பெப்ரவரி மாத ராசிப்பலன்கள் 2020 : இந்த ராசிக்காரர்களுக்கு தான் செல்வந்தராகும் யோகம் கிடைக்குமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

2020 பெப்ரவரி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகுது என பார்ப்போம்.

மேஷம்

எல்லோரிடமும் சமமாக பழகும் குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

குருபகவானின் சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும்.

கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள்.

உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து ஸ்ரீகணபதியை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

அடுத்தவர்களை அனுசரித்து காரியங்களில் வெற்றி பெறும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தொழில் கர்ம ஸ்தானத்தில் இருக்கிறார். சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.

பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும்.

குருபகவானின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்னை தீர பாடுபடுவீர்கள்.

காரியத்தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கிவர பணவரத்தில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மிதுனம்

மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்தும் மிதுன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். குரு பகவானின் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சின்னச் சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம்.

பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள்.

முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாளை தரிசித்து வர காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

கடகம்

சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் கடக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் - செவ்வாய் இருவரும் பார்க்கிறார்கள். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் வீடு, வாகனங்கள் யோகம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும்.

உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மேலிடம் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்.

பரிகாரம்: அரளிப்பூவால் அர்ச்சனை செய்து சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சேர்க்கை அனுகூலத்தைக் கொடுக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும்.

எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும்.

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்.

பரிகாரம்: முருகப்பெருமானை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

கன்னி

எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் கன்னி ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். பணவரத்து கூடும். காரியத் தடைகள் அகன்று எதிலும் திருப்தியான போக்கு காணப்படும்.

மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர்ப் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். சனிபகவானின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் சீரான நிலையில் இருப்பர்.

அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

துலாம்

அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என செயல்படும் துலா ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும்.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம்.

திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்கள் வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

கலைத்துறையினர் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தைச் சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிகம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

மனகலக்கம் நீங்கும். திறமை அதிகரிக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.

தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்.

பரிகாரம்: மீனாட்சியம்மனை வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

தனுசு

மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைக்கும் தனுசு ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிக்கு செவ்வாய் மாற்றம் பெறுகிறார். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வீண் வாக்குவாதத்தால் இருந்த பகை நீங்கும். பயணத்தில் தடங்கல், வீண் செலவு அகலும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.

மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும்.

வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள்.

அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்னைகள் சாதகமாக முடியும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

மகரம்

எந்த கடினமான சூழலிலும் தன்னை உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடு

படும் மகர ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்.

முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியைத் தரும்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்பவர்கள் கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி.

பரிகாரம்: சனிக்கிழமையன்று மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

ரகசியங்களை காப்பாற்றும் வித்தை தெரிந்த கும்ப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிக்கு புதன் வருகை தருகிறார். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும்.

செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம்.

சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவை எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும்.

பெண்கள் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மியை தியானம் செய்து வணங்க குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

மீனம்

புத்திசாதூரியத்துடன் காரியங்களை சாதிக்கும் மீன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிக்கு பத்தாமிடத்திற்கு மாறும் செவ்வாய் ராசியை நான்காம் பார்வையாக பார்க்கிறார்.

எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியக் குறைபாடு விலகும். எந்த காரியம் செய்தாலும் வேகம் உண்டாகும். புதியநபர்களின் நட்பு உண்டாகும்.

வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமானப் போக்கு காணப்படும்.

வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும்.

பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்கள் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி.

பரிகாரம்: நவகிரக குருவிற்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்