ஆட்டிப்படைக்க போகும் புரட்டாசி மாதம்! சந்திராஷ்டமத்தை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆவணி போய் புரட்டாசி மாதமும் பிறந்து விட்டது.

அந்தவகையில் புரட்டாசி மாதத்தில் எந்த எந்த ராசிக்கு எப்படிபட்ட பலன்கள் தேடிவர போகுது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்

எதற்கும் அஞ்சாத, எதிலும் முதன்மை வகிக்க நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பஞ்சமத்தில் இருந்து, உங்கள் சுகஸ்தானாதிபதியான சந்திரன் ராசியில் இருப்பதும் நல்ல யோகமான அமைப்பாகும்.

உங்கள் தனித்திறன் மேம்படும். எந்த விஷயத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்து செயல்படுவீர்கள். உங்கள் குல தெய்வத்தின் சக்தி உங்கள் பிரச்னைகளை தீர்க்கவும், வாழ்வில் முன்னேறவும் துணை செய்யும்.

பூர்வீக சொத்து பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். குழந்தைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

புதிய வீடு, நில, புலன் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். மாதத்தின் முற்பகுதியில் குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். மற்றவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

உங்கள் மனதில் தைரியமும், உற்சாகமும் அதிரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.

உங்கள் விடாமுயற்சி வெற்றி பெறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நீண்டநாளாக எதிர்பார்த்த வங்கி கடன் கைக்கு கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள்.

இருப்பினும் சக பணியாளர்களுடன் சங்கடங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் அதிகரிக்கும்.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தந்தையின் உடல் நலன் பாதிப்படையும் என்பதால் கவனம் தேவை. மற்றவர்களின் தவறான ஆலோசனையால் பிரச்னை உருவாகலாம், சாதக பாதகங்களை சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தொழில் விஷயங்களில் மாதம் முதற்பகுதியில் குழப்பநிலை இருந்தாலும் முன்னேற்றம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 02, 03, 04 உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 28,29,30, அக்டோபர் 1 ,7 ,8, 9, 10, 11.

ரிஷபம்

அன்பிற்கும், பொறுமைக்கும் இலக்கணமாகவும், பண்பான செயல்களால் பலரின் பாராட்டினையும் பெறும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன், பூர்வ புண்ணியாதிபதியான புதனுடனும், சுகாதிபதியான சூரியனுடனும் சஞ்சரிப்பது யோகமான அமைப்பு ஆகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும்.

குலதெய்வத்தின் பிரார்த்தனையை நிறைவேற்றி, குல தெய்வ அனுகிரகத்தினை பெறுவீர்கள். புதிய வீடு, நில, புலன் வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பங்குசந்தையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.

கலைத்துறையில் உள்ளவர்கள் பிரகாசிப்பார்கள். குழந்தைகள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களின் குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு பெருமை தேடி தரக்கூடும். நீண்டநாளாக விற்க முயற்சித்த உங்களது அசையா சொத்துக்கள் விற்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வாக்கு சாதூரியத்தால் அனைத்து காரியங்களையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வீர்கள்.

நல்ல தன வரவு உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயமில்லை. மனக் குழப்பம், தடுமாற்றத்தைத் தவிர்க்க இறைவழிபாடும் துணை நிற்கும்.

தாய் வழியில் சிறு விரயங்கள் உண்டு. தங்களுடைய வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணை உங்களின் செயலுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அவர்களால் வரவும் செலவும் சமமாக இருக்கும். வியாபார விஷயங்களில் கவனம் தேவை.

கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், முன் பின் அறிமுகமற்றவர்களின் ஆலோசனையை தவிர்ப்பதும் நல்லது.

தொழில் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு சிறு சிறு இடைஞ்சல்கள் இருக்கும்.

இருப்பினும் பொறுமையுடன் இருந்தால் எதிர்காலம் வசந்தமாகும் என்பதை நினைவில் நிறுத்தி செயலாற்றுவது நல்லது.

தந்தை வழியில் மனக் கசப்பு உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பின் முயற்சிகள் கைகூடும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5, 6 பயணங்களில் கவனம் தேவை. வீண் விரயங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2, 9, 10, 11, 12, 13, 14

மிதுனம்

எதிலும் புதுமையைப் புகுத்தி, வெற்றிகரமாக செயல்பட்டு, மற்றவருக்கு வழிகாட்டும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் 4 ல் உச்சம் பெற்று சுக்கிரன், சூரியனுடன் நீசபங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பது, எதிர்பாராத முன்னேற்றத்தையும், யோகத்தையும் தரும். இந்த மாதம் உங்கள் வாழ்வில் ஓர் திருப்புமுனை ஏற்படும்.

புதிய, வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். எந்த சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் ஆதரவும், உதவியும் தேவைப்படும் நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.

தாயன்பும், தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. உங்கள் பிரமாண்டமான சிந்தனை செயல் வடிவாக்கி வெற்றி பெறுவீர்கள்.

பல வகையில் தன வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்கள் சாதூரியமான பேச்சு வெற்றி தரும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இளைய சகோதர, சகோதரிகளிடையே மனக்கசப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து மறையும்.

ஒருவரையொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை மூலமாக தனவரவு உண்டாகும். வியாபார விஷயங்களில் கவனம் தேவை. தங்கள் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

தந்தையால் அனுகூலமுண்டு. ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு உகந்த காலமாகும். தங்கள் உழைப்பால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். தங்கள் பணியை கடமைக்காக செய்யாமல் ஆர்வத்துடன் செய்வது வெற்றியைத் தரும். குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

புதிய முதலீடுகளை செய்வதால் லாபங்களை பெறுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனங்களை பழுது பார்த்து சரி செய்வீர்கள். காதல் முயற்சிகளில் கவனம் தேவை. காதலர்களுக்கிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 7, 8, தொழில் சார்ந்த விஷயங்களில் சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 18, 19. அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13, 14, 15, 16

கடகம்

அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டு, தன் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தன் வாழ்வை அர்ப்பணிக்கும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திரன் 10 ல் சஞ்சரிப்பதால், நீங்கள் உங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து எதிலும் முன்னிலை வகுப்பீர்கள்.

உங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். உங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளால் எளிதில் வெற்றிக்கனியை சுவைப்பீர்கள்.

உங்கள் ஆளுமை மற்றவர்களை கவர்ந்திழுக்கும். பேச்சில் கவனம் தேவை. வீண்விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். பங்குச்சந்தை மூலமாக எதிர்பாராத தனவரவு உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

அண்டை அயலாரால் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரிகளிடையே மாத முற்பகுதியில் மனக்கசப்பு இருப்பினும், பிற்பகுதியில் சுமுகமாகும்.

தாய் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுமென்பதால் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களிடையே மனக்கசப்பு வந்து நீங்கும். வீடு மற்றும் வாகனங்களை பழுது பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தேவையான விஷயங்களை திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

உடல் ஆரோக்கியம் பெறும். காரியசித்தி உண்டாகும். கணவன்- மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும், தன வரவுகளும் உண்டு. தந்தை வழி ஆதரவு உண்டு. உங்கள் வாழ்வின் முன்னேற்றுத்துக்கு தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும். தொழில் வகையில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும்.

நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நண்பர்களிடம் இந்தகாலகட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் கேளிக்கை விஷயங்களை தவிர்ப்பதால் வீண் பிரச்னைகளையும், கருத்து வேறுபாடுகளையும் தவிர்க்கலாம்.

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் நிறைவேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 9, 10, 11, புதிய நபர்களிடம் கவனம் தேவை. பேராசையை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 20, 21, 22, அக்டோபர் 5, 6, 7, 15, 16, 17.

சிம்மம்

சிறந்த ஆளுமையும், நிர்வாகத்திறனும் எந்த சூழ்நிலையும் தனது கட்டுக்குள் கொண்டு வரும் வீரமும், பராக்கிரமும் நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் 2ல் நீசபங்க ராஜயோகம் பெற்ற புதன், சுக்கிரனுடன் இணைந்து இருப்பது சிறந்த அமைப்பாகும்.

மாத முதற்பகுதியில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், பிற்பகுதியில் தன வரவு அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாராத தன வரவு உண்டு. உங்கள் சொல்லுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

தேவையற்ற பயங்களை தவிர்த்துதன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். விடாமுயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணரும் காலம். வாகன பயணங்களில் கவனம் தேவை. நீண்ட தூர பயணம் மற்றும் இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தாயன்பு அதிகரிக்கும். இருப்பினும், தாயுடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை.

குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. காதல் விஷயங்களில் கவனம் தேவை. காதலிப்பவர்களிடையே வழக்குகள், பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம்.

கணவன் - மனைவியிடையே சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும், இல்லறத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

புதிய வீடு, வாகனம், நில, புலன் வாங்குவதற்கான முயற்சிகளில் சிறு தடைகள் வந்து நீங்கும். தந்தையால் அனுகூலம் உண்டு.

தந்தை உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழி காட்டுவார். அதிர்ஷ்ட தேவதை உங்களை வழிநடத்திச் செல்லும். தொழிலில் மாத முற்பகுதியில் சில பிரச்னைகளை சந்தித்தாலும், பிற்பகுதி யோகமாக அமையும். புகழ், அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.

நண்பர்களால் ஆதாயமிருந்தாலும், பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் சம்மந்தப்பட்ட முதலீடுகளில் கவனம் தேவை.

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 12, 13, 14. பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 20, 21, 22, 23. அக்டோபர் 7, 8, 9, 17.

கன்னி

சிறந்த விஷய ஞானமும், உலகியல் அறிவும், தந்திரமும், நிர்வாகத் திறனும் மிக்க கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சுக்கிரனுடன் நீசபங்க ராஜயோகம் பெற்று சூரியனுடன் இணைந்து இருப்பது மிகச்சிறந்த யோக அமைப்பாகும்.

உங்கள் வாழ்வில் எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்படக்கூடிய காலம் ஆகும். மாத முற்பகுதியில் சிறு பிரச்னைகள் இருந்தாலும், பிற்பகுதியில் யோகமான அமைப்பைத் தரும்.

சிறு சிறு பண விரயங்கள், மருத்துவ செலவுகள் உண்டாகும். மாதபிற்பகுதியில் தன வரவு அதிகரிக்கும்.

உங்கள் இனிய பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். லட்சுமி கடாக்ஷம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மனதில் எதிர்காலம் பற்றிய பயம், சந்தேகம் வந்து நீங்கும். வீண் கவலைகளைத் தவிர்த்து நேர்மறையாக சிந்திப்பது நல்லது.

தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனப் பயணத்தின் போது வாகனத்திற்குரிய ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு நேரப் பயணம் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. சிறிய குழந்தைகளை தனிமையில் விடுவதை தவிருங்கள். வெளியூர் பயணங்களில் கவனமாக இருங்கள்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, உரிமையாளருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காதல் திருமணங்களை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது.

கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வியாபார கூட்டாளிகள் விலகிச் செல்லலாம். எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் தனலாபமும் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்ட தேவதை உங்களுடன் இருந்து உங்களை வழி நடத்துவாள். உங்களுக்கு சிறந்த வழிகாட்டி கிடைப்பார்கள்.

உங்கள் தொழில் விஷயத்தில் நீங்கள், உங்கள் தனித்திறமையை பயன்படுத்தி சாதனை படைப்பீர்கள். உயரதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள்.

உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18.19. அக்டோபர் 14,15,16. வீண் பிரச்னைகளில் ஈடுபடாமல் விலகிச் செல்வது நல்லது. கோபத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 22, 23, 24, 25, 26. அக்டோபர் 9, 10, 11.

துலாம்

சிந்தனையில் நடுநிலையும், செயல்களில் பக்குவமும், உண்மைக்கும், கடின உழைப்புக்கும் மதிப்பளிக்கும் துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 12ல் நீசபங்க ராஜயோகம் பெற்று சூரியனுடன் இணைந்து இருப்பது, சுக போகத்திற்கும், சுய தேவைக்கும் விரயங்களை காட்டுகிறது.

இருப்பினும் 12 ல் சுக்கிரன் மறைவில்லை என்பதால் இழப்பில்லை என்றாலும், போக விஷயங்களில் ஆழ்ந்து செல்ல வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கு சாதகமான காலமாகும். உங்கள் பேச்சாலும் அணுகுமுறையாலும் மற்றவரை கவருவீர்கள். பல வகையில் தன வரவு உண்டு. யாரோடும் வாக்கு வாதம் செய்து கொள்ள வேண்டாம்.

சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. வெளியூர் பயணங்கள் லாபகரமாக இருக்கும்.

மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்து, எதிலும் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். வீடு, நில, புலன், வாகனம் தொடர்பான பிரச்னைகள் வரும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் உடல் நிலையில் கவனம் தேவை.

பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். குலதெய்வ பிரார்த்தனையால் நன்மை விளையும்.

எதிரிகளால் லாபம் உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். இருப்பினும் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொள்வது பிரச்னையை உருவாக்கும் என்பதை உணர்வீர்கள்.

வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. புதிய வியாபாரத்திற்கான வழிகளை செயல்படுத்துவீர்கள். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் முன்னேற்றத்தில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.

உங்கள் தொழில் மற்றும் வாழ்வில் வெற்றி பெற உங்கள் வாழக்கைத்துணை மிக்க உறுதுணையாக இருப்பார். நண்பர்கள் விஷயங்களில் கவனம் தேவை.

அவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் முழுவதும் வீண் செலவுகளையும், முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. பொறுமை மற்றும் விழிப்புணர்வு அவசியம். மற்றவர்களின் தவறான ஆலோசனைகளைத் தவிர்ப்பது நல்லது. மனைவி சொல்லே மந்திரமாக நினைத்து ஏற்றுக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 19, 20, 21. அக்டோபர் 17. எதிர்பாலின விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 22, 23, 24, 25, 26. அக்டோபர் 11 ,12, 13, 14.

விருச்சிகம்

கோபம் இருக்கும் இடத்திலே குணம் இருக்கும் என்பதை போல, உணர்ச்சி பூர்வமான அன்பை வெளிப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான், 10 ல் திக் பலம் பெற்று நிற்பது, உங்களின் செயலாற்றலை அதிகப்படுத்தும்.

உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் திறனுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் பணியில் உங்கள் திறமையால் வெற்றி கொடி நாட்டுவீர்கள்.

உங்கள் அந்தஸ்து, புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். எனினும் கோபத்தைத் தவிர்த்து, நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. கடந்த கால தோல்விகளை நினைத்து மனம் வருந்த வேண்டாம். எதிர்கால வாழ்விற்கான திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுங்கள்.

பேச்சில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. தாய் வழியில் சில மனசஞ்சலங்கள் வந்து நீங்கும். இருப்பினும் ஆதாயம் உண்டு.

வாகன பயணங்களால் வழக்குகள் வர வாய்ப்புள்ளதால், தேவையான ஆவணங்களை சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. உங்கள் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செயல்படுத்துவீர்கள்.

பூர்வீக சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். பணியில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். மாத முற்பகுதியில் கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும், மாத பிற்பகுதியில் இல்லறம் இனிக்கும்.

வியாபாரம் பெருகும். எதிர்பாரத அதிர்ஷ்டமும், தன லாபமும் உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

தந்தைக்கு மருத்துவ செலவு உண்டு. பணியில் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பல வகையில் தன வரவு உண்டு. தேவையற்ற முதலீடு, வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23. மறைமுக எதிரிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 18, 19, 20, 26, 27, 28, 29, 30. அக்டோபர் 15, 16, 17.

தனுசு

நீதி, நேர்மையை உயிராகவும், உயர்ந்த குறிக்கோளை லட்சியமாகக் கொண்டு, அயராது உழைக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குரு, உங்கள் ராசிக்கு பன்னிரண்டிலும், உங்கள் ராசியில் சனி, கேதுவும் இணைந்து இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொடர் இறைவழிபாடும், தியானமும் மன விழிப்புணர்வைத் தரும். தேவையற்ற பிரச்னைகளை தலையிடுவதை விட்டு, உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாகவும், வைராக்கியத்துடன் செயல்படுவது நன்மை தரும். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை.

எதையும் மிதமாகக் கையாள்வது நல்லது. பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. மனதில் தைரியமும், உற்சாகமும் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

தாயாரால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலபுலன் வாங்குதல், விற்பதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள்.

குழந்தைகளால் பெருமைப்படக்கூடிய சூழல் உருவாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், திருப்தியிருக்காது. எதிரிகள் தொல்லை நீங்கும்.

உடல் ஆரோக்கியமடையும். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்து நீங்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. இருப்பினும், ஷேர் மார்கெட் விஷயங்களில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் வேலை காரணமாக வெளிநாடு செல்லக்கூடிய நிலை உருவாகும். தொழில் மற்றும் பணியில் சாதனை படைப்பீர்கள். புகழ்,அந்தஸ்து அதிகரிக்கும். சுபசெலவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24,25

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 20, 21, 22, 28, 29, 30. அக்டோபர் 1, 2.

மகரம்

படித்தவன், பணக்காரன் முதல் பாமரன் வரை அனைவரையும் சமமாக பாவிக்கும் சிந்தனையுடைய மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராசிக்கு 12 ல் கேதுவுடன் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, உணர்ச்சி வசப்படாமல் கண்காணித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்.

புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குடும்பத்தேவைகளுக்காகவும், வசதி வாய்ப்புக்களை அதிகரிக்கவும் பணத்தை செலவு செய்வீர்கள். இருப்பினும் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

மனதில் தைரியம் உற்சாகம் அதிரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் செயல்படுவீர்கள். வெற்றி தாமதமானாலும், வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை.

குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. காதல் கசக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் பெறும்.

வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இல்லறம் இனிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தொழில் விஷயத்தில் கவனம் தேவை.

எந்த விஷயத்தையும் அரைகுறையாக செய்யாமல் முழுமையாக செய்து முடித்து விடுவது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உங்கள் வாழ்வின் உயர்வுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்பினை ஒப்படைப்பார்கள்.

தேவையற்ற செலவீனங்களை தவிர்க்க வீண் செலவுகளைத் தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. எதிலும் மனைவியின் ஆலோசனையை பின்பற்றுவது நற்பலனளிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 26,27. அண்டை அயலாரிடம் கவனமுடன் பழகுங்கள்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 22, 23, 24, 30. அக்டோபர் 1, 2, 3, 4.

கும்பம்

தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாகவும், உயர்ந்த நோக்கமும், செயல்பாடும், எளியோருக்கு தொண்டு செய்யும் மனப்பாங்கும் கொண்ட கும்பராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் லாபஸ்தானத்தில் கேதுவுடன் சஞ்சரிப்பது அனுகூலமான பலனைத்தரும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்களால் ஆதரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பேச்சில் இனிமை இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. மனதில், தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அண்டை அயலாரின் நட்பு கிடைக்கும்.

தாயாரின் உடல் நிலை பாதிப்படையும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம்தேவை. வாகனங்கள் பழுதடையும்.

குழந்தைகளால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஷேர்மார்க்கெட் விஷயங்களில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. மனைவியால் தன வரவு உண்டு. தந்தையாரின்க் உடல் நலனில் கவனம் தேவை.

தந்தையுடன் வீண்விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிதுர் சொத்து பிரச்னை வந்து நீங்கும். தொழில் மற்றும் பணியில் கவனம் தேவை.

மேலதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும்.

நீங்கள் உங்கள் துறையில் பிரபலமாக கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளால் ஆதாயம் உண்டு. எனினும் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

கூட்டாளிகளை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். இந்த மாதம், வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கான வழி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 28,29. உறவினர் விஷயங்களில் விவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தினங்கள்: செப்டம்பர் 24, 25 ,26. அக்டோபர் 2, 3, 4, 5, 6, 7.

மீனம்

அதீத இரக்க குணமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும், எல்லோரிடமும் அன்பு காட்டும் குணம் உடைய மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குரு, உங்கள் ராசிக்கு 9ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் மனம் தெளிவடையும், தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புனித தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.

அதிர்ஷ்ட தேவதை உங்களின் கதவைத் தட்டும். வெளிநாடு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பிற்கு முயற்சிப்பவர்களுக்கு, முயற்சிகள் கைகூடும்.

பொருளாதார சூழல் சரியாக இருந்தாலும், அவசரத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம்.

சகோதர, சகோதரிகளிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம். தாயின் உடல் நிலை பாதிப்படையும் என்பதால் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் உண்டாகும். வீடு, வாகன விஷயங்களில் கவனம் தேவை.

புதிய நிலபுலன்கள் வாங்குவதை தவிர்க்கவும். பழைய வாகனங்களை பழுது பார்த்து சரி செய்வீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கான செயல்களை செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாகும்.

ஷேர் மார்க்கெட் முதலீடு நல்ல லாபம் தரும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வங்கிகளில் கடன் கேட்பவர்களுக்கு உடனடி அனுமதி கிடைக்கும்.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் வீண்பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. மனைவியால் தனவரவு உண்டு.

வாழ்வில் புதிய குரு அல்லது வழிகாட்டியின் வரவு உங்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் சொத்து பிரச்னைகளில் பொறுமை தேவை.

தொழிலில் இடர்பாடுகள் வந்து நீங்கும். அலுலகத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30. அக்டோபர் 1. குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 26, 27, 28. அக்டோபர் 5, 6, 7, 8, 9.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்