ஆகஸ்ட் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள் : எந்த திகதியில் பிறந்தவர்களுக்கு நன்மை?

Report Print Kavitha in ஜோதிடம்
1131Shares

2019 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்ட் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை பற்றி பார்ப்போம்.

எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

மனதில் தைரியமும் வீரமும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு அதிகமாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சுபச்செலவுகள் ஏற்படும். வம்புச்சண்டைகள் குறையும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்ற முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றி கிடைக்கும்.

பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

ஈரமனம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் நீங்கும்.

அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் இருந்த மந்த நிலை மாறும். எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அரசியல்துறையினர் தங்களது வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி - புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30

நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த வீண்கவலை நீங்கும்.

வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை யோசித்தும் திட்டமிட்டும் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

உழைப்பை மூலதனமாக கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்க ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். எண்ணம் - புத்தி - செயலில் இருந்த மந்த நிலை மாறும்.

நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும்.

சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையால் உடற் சோர்வு ஏற்படலாம்.

மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால் எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23

நுணுக்கமான அறிவைக் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் நீங்க திட்டமிடுவதில் கவனம் தேவை உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் அகலும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு உடல்நலத்தில் அக்கறை தேவை. கலைத்துறையினர் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உடல் சோர்வு உண்டாகலாம். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24

எந்த காரியத்திலும் திட்டமிட்டு ஜெயிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

அரசியல்துறையினர் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

புத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். புதிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மன துயரம் நீங்கும்.

ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 8, 17, 26

எந்த சூழ்நிலையிலும் முயற்சியை தளர விடாத எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும்.

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.

குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.

பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. எந்த ஒரு வேலையை செய்யும் போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.

வீடு, வாகனம் வாங்கும் சுபச்செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் - நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்