இன்னும் 30 நாட்களில் இந்த 4 ராசிக்காரர்களும் கோடீஸ்வரர் ஆகப்போறாங்களாம்! ஏன் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

மார்ச் மாதத்தில் நிகழப்போகும் அதிசார வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்க போகின்றது.

குரு பகவான் அதிசாரமாக பங்குனி மாதம் 16ஆம் திகதி மார்ச் 29ஆம் திகதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார்.

இதன் பின்னர் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜூலை மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை குருவின் வக்ர காலம் நீடிக்கிறது.

இதே குரு பகவான் பின்னர் நேர் கதியில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

அந்தவகையில் இந்த கிரகப்பபெயர்ச்சியால் 12 ராசியில் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.

மகரம்

பொதுவாகவே குரு நின்ற இடம் பாழ் என்பார்கள். ஆனால் குரு பகவான் இம்முறை மகரம் ராசியில் நீசம் பெற்று அமரப்போகிறார்.

ஆனால் கூடவே சனிபகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார் உச்சம் பெற்ற செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

உங்களுக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது. இந்த ராசியால் உங்களுக்கு புது வீடு கட்டும் யோகமும் அமையப்போகிறது.

வெளிநாடு செல்லும் யோகம் வரும். நிறைய நன்மைகள் நேர்மறையான சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவானின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது.

ரிஷபம் ராசி ரிஷபம் லக்னகாரர்களுக்கு லாட்டரி, பங்குச்சந்தை மூலம் திடீர் யோகம் வரும் பணமழை பொழியப்போகிறது.

குருவின் ஐந்தாம் பார்வை ரிஷபம் ராசியின் மீது விழுகிறது. நம்முடைய பாவ புண்ணியங்கள் பற்றி நம்முடைய ஐந்தாம் வீடு உணர்த்தும். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யுங்கள். உச்சத்திற்கு செல்வீர்கள்.

கடகம்

குரு பகவான் இப்போது அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்றாலும் அங்கே சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். அப்போது செவ்வாய் பகவானும் உச்சம் பெற்று மகரம் ராசியில் சஞ்சரிப்பார். குரு பகவானுக்கு நீச பங்க ராஜயோக அமைப்பு கிடைக்கிறது.

கடகம் ராசி கடகம் லக்ன காரர்களுக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சியால் தோஷங்கள் எல்லாம் நீங்கும். கடகத்தில் குரு பகவான் உச்சமடைபவர். தான் உச்சமடையும் வீட்டினை குரு பார்வையிடுகிறார்.

குரு பகவானின் ஏழாம் பார்வை கடகம் ராசியின் மீது விழுகிறது. இந்த கடகம் ராசி கடக லக்ன காரர்கள் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். இந்த ஒன்றரை மாத கால கட்டத்தில் பயணங்கள் அதிகம் செய்வீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர்களில் நிலம் வீடு சொத்து வாங்கலாம்.

கன்னி

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை கன்னி ராசிக்காரர்கள் கன்னி லக்னத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது.

கடந்த சில ஆண்டு காலமாகவே கஷ்ட காலம்தான். இனி அந்த கஷ்டம் தீரப்போகிறது. திடீர் யோகம் வரப்போகிறது.

ரொம்ப நல்ல காலம் வரப்போகிறது. வீடு நிலம் வாங்கலாம். குருவின் ஒன்பதாம் பார்வை சிறப்பு.

பாக்ய ஸ்தானம். நிறைய நன்மைகள் தரக்கூடிய வீடு. நாம் முற்பிறவியில் செய்த நன்மைகள் நம்மை தேடி வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்றரை மாதம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்