இந்த வார ராசி பலன் (ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை ) : எந்த ராசிக்கு பாராட்டும் பரிசும் பெறும் வாய்ப்பு உள்ளது?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்

பணவரவு திருப்தி தரும். வீண் செலவுகளும் ஏற்படாது என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணின் திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு.

கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். இருக்கும் வேலையிலிருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால் அதற்கான முயற்சி களை மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. சக கலைஞர்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து சுமுகமாகப் பழகுவார்கள்.

மாணவர்கள் பாடங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதுடன், கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லிப் பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைப்பதால் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 15, 16, 17

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

ரிஷபம்

பணவரவு தேவையான அளவுக்கு இருப்பதால் செலவுகளைச் சமாளித்து உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை.

சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தந்தைவழி உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்றாலும் ஆர்வத்துடன் செய்து சலுகைகள் பெறுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை. கடன் வாங்கி புதிய முதலீடு கள் செய்வதைத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைப்பதில் சிற்சில தடைகள் ஏற்படக்கூடும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் பெறும் வாய்ப்பு ஏற்படும். ஆரம்பக் காலப் பள்ளி நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரமாக இருக்கும். கணவரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16, 17

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3

சந்திராஷ்டம நாள்கள்: ஆகஸ்ட் 12, 13

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

மிதுனம்

வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

பிள்ளைகள் மூலம் நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபச் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதிகரிக்கும் குடும்பப் பொறுப்புகளின் காரணமாகச் சற்று சோர்ந்து காணப்படுவீர்கள். தந்தையுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். ஆனால், உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினர் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடின முயற்சிகளின் மூலமே வாய்ப்புகளைப் பெற முடியும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சக மாணவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் இல்லாத வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் தாங்களே செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5

சந்திராஷ்டம நாள்கள்: 14, 15

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கடகம்

பொருளாதார வசதி ஓரளவுக்கே இருக்கும். ஆனாலும், செலவுகளும் அதிகம் இருக்காது. உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுப்பது நல்லது.

சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த மன உளைச்சல் நீங்கும். அவர்களால் மகிழ்ச்சியும் ஏற்படும். உறவினர்களிடையே கௌரவம் உயரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரமாக இருக்கும். இருப்பினும் கணவரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ் நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13, 14, 15

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

சந்திராஷ்டம நாள்கள்: 16, 17

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

சிம்மம்

தேவைக்கேற்ற பணவரவு கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தைவழி உறவினர்களால் சுபச் செலவுகள் ஏற்படும். திடீர் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்கவேண்டாம். வழக்குகளைப் பொறுத்தவரை முன்னேற்றமான திருப்பம் ஏற்படும்.

பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இடமாறுதல் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் முக்கியத்துவம் பெறும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமாகப் பழகுவது நல்லது. புதிய முயற்சிகளில் பொறுமை அவசியம். கொடுக்கல் வாங்கலில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 15, 16

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சந்திராஷ்டம நாள்: 18

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கன்னி

கூடுதலான பணவரவு மகிழ்ச்சி தரும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். திருமண முயற்சிகளில் பொறுமை அவசியம்.

கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையின் மூலம் பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் கனிந்து வரும். அதிகாரிகளும் சக ஊழியர்களும் அனுசரணை யாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்த நினைத்திருந்தால் அதற்கான முயற்சிகளை மேற் கொள்வது சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது. வருமானமும் அதிகரிக்கும். சக கலைஞர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம். உறவினர் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்: 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

துலாம்

பணவரவில் தடைகள் எதுவும் இல்லை. பிள்ளைகள் மூலம் உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

சகோதரர்களின் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு தருவார். அவர் மூலம் ஆதாயமும் உண்டாகும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகள் கடினமாகப் பேசினாலும் பொறுமையுடன் சகித்துக்கொள்வது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் பிரச்னை இல்லை.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதற்குக் கூடுதல் உழைப்பு தேவைப்படும். சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டும் பரிசும் பெறும் வாய்ப்பு ஏற்படும். பணவரவும் திருப்தி தரும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். நண்பர்களுடன் பழகுவதில் கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12, 13

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

விருச்சிகம்

பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். உறவினர்கள் சுமுகமாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் பொறுமை அவசியம்.

வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி விற்பனையும் லாபமும் கிடைப்பதற்கில்லை. பற்று வரவு சுமுகமாக நடைபெறும். சிலருக்கு வியாபார நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சில காரணங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். சக கலைஞர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். பெற்றோரின் ஆலோசனையைக் கேட்பதன் மூலம் தெளிவு பெறலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன் மதிப்பும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

தனுசு

தேவையான பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படுவதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் வந்தாலும் பொறுமையுடன் சகித்துக்கொள்வது நல்லது.

தந்தையுடன் மனவருத்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொறுமை அவசியம். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வாகனத்தில் செல்லும்போது பொறுமை அவசியம். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. உங்கள் பணிகளை நீங்களே கவனத்துடன் செய்வது நல்லது. அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை அவசியம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்குக் கடின முயற்சி தேவைப்படும். அனுபவம் மிக்க கலைஞர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான வங்கிக் கடனுதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் செலவுகளைச் சமாளிப் பதில் சற்று சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12, 13, 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

மகரம்

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கூடுமானவரைக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கணவன் - மனை விக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். சகோதரர்களால் உதவியுடன் உபத்திரவமும் ஏற்படக்கூடும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் ஏற்படும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் கூடுதலாக உழைத்தால் மட்டுமே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்குப் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை இல்லை. பிரபலமான கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி பாராட்டுப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 14, 15

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்

கும்பம்

போதுமான பணவரவு இருந்தாலும் அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும்.

பிள்ளைகள் மூலம் பணவரவுடன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள், அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பலராலும் பாராட்டப்படும். மிகவும் பொறுப்பான பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு இடமாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உங்கள் கனிவான அணுகுமுறையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு விற்பனையை அதிகரிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் ஓரளவுக்கே இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டும் பரிசும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிட முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 12, 13, 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

மீனம்

பணவரவு அதிகரிக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். அவர் மூலம் பணவரவும் பொருள் சேர்க்கையும் ஏற்படும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். அரசாங்க வகையில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு இட மாறுதல் கிடைத்தாலும் அதனால் நன்மையே ஏற்படும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக் கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை. சக வியாபாரிகளுடன் வியாபார விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதுடன், பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப் படும் சந்தர்ப்பம் ஏற்படும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரமாக இருக்கும். ஆனால், கணவரின் அன்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12, 13, 14, 15

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி


You May Like This Video....

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்