ஆனி மாத ராசிப்பலன்கள் 2019 : விருச்சிகம் முதல் மீனம் வரை.... எந்த ராசிக்கு தீடீர் யோகம் தேடி வர போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆனி மாத ராசிப்பலன்களில் மேஷம் முதல் துலாம் வரையுள்ள ராசிப்பலன்களை அடுத்து விருச்சிகம் முதல் மீனம் வரையுள்ள எந்த ராசிக்கு நன்மை, தீமை என்று பார்ப்போம்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கும் புதனால் நன்மை தொடரும். மேலும் 7ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஜூன்29 வரை ரிஷபத்தில் இருந்து சுமாரான பலனைத் தருவார்.

அதன் பின் அவர் மிதுனத்திற்கு மாறி நன்மை கொடுப்பார். இதனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.

குருபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என சொல்ல முடியாது. குரு1ம் இடத்தில் இருக்கும் போது கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக சொல்வதுண்டு. ஆனாலும் கவலைப்பட வேண்டாம்.

குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வையால் யோகபலன் உண்டாகும்.

குடும்பத்தில் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

புத்தாடை, அணிகலன்கள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஜூன் 16,17,ஜூலை13,14ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணம் கிடைக்கும். ஜூன் 22,23,24ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

ஆனால் ஜூலை 8,9ல் உறவினர் வருகையும், அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஜூலை 6,7ல் எதிர்பாராத நற்பலன் உண்டாகும்.

முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். ஜூன் 29க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. பொருட்கள் களவு போகலாம்.

ஜூன்29 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஜூன்18,19,ஜூலை10,11,12,15,16ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 27,28,29ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை ஜூன்29க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் முடிவு சாதகமாக அமையும். ஜூன்25,26ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்கவும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். குருவின் பார்வையால் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும்.

ஜூன்20,21ல் அனுகூலமான பலன் ஏற்படும். ஜூன்30, ஜூலை1ல் விருந்து, விழா என செல்வீர்கள். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் ஜூன் 24க்கு பிறகு மறையும்.

நல்ல நாள்: ஜூன்16,17,20,21,27,28,29,30 ஜூலை 1,6,7,8,9,13,14

கவன நாள்: ஜூலை 2,3 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,6

நிறம்:பச்சை, வெள்ளை

பரிகாரம் - ஞாயிறன்று சூரியனுக்கு கோதுமை தானம் செய்தல், சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்தல், வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய் தீபம் ஈடுதல்.

தனுசு

இந்த மாதம் சந்திரனால் பெரும்பாலான நாட்கள் நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும்.

ஆனால் சனியின் 3-ம் இடத்துப்பார்வையால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். சனிபகவான் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.

குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம், வீண் அலைச்சல் ஏற்படலாம். சூரியனாலும், செவ்வாயாலும் தடைகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன் 18,19, ஜூலை15,16ல் பெண்களால் நன்மை ஏற்படும்.

அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 25,26ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஜூலை10,11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் என்பதால் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஆனால் அதற்குரிய வருமானம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.

பணி விஷயமாக வெளியூரில் தங்கும் நிலை ஏற்படலாம். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஜூலை 8,9ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். ஜூன்30, ஜூலை1ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.

பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஜூன்16,17,20,21 ஜூலை13,14ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயர், பணஇழப்பை சந்திக்க நேரலாம்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூன் 29க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டும். ஜூன் 27,28,29ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் கவனம்.

மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற நற்பலன் காண்பர். அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டுதலை ஏற்பது எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள் சீரான மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது, புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற தாமதம் ஆகலாம். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படலாம்.

பொறுமையும், நிதானமும் தேவை. திடீர் இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் 22,23,24 அனுகூலமான நாட்களாக அமையும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

ஜூலை 2,3ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். சனியால் வெளியூர் பயணம், வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

உடல்நிலை சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். செவ்வாயால் ஜூன் 24-ந் தேதிக்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற இடர்பாடுகள் வரலாம்.

நல்ல நாள்: ஜூன்18,19,22,23,24,30 ஜூலை1,2,3,8,9,10,11,12,15,16

கவன நாள்: ஜூலை4,5 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,2

நிறம்: ஊதா, வெள்ளை

பரிகாரம் - சனியன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல், வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஈடுதல், பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு மாவிளக்கு போடுதல்

மகரம்

இந்த மாதம் குரு, ராகு சாதகமாக இருந்து சிறப்பான பலனைத் தருவர். சூரியன், புதன் இணைந்திருந்து நன்மையளிப்பர். செவ்வாய் ஜூன்24 வரையும், சுக்கிரன் ஜூன்29 வரையும் சுபபலன் அளிக்க காத்திருக்கின்றனர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.

குருபகவான் 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் ஆகும். முயற்சியில் வெற்றியளித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார்.

குடும்பத்தில் புதனால் நினைத்தது நிறைவேறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். மாத முற்பகுதியில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. ஜூன் 20,21ல் பெண்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும்.

ஜூன் 27,28,29ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன்24க்கு பிறகு செவ்வாயால் மனைவி வகையில் தொல்லை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரால் பிரச்னை வரலாம்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர்.

போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூன் 24க்கு பிறகு செவ்வாய் 7ம் இடத்தில் இருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். ஜூலை 10,11,12ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும்.

வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஜூலை2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜூன் 18,19,22,23,24, ஜூலை15,16ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூன் 29க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். சக பெண் கலைஞர்களால் உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். ஜூன்24க்கு பிறகு வீண்அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஜூன்30, ஜூலை1ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பெயர் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடப்பிரிவில் சேர இடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க யோகமுண்டு.

விவசாயிகள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானமும் கிடைக்கும். மானாவாரிப் பயிர்கள், நெல், மஞ்சள், பழவகைகள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக ஆதாயம் வரும். கால்நடை மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.

ஜூன் 25,26 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். ஜூலை4,5ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ஜூன்24 க்கு பிறகு பிறரது உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். உடல்நிலை மேம்படும்.

நல்ல நாள்: ஜூன் 16,17,20,21,25,26, ஜூலை 2,3,4,5,10,11,12,13,14

கவன நாள்: ஜூலை 6,7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்:1,7,9

நிறம்: பச்சை,மஞ்சள்

பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்தல், வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு செய்தல், ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை போடுதல்.

கும்பம்

இந்த மாதம் சனி, கேது 11-ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூன்29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன் 24க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம்.

குருபகவான் 10ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் நற்பலன்களை தர முடியாது. பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.

குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் இடையூறுகளை உடைத்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள்.

குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜூன் 29க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

மனதில் பக்தி உயர்வு மேலோங்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் வீண் அலைச்சல் ஏற்படலாம். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.

கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன்22,23,24ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். ஜூன்18,19, ஜூலை15,16ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

முக்கிய பொறுப்புகளை அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். அலைச்சலும், பணிச்சுமையும் அதிகரிக்கும்.

ஜூன்29,30ல் சிறப்பான பலனைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன்24க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலம் தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலைத் தொடங்கலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படும். ஜூன்20,21,27,28,29ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

ஜூலை4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். சனிபகவானால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி ஜூன் 24க்கு பிறகு கிடைக்கும்.

மாணவர்கள் குருவால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

விவசாயிகளுக்கு மஞ்சள், நெல், கேழ்வரகு, கரும்பு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். ஜூன்24க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும்.

பெண்களுக்கு உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புறக்கணித்தவர் கூட உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். ஜூலை6,7 நல்ல நாட்களாக அமையும்.

சகோதரவழியில் உதவி கிடைக்கும். ஜூன்27,28,29ல் விருந்து, விழா என செல்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஜூன்24க்கு பிறகு குடும்பத்தில் நற்பெயர் உண்டாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. தோழிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.

நல்ல நாள்: ஜூன்16,17,18,19,22,23,24,27,28,29 ஜூலை 4,5,6,7,13,14,15,16

கவன நாள்: ஜூலை 8,9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 6,7

நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம் - தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்தல், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம் செய்தல், சனிக்கிழமையில் கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஈடுதல்.

மீனம்

இந்த மாதம் சுக்கிரன், புதன் நன்மை தருவார்கள். குரு தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். செயலில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக உள்ளதால் அதன் மூலமும் நற்பலன் கிடைக்கும். முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் சுக்கிரனால் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூன்29க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் சுமுகநிலை உருவாகும். ஜூன் 20,21ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை2,3ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன்25,26ல் பெண்களால் நன்மையை எதிர்பார்க்கலாம்.

பணியாளர்கள் புதன், குருவால் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

உங்கள் திறமைக்கு ஏற்ப வருமானம் உயரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். ஜூன்18,19, ஜூலை15,16ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். சுக்கிரனின் பலத்தால் ஆதாயம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.

புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். விரிவாக்கத்திற்காக வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன் 22,23,24,27,28,29ல் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூலை 6,7ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மஞ்சள், பயறு வகைகள் மூலம் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். குருபகவானால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார வளம் பெருகும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஜூலை 8,9ல் பொன், பொருள் சேரும். உங்களால் குடும்பம் சிறப்படையும். ஜூன் 30, ஜூலை1ல் ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதன பொருள் வரப் பெறலாம். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,25,26,30 ஜூலை 1,6,7,8,9,15,16

கவன நாள்: ஜூலை10,11,12 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,5

நிறம்: மஞ்சள்,ஊதா

பரிகாரம் - செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்தல், ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்தல், வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு செய்தல்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்