2020 அதிசார குரு பெயர்ச்சி : சார்வரி ஆண்டில் குரு பார்வையால் கோடி நன்மைகளை அள்ள போகும் ராசிக்காரர் யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார்.

குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது பார்வையை வீசப்போகிறார்.

குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்

குருபகவான் அதிசாரமாக பத்தாம் வீட்டிற்கு வருவதால் உயர்ந்த பதவி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும்.

பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் புரமோசன் கிடைக்கும். உங்களின் வளர்ச்சிக்கு குருப்பெயர்ச்சி உதவும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது.

குடும்பம் குதூகலமாக இருக்கும். நிறைய பணவரவு இருக்கும். வீடு சொத்துக்களை வாங்குவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வருகிறது.

நிறைய பணவரவு வருவதால் கடன்கள் அடைபடும். நீண்ட நாள் நோய்கள் நீங்கி உங்க ஆரோக்கியம் அதிகரிக்கும். இந்த அதிசார குரு பெயர்ச்சியை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதில் குரு வருவதால் உங்கள் முயற்சிக்கு சுபமான பலன் கிடைக்கும். குரு பகவான் உங்க ராசியை பார்க்கிறார். குரு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீட்டினை பார்க்கிறார். பெயர் புகழ் கிடைக்கும்.

பூர்வ புண்ணியங்கள் தேடி வரும். குடும்பம் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளால் அதிக நன்மைகள் நடக்கும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காரணம் அவர் உங்க ராசி லக்னத்தை பார்க்கிறார். உங்களுக்கு இனி பொன்னான காலம்தான் கொண்டாடத் தயாராகுங்கள்.

மிதுனம்

அதிசார குரு பெயர்ச்சியால் குருபகவான் உங்க ராசிக்கு எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், இரண்டு மற்றும் நான்காம் வீடுகளைப் பார்க்கிறார்.

மோட்ச ஸ்தானம் 12ஆம் வீடு மனதில் நிம்மதி ஏற்படும். வெளிநாடு பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப விரைய செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம். தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். கையில் பணம் அபரிமிதமாக புரளும்.

நான்காம் வீட்டினை குரு பார்ப்பதால் சொந்தமாக வீடு வாங்கலாம். அதற்கான காலகட்டம் வந்து விட்டது. வண்டி வாகனம் வாங்கலாம். இந்த அதிசார குரு பெயர்ச்சி சந்தோஷம் தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

கடகம்

கடகம் ராசிக்காரர்களே, ஏற்கனவே சனியோட பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. அதிசார குரு பெயர்ச்சியினால் ஏழாம் பார்வையாக குரு உங்க ராசியை பார்க்கிறார். குரு ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமானது. திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.

காதல் திருமணங்கள் நடைபெறும். குரு உங்க ராசியையும் மூன்றாம் வீடு மற்றும் லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குரு பார்வையால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிப்பீர்கள். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

குரு பகவான் சில மாதங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ஆறாம் வீட்டிற்கு போகிறார். ஆறாம் வீடு மறைவு ஸ்தானம்.

அங்கிருந்து குரு சிம்ம ராசிக்கு 12ஆம் வீட்டினை பார்க்கிறார். சுப செலவுகள் ஏற்படும். வெளிநாடு யோகம் வரும். வீடு வாங்கலாம். பத்தாம் வீட்டை குரு பார்ப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடி தீரும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குரு இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும்.

கடன் வாங்க கூடாது ஆனாலும் கடன் மூலம்தான் பணம் அதிகம் வரும். இருந்தாலும் அந்த கடனை அடைக்க உதவி செய்வார். திடீர் அதிர்ஷ்டங்களை தரப்போகிறார் குரு பகவான்.

கன்னி

கன்னி ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு அமர்வது அற்புத பலன்களை தரும். சுகம், முன்னேற்றம் சந்தோஷங்களை தரும். ஆனந்தமான குரு பெயர்ச்சி. குருவின் பார்வை உங்க ராசி லக்னத்தின் மீது விழுகிறது.

தைரியம் அதிகரிக்கும் ஆரோக்கியம் கூடும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். உங்க லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார்.

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரருடன் உறவு பலப்படும். வீடு வாங்குவீர்கள்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்ப்பது அதிர்ஷ்டம். தெய்வ கடாட்சம் கிடைக்கும். வெளிநாட்டு யோகம் வரப்போகுது. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி அமையும். உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது.

துலாம்

பார்க்கும் இடங்கள் பலனடையும். நிறைய பயணங்கள் செல்வீர்கள். சுப விரையங்கள் ஏற்படும். வண்டி வாகனம் வீடு வாங்கும் யோகம் வரும். வீடுகளை அழகுபடுத்துவீர்கள். செய்யும் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.

சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சந்தோசத்தையும், நிறைவையும் இந்த குரு தரப்போகிறார். மனைவியின் ஆசைகள், சகோதரிகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

பணவரவும் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுப்படும். எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவீனங்கள், தடைகள் நீங்கும். இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

மூன்றில் குரு புகழ், கீர்த்தியை அதிகரிப்பார். மூன்றாம் வீடு மறைவு ஸ்தானம். இதனால் பாதிப்பு வராது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்தான். குரு பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது.

திருமண தடைகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த வரன் கிடைக்கும். காரணம் குருவின் நேரடி பார்வை உங்க ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. காதல் திருமணம் அமையும். அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவைத் தட்டப்போகிறது.

லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல நண்பர்கள் தேடி வருவார்கள். குருவின் பார்வை பாக்ய ஸ்தானத்தின் மீது விழுகிறது.

உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். அப்பாவிற்கு நன்மை நடைபெறும். ஆலயங்களுக்கு புனித பயணங்கள் செல்வீர்கள். வெளிநாட்டு யோகம் தேடி வரப்போகிறது.

தனுசு

ஜென்ம ராசியில் இருந்த குரு அதிசாரமாக இரண்டாம் வீட்டிற்குப் போகிறார். குருப்பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். பணவருமானம் அதிகரிப்பார். நல்ல வேலையை கொடுப்பார்.

அதிர்ஷ்டத்தை தருவார். குரு பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்ப்பதால் தொழில் வருமானம் அதிகரிக்கும்.

நிரந்தர தொழிலை ஏற்படுத்தி தருவார் குரு. ஆறாம் வீட்டினை பார்க்கிறார். நீண்ட நாட்கள் நோய்கள் நீங்கும். நோயற்ற வாழ்க்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். கடன் தொந்தரவு, எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். மன நிறைவாக இருப்பீர்கள்.

எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தடைகள் விலகி அதிர்ஷ்டம் கூடும். உங்களின் ஆயுள் கூடும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு நீசபங்க ராஜயோகம் பெற்று அமர்கிறார். ஜென்ம குரு அற்புதமான பலனை தருவார். சொந்த வீட்டில் அமரும் குரு தனது ராசியில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளை குரு பார்க்கிறார்.

நிம்மதி கிடைக்கும் திருமணம் இல்லாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். புகழும் கிடைக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் உற்சாகம் சந்தோஷம் அதிகரிக்கும்.

ஒன்பதாம் வீட்டை வெளிநாடு பயணம் செல்வீர்கள். அப்பாவிற்கு உயர்வு ஏற்படும். உயர்கல்வி யோகம் தேடி வரும்.

கும்பம்

கும்பத்தின் ராசி அதிபதி சனி. உங்க ராசிக்கு இரண்டாம் வீடு மற்றும் 11ஆம் வீட்டு அதிபதி குருபகவான். குரு பகவான் 12ஆம் வீட்டிற்கு வருகிறார் ஏற்கனவே சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படும்.

குரு பார்க்கும் இடங்கள் நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளை பார்க்கிறார். நான்காம் வீடு சுகஸ்தானம், கல்வி, அம்மா, இந்த வீட்டினை குரு பார்ப்பதார் பெரிய திருப்பங்கள் ஏற்படும்.

புதிய வண்டி வாகனங்கள் வாங்கலாம். ஆறாம் வீட்டினை குரு பார்ப்பதால் கடன்கள் தீரும் நோய்கள் விலகி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் ஆயுள் கூடும் நிம்மதி ஏற்படும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசிக்கு குரு பகவான் ராசி அதிபதி. இந்த அதிசார குரு பெயர்ச்சியால் நிறைய லாபம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று குரு அமர்கிறார். வராத பணமும் தேடி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது.

திருமணம் தட்டிப்போனவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் கூடும், முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். திருப்புமுனையை ஏற்படுத்தும் குருபார்வையாக அமையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்