ள சனி,கேது நன்மை தருவார்கள். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழலாம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருக்கிறார். இது மிக சிறப்பான நிலை. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஜூலை4,5ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன்30, ஜூலை1ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் ஜூலை 10,11,12ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு. தற்போது உங்களுக்கு பிடிக்காததாக இடமாற்றம் இருந்தாலும், எதிர்காலத்தில் சாதகமானதாக அமையும். ஜூன் 27,28,29ல் சிறப்பான பலனை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டாளிகளின் வகையில் பிரச்னை வரலாம். சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம்.

இருப்பினும் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூன் 29க்கு பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை2,3,6,7ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூன்18,19, ஜூலை15,16 ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூலை 2க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கமும் இருக்கும். ஜூன்16,17, ஜூலை13,14 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிக்கவும். இருப்பினும் குருவால் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காணலாம். நெல், சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக லாபம் காண்பர்.

ஜூலை 8,9ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன்20,21ல் சகோதரவழியில் பணமும், உதவியும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

உங்களால் குடும்பம் சிறப்படையும். செவ்வாயால் ஏற்பட்ட உடல் உபாதைகள் ஜூன் 24க்கு பிறகு மறையும்.

நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,27,28,29,30 ஜூலை 1,4,5,8,9,15,16

கவன நாள்: ஜூன் 22,23,24 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,6

நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம் - ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை போடுதல், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிப்படுதல்,சதுர்த்தியன்று விநாயகர் கோயில் வழிப்படுதல்.

சிம்மம்

ராசிக்கு 11ல் இணைந்து இருக்கும் புதன், சூரியன், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். செவ்வாய் 11ம் இடமான மிதுனத்தில் இருந்து ஜூன் 24வரை நன்மை தருவார். அதன் பின் அவர் கடகத்திற்கு வருவதால் நன்மை தரமாட்டார். சுக்கிரனை பொறுத்தவரை ஜூன் 29க்கு பிறகு மிதுனத்திற்கு மாறி நன்மை தருவார். எனவே சிறப்பான மாதமாக இருக்கும். பொருளாதார வளம் பெருகும்.

கையில் எப்போதும் பணம் புழங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். குரு 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது என சொல்ல முடியாது. குரு மன உளச்சலையும்,அக்கம் பக்கத்தினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். ஜூன் 29க்கு பிறகு பணவரவு அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர்.

குறிப்பாக ஜூலை 6,7ல் அவர்களால் பண உதவி கிடைக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அதே நேரம் ஜூன் 2,3ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூலை10,11,12ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.

அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சகஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜூன்30, ஜூலை1 சிறப்பான நாட்களாக இருக்கும்.

பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் திருப்திகரமான சூழ்நிலையில் இருப்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன்24க்குள் கேட்டு பெறவும்.

தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசின் சலுகை கிடைக்கும்.

வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஜூலை4,5,8ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 20,21ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. சனியின் பாதிப்பால் வாடிக்கையாளர் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

கலைஞர்களுக்கு ஏற்பட்ட எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூன்29க்கு பிறகு மறையும். அதன் பிறகு பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நன்மை அடைவர். அவர்களின் வாழ்வில் வசந்தம் பிறக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். ஜூன்24க்கு பிறகு சுமாரான நிலையில் இருப்பர். ஜூலை18,19ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத முற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்குகளில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. ஜூன் 24க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். கோயில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள். புதிதாக மணமான பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும்.

சிலருக்கு புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். ஜூன் 22,23,24 ஆகியவை நல்ல நாட்களாக அமையும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும்.

ஜூலை10,11,12ல் விருந்து விழா என செல்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருட்கள் வரப் பெறலாம். உடல்நிலை பூரண குணம் அடையும்.

நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,30, ஜூலை1,2,3,6,7,10,11,12

கவன நாள்: ஜூன் 25,26 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7

நிறம்: பச்சை,சிவப்பு

பரிகாரம் - சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்தல், செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம் செய்தல் ,பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபடுதல்.

கன்னி

முக்கிய கிரகங்களில் 10ம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். மேலும் செவ்வாய் ஜூன் 24ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறி நன்மை தருவார். குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருப்பது சுமாரான நிலையே. அவரால் முயற்சியில் தடை ஏற்படும்.

சூரியன் சாதகமாக காணப்படுபவதால் சுகமான வாழ்வு அமையும். பொருளாதார வளம் சிறக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் ஏற்பட்ட திருட்டு, களவு பயம் ஜூன் 24க்கு பிறகு நீங்கும். அதன் பிறகு புதிய வீடு, மனை,வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஜூலை8,9ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும்.

விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 4,5ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன் 18,19,ஜூலை15,16ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலையைக் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. ஜூலை2,3ல் எதிலும் வெற்றி காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். ஜூன் 24க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய பதவியும் தேடி வரும்..

வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவ முன்வருவர்.

குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூன் 22,23,24ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூலை 6,7,10,11,12ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

கலைஞர்கள் முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுக்கிரன் இடம் மாறுவதால் ஜூன் 29க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் தொல்லை, மறைமுகப்போட்டி குறுக்கிடலாம்.

சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூன் 20,21ல் மனக்குழப்பம் ஏற்படலாம். ஜூன் 24க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். பாசிப்பயறு, நெல், சோளம், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். ஜூன்24க்கு பிறகு புதிய சொத்து வாங்க யோகமுண்டு. பக்கத்து நிலத்தால் ஏற்பட்ட பிரச்னை மறையும். வழக்கு,விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பொருளாதார வளம் பெருகும். தொழிலில் லாபம் குறையாது. ஜூன்16,17, ஜூலை13,14ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

ஜூன் 25,26ல் சிறப்பான பலனை காணலாம்.உடல்நிலை சீராக இருக்கும். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் ஜூன் 24க்கு பிறகு பூரண குணம் பெறும்.

நல்ல நாள்: ஜூன் 16,17,22,23,24,25,26, ஜூலை 2,3,4,5,8,9,13,14

கவன நாள்: ஜூன் 27,28,29 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6

நிறம்: சிவப்பு,பச்சை

பரிகாரம் - வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்தல்,சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபடுதல், பவுர்ணமியன்று அம்மன் கோயில் தரிசனம் செய்தல் .

துலாம்

இந்த மாதம் சனி, கேது 3-ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூன் 29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். குருபகவான் 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம்.

அவரால் பிரச்னை அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

கேதுவின் பலத்தால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதன், சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூலை 10,11,12ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.

விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 20,21ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஜூலை6,7ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செவ்வாயால் ஜூன் 24க்கு பிறகு சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு. கவனம் தேவை.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது.

வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். ஜூலை4,5ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். ஆன்மிக சம்பந்தமான பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். புதிய வியாபாரத்தில் ஓரளவு அனுகூலம் உண்டாகும்.

ஜூன்16,17, ஜூலை 8,9,13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்25,26ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். புதனால் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர்.அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே பதவி கிடைக்கும். ஜூன் 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் தீயவர்களுடன் நட்பு கொள்ள வாய்ப்புண்டு. கவனம் தேவை குருவால் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். கல்வியில் சிறப்பான வளர்ச்சி நிலை காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

விவசாயிகள் எள், கரும்பு, மஞ்சள், கேழ்வரகு, சோளம் போன்றவை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பில்லை. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களால் குடும்ப வாழ்வு சிறப்படையும். அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

ஜூன்18,19, ஜூலை15,16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். ஜூன் 27,28,29 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். செவ்வாயால் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.

நல்ல நாள்: ஜூன்18,19,25,26,27,28,29, ஜூலை 4,5,8,9,10,11,12,15,16

கவன நாள்: ஜூன்30, ஜூலை1

அதிர்ஷ்ட எண்: 2,8

நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம் - தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்தல், அஷ்டமியன்று பைரவருக்கு அரளி மாலை போடுதல், சுவாதியன்று நரசிம்மருக்கு நெய்தீபம் ஈடுதல்.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்