2020ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம்.... எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம்?

Report Print Kavitha in ஜோதிடம்
966Shares

2020ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று நிகழ்கிறது.

இது இரவு 10.35 மணி முதல் 11ஆம் திகதி அதிகாலை 02.40 வரை நீடிக்கிறது.

இதன் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் ராகு இணைந்து மூன்றாவது வீடான மிதுனத்தில் இருக்கும் நேரத்தில் கிரகணம் நிகழ்கிறது.

இந்த கிரகணம் முயற்சி ஸ்தானம், தைரிய ஸ்தானத்தில் நிகழ்கிறது. இது சகோதர ஸ்தானம். குடும்பத்துடன் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள். சகோதர உறவுகளுடன் சண்டை வேண்டாம். 10 மணிக்கு எல்லாம் அமைதியாக உறங்கி விடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு 2வது வீடான குடும்பம், தன, வாக்கு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது குடும்பத்தில் சிறு பூசல்களை ஏற்படுத்தும்.

அமைதியாக இருங்கள், பொறுமை பொருளாதார நிலையை உயர்த்து. குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை வேண்டாம் சமாதானமாக போங்க. புத்தியை உபயோகப்படுத்துங்கள்.

மிதுனம்

மிதுனம் ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் சந்திரகிரகணம் நிகழ்கிறது. ராகு உடன் இணைந்த சந்திரன் உங்க ராசியில் இருப்பதால் உடல் நலத்தை கவனிங்க. மனதில் சஞ்சலம் அதிகமாகும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அமைதியே சிறந்த வழி. 10ஆம் தேதி இரவு தொடங்கி 11ஆம் தேதி காலை வரை யாருடனும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. பொருளாதார சிக்கல் தீரும்.

கடகம்

உங்க ராசிக்கு 12ஆம் இடம் விரைய ஸ்தானம். இந்த வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. தனிமையே உங்களுக்கு நல்லது.

ஆன்மிக நாட்டம் மன அமைதியை தரும். தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம். அமைதியாக உங்களின் பணியை செய்யுங்கள்.

சிம்மம்

உங்க ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. மூத்த சகோதரர்கள், வயது மூத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். பணிவும் மரியாதையும் அவசியம் தேவை.

நீங்க செய்யும் முதலீடுகளில் லாபம் வரும். அலுவலகத்தில் இரவு பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். விழிப்புணர்வு அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்கு 10வது இடமான கர்ம தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. தொழில் வேலையில் கவனமாக இருங்க. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லுங்கள். வேலையில் விழிப்புணர்வு தேவை.

இரவு ஷிப்ட் வேண்டாம் தவிர்த்து விடுங்கள். கிரகண நாளில் வேலைக்கு லீவ் போட்டு விட்டு பேசாமல் படுத்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுங்கள்.

துலாம்

பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. உங்களுக்கு நீண்ட தூர பயணம், ஆன்மீக பயணம் ஏற்படும். சில காரிய தடைகள் ஏற்படும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஜனவரி 10 இரவு முதல் 11 காலை வரை மவுனவிரதம் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் சந்திரன் ஏற்கனவே சந்திராஷ்டமம் உள்ளது கூடவே கிரகணம் நிகழ்வதால் கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் விபத்து ஏற்பட்டு விடும் விழிப்புணர்வுடன் வாகனம் ஓட்டுங்கள். உடல் சோர்வு ஏற்படும். அலைச்சலை தவிர்த்து விடுங்கள்.

வீட்டிலோ அலுவலகத்திலோ பேசும் போது கவனமாக பேசுங்கள். கூடுமானவரைக்கும் மவுன விரதம் இருப்பது நல்லது.

தனுசு

உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்க குடும்ப உறுப்பினர்களிடம் கவனமாக பேசுங்கள், கணவன் மனைவி இடையே கவனமாக பேசுங்கள்.

வேலை செய்பவர்கள் பொறுமையுடனும் நிதானமாகவும் இருங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளியில் காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, 6ஆம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம். இந்த வீட்டில் ராகு உடன் சந்திரன் இணைந்திருப்பதால் நண்பர்களுடன் பேச்சில் கவனம் தேவை.

சிறு மோதல்கள் ஏற்படலாம். நிதானமும் பொறுமையும் அவசியம் தொழில் வியாபாரத்தில் எதிரிகளை சமாளிக்கும் தெம்பு தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

உங்க ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அம்மாவழி உறவில் கவனம் தேவை.

குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் வரலாம். தியானமும், கடவுள் வழிபாடும் பிரச்சினைகளை தீர்க்கும்.

மீனம்

மீனம் ராசிக்கு நான்காவது இடம் சுக ஸ்தானம், அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மனதளவில் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். பொறுமையும், நிதானமும் தேவை. இந்த காலகட்டத்தில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்