தை மாதம் 12 ராசிகளில் எந்த ராசிக்கு கல்யாண யோகம் கூடி வரும் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் எந்த ராசிக்கு கல்யாண யோகம் கூடி வருது என்று பார்ப்போம்.

மேஷம்

தை மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். குரு பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் அதிகமாகும், உங்களுக்கு குரு பலம் வந்து விட்டது. கெட்டி மேளம் கொட்டப்போகுது.

கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் அதிகமாகும். புத்திரபாக்கியம் தேடி வருது. கட்டில் ஆடும் சத்தமும் தொட்டில் ஆடும் சத்தமும் உங்க வீட்டில் அதிகமாக கேட்கும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தை பிறந்தா வழி பிறக்கும். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு மகரம். இது மகர மாதம்.

சூரியன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. சனியின் சஞ்சாரம் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது.

மகரம் உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய ராசி. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. திருமணம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசியின் மீது தனுசு ராசியில் உள்ள குருவின் பார்வை நேரடியாக கிடைக்கிறது. இதே போல சனியின் பார்வை இப்போது உங்க ராசியின் மீது விழுந்தாலும் சில நாட்களில் நிகழப்போகும் சனிப்பெயர்ச்சி உங்க ராசிக்கு பல சந்தோஷங்களை கொடுக்கப் போகிறது.

திருமண முயற்சிகள் கை கூடி வரும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும். குரு பலன் முழுமையாக இருப்பதால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தின் மீதும், குடும்ப ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை விழுகிறது.

உல்லாச பயணங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

பெண்களுக்கு இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனது இனி பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும். சனியின் பார்வையால் சந்தோஷம் அதிகமாகும் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

சிம்மம்

தை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் கல்யாணம் யோகம் கைகூடி வரப்போகிறது.

தட்டிப்போன வரன்கள் கூட உங்களை தேடி வரும். புத்திரயோகம் வந்து விட்டது. வீட்டில் குவா குவா சத்தம் கேட்கப்போகிறது.

கணவன் மனைவி உறவில் உற்சாகம் ஏற்படும். அரசு வேலை உங்களை தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மைகள் நாடி வரப்போகிறது விமானத்தில் பறக்கப்போகிறீர்கள்.

கன்னி

தை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் உங்களுக்கு வழி பிறந்து விட்டது நன்மைகள் வந்து சேரும்.

காதல் வலையில் விழுந்து விடாதீர்கள் அது சிக்கலில் கொண்டு போய் விடும் அப்புறம் அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.

திருமண முயற்சிகளை இந்த மாதம் செய்ய வேண்டாம். காதல் பிரச்சினையாகி பிரிவினையாகிவிடும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும் அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

தை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் இந்த மாதம் உங்க ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. தன ஸ்தானத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புதமான பலன்களை தருவார்.

சனியின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளினால் உங்களுக்கு வேலைகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும் இதுநாள் வரை வரன் தட்டிக்கொண்டே இருந்தது இனி உங்களுக்கு கல்யாண யோகம் கூடி வரப்போகுது.

காரணம் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. காதல் கை கூடி வரும்.

விருச்சிகம்

தை மாதம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய மாதம் கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் தீரும். ஏழரை சனி முடிந்து விட்டதால் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வருகிறது.

திருமண யோகம் கைகூடி வரப்போகுது. உங்கள் வாழ்வில் இனி வசந்தம் தேடி வருது. தை மாதம் பிறந்தாலே இனி வாழ்க்கையில் வழி பிறந்து விட்டது.

தனுசு

தை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாகும் செவ்வாய் மாத இறுதியில் உங்க ராசிக்கு வந்து குரு கேது உடன் இணைகிறார். குரு மங்கல யோகம் உங்க ராசிக்கு ஏற்படுகிறது.

புதிய வெற்றிகளை ருசிக்கப் போகிறீர்கள். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும், காரணம் குரு பகவான் உங்க ராசியில் இருந்து ஏழாம் வீட்டினை பார்க்கிறார்.

சனிபகவானின் நகர்வும் அற்புதங்களை ஏற்படுத்தும். சனியின் பார்வையால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மகரம்

உங்க ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், புதனால் புத ஆதிபத்ய யோகம் கிடைக்கிறது. முன்னேற்றங்கள் நிறைந்த மாற்றமாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி வெளிச்சம் பிறக்கும்.

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பணக்கஷ்டம், குழந்தைகளினால் ஏற்பட்ட மனக்கஷ்டம் நீங்கும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகைகள், ஆடை ஆபரணங்கள் சேரும். கல்யாண பேச்சுவார்த்தைகள் வீட்டில் தொடங்குவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே தை மாதத்தில் உங்களுக்கு இருக்கும் மனக்கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

உங்களுக்கு அபரிமிதமான வருமானத்தை தரப்போகிறது. மனைவி வழியில் செல்வாக்கு அதிகமாகும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

சுகங்களை அனுபவிக்கும் மாதம். கல்யாண யோகம் கைகூடி வரப்போகுது. கணவன் மனைவி உறவில் சந்தோஷம் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்க திடீர் வருமானம் வரும் செய்யும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களுக்கு தொழில் லாபம் அதிகமாகும். பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் சேர்க்கை அதிகமாகும்.

மனதிற்கு பிடித்த சிறப்பான வாழ்க்கை அமையும். குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் பணவரவு அதிகமாகும் கல்யாண யோகம் தேடி வருது. பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகமாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்