இன்னைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் எப்படி அமைய போகுது என்பதை இங்கு பார்ப்போம்.

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களுடைய முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பொருளாதார வரவு அதிகரிக்கும்.

உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத் தொடங்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்

முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

மனதுக்குள் உற்சாகம் பெருகும். பயணங்கள் சார்ந்த புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்

எதுவாக இருந்தாலும் அதில் பதட்டம் இன்றி கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும்.

புதிய முயற்சிகளில் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும். வேலை சம்பந்தப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

உங்களுடைய மேலதிகாரிகளி்ன் ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பட ஆடம்பிக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மிகவும் கலகலப்பான சூழல்கள் உருவாகும்.

முக்கிய பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்

மனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான சிந்தனைகளால் உங்கள் மனதில் பெரும் மாற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய செயல்களில் சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் உண்டாகும்.

மற்றவர்களுடைய விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும். நீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோர்களுடைய உடல் நலகில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அலுவலகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

தேவையற்ற செலவுகளைச் செய்வதால் உங்களுக்கு நெருக்கடியான சூழலே உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உண்டாக கொஞ்சம் காலதாமதம் உண்டாகும்.

உங்களுடைய அலுவலகத்தில் மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்க ஆரம்பிக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுகின்ற வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

துலாம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாய்வழியிலான உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள்.

உங்களுடைய பயணங்களினால் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்இ சிறந்த ஆதாயங்கள் உண்டாகும். உறவினர்களுடைய வருகையினால் வீட்டில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

தொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய முயற்சிகளில் பெரும் வெற்றி உண்டாகும். உங்களுடைய முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிதாக வாகனங்கள் வாங்குவது பற்றிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மன உறுதியுடன் செயல்படத் துவங்குவீர்கள்.

அலுவலகத்தில் உங்களுடைய அதிகாரிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

உடலில் ஒருவிதமான உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொழுது அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. மற்றவர்களுடன் பேசுகின்ற பொழுது கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு மேன்மையைத் தரும்.

மனதுக்குள் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்

உங்களுக்கு அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஈடேற வைப்பீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

வேலை தொடர்பாக வெளியூா் பயண்ஙகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத பண வரவு உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கான மதிப்புகள் கூடிக்கொண்டே செல்லும்.

வீட்டுக்குத் தேவையான ஈடம்பர பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஈடேற ஆரம்பிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். வீட்டுக்கு அக்கம் பக்கத்தி்ல உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும்.

பரம்பரை சொத்துக்களின் மூலம் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல்கள் உண்டாகும். உங்களுடன் சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்க ஆரம்பிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்