குரு அதிசார பெயர்ச்சி 2020 : சனியோடு சேரும் குரு! பேரதிர்ஷ்டங்களை அள்ளபோகும் அதிர்ஷ்டசாலி யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இந்த அதிசார குரு பெயர்ச்சியால் துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கும் போகுது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்

அதிசார நிகழ்வால் மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றிருந்த, குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகரத்தில் சஞ்சரிக்கப் போவதால், அவர்கள் ராசிக்கு கிடைத்த குரு பார்வை,தற்காலிகமாக கிடைக்காது.

அதனால் சுபநிகழ்ச்சிகள் சற்று தாமதம் ஆகலாம். ஆனால் முயற்சிகள் செய்து கொண்டிருக்கலாம்.

குருபகவான் பத்தில் இருக்கும் சனிபகவானுக்கு சுபத்துவம் அளிப்பதால், உங்கள் வேலைப்பளு சற்று குறைந்து காணப்படும்.

மேலும் ஆன்மிக பயணங்கள் மேலோங்கும். தங்களுடைய தாயார் மற்றும் துணைவியாரை சற்று அனுசரித்துப் போவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே..உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் சற்று பலவீனம் ஆவதும், அங்கே சனி பகவான் இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பாகும்.

தொழில் மூலம் லாபங்கள், மேலும் சிறு பயணங்கள் அதன்மூலம் எதிர்பாராத சில பணவரவுகள் லாபங்கள் கிடைக்கப் பெறலாம்.

மேலும் எதிரி தொல்லைகள், கடன் சுமையில் தத்தளித்த உங்களுக்கு, இந்த சிறிய மாற்றங்கள் நல்லதே செய்யும் அமைப்பாக அமைந்துள்ளது.. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! குருவும் சனியும் உங்களுடைய ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பிரவேசிக்கப் போகிறார்கள்.

உங்கள் ராசிக்கு சமசப்தமாக கிடைத்த குருபார்வை தற்காலிகமாக கிடைக்கப் பெறாது. இது ஒரு சிறிய குறையாக இருந்தாலும், முன்பு தனுசுவில் இருந்த சனிபகவான் விலகி விட்டதால், உங்களுக்கு பெரிய அளவுக்கு, ராகு பகவானால் கஷ்டங்கள் ஏற்படாது..

இருப்பினும் சுப காரியங்கள் சிறிது காலம் தாமதம் ஆகலாம் ஆனால் முயற்சிகளை செய்து கொண்டே இருக்கலாம்.

அதேபோல தொழில் மற்றும் குடும்பத்தில் சற்று பின்னடைவை சந்தித்தவர்களுக்கு ,இந்த காலகட்டம் ஒரு ஆறுதலாக இருக்கும்.அஷ்டம சனியின் தாக்கம் மேலும் பலவீனமடையும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! கண்ட சனியின் தாக்கம் சற்று பலவீனமடையும்.மேலும் சனியின் பார்வை சற்று சுபத்துவம் ஆகி இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட அந்த மந்த நிலை நீங்கி, சற்று சுறுசுறுப்பாவீர்கள்.

மேலும் தந்தை வழி தந்தை வழி சொத்துக்கள் சிறப்படையும்.

மகரம் ராசியில் குரு/சனி சேர்க்கை உங்களுடைய சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு வீடு வாகனம் யோகங்கள் ஏற்படும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது சிறந்தது.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இதுவரை தங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் குரு பார்வையானது, சற்று விலகப் போகிறது..

மேஷம், மிதுன ராசி அன்பர்களை போலவே, உங்களுக்கும் சுபகாரியங்கள் தாமதம் ஆகலாம். ஆனால் முயற்சிகளை விட வேண்டாம்.

தற்போது உங்களுடைய ,சத்ரு ஸ்தானத்தில் குரு பகவானும் சனி பகவானும் சேர்ந்திருப்பதால், சனி சுபத்துவம் ஆகி, எதிரிகளின் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிப்பார் மேலும் எட்டாம் இடத்தை பார்ப்பதால் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேலோங்கும் ஆன்மீக சிந்தனையும் சிறக்கும்.

மேலும் சேவை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு சிறிது தொழில் பிரயாணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் அதற்கேற்ற பயன்களும் உண்டு.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில், குரு பகவானும் சனி பகவானும் பிரவேசிக்கிறார்கள்.

ஆகையால் இந்த அமைப்பு, கணவன் மனைவி உறவில் சற்று நெருக்கத்தை ஏற்படுத்தும்.மேலும் சிறிது லாபங்களை எதிர்பார்க்கலாம்.

சிலருக்கு புத்திர பாக்கியம் சிறிது தாமதம் ஆகலாம்.நண்பர்களிடமோ அல்லது பிறரிடம் வீண் வாக்குவாதம் செய்து பகையை சம்பாதித்துக் கொண்ட இவர்கள், தற்போது பகை நீங்கி, அவர்கள் மூலம் சிறு ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் இடம், பொருள் ஏவல் பார்த்து பேசுவது அல்லது வாக்களிப்பது இவர்களுக்கு இப்போது பயனளிக்கும்.

இந்த அதிசார குரு வின் பெயர்ச்சி நேரடியாக பயனளிக்காமல் மறைமுகமாக தன்னுடைய பலன்களை சனிபகவான் மூலமாக வழங்குவார். ஆகையால் நண்பர்கள் இந்த பதிவை உள்வாங்கி, படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

துலாம்

துலா ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் குரு சற்று பலவீனம் பெற்று சனிபகவான் சுபத்துவம் அடைகிறார்.

இதன் மூலம் உங்களுக்கு வீட்டில் சற்று நிம்மதி கிடைக்கும் எதிரிகள் தொல்லைகள் இருந்து விடுபடுவீர்கள்.

வேலை பளுவில் இருந்து சற்று ஓய்வு கிடைத்து,நிம்மதி பெறுவீர்கள் மேலும் சனிபகவான் சுபத்துவம் ஆகி பத்தாம் பார்வையாக, உங்களுடைய லக்னத்தை பார்வை இடுவதால்,உங்களுக்கு முன்பு இருந்த சோம்பல் நிலை நீங்கி சற்று சுறுசுறுப்பு அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே... உங்களுடைய முயற்சி வீரிய ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெற்று இருப்பதால் உங்களுடைய முயற்சிகள் கை கொடுக்கும் காலமிது.

தாமதமான புத்திர பாக்கியங்கள் தம்பதிகளுக்கு கிடைக்கப்பெறும். மேலும் தந்தையாரின் உடல் நலத்தை கவனம் செலுத்துவீர்கள்.

அவர்கள் உடல் நலமும் நன்றாக தேறும் காலமிது. மேலும் உங்களுக்கு இருந்த அந்த தூக்கமின்மை பிரச்சனைகள் தற்போது சரியாகும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே...உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில், வாக்கு ஸ்தானத்தில் குரு பலவீனமாகி, சனி சுபத்துவம் பெறுவதால் இதுவரை இருந்த வாக்குவாத பிரச்சனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் சற்று குறையும்.

உங்களுடைய உடல் நலமும், உங்களுடைய தாயின் உடல்நலமும் முன்னேற்றம் அடையும். இதுவரை ஏதும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பிரச்சினைகள் விலகும் மேலும் லாபம் சார்ந்த விஷயங்களிலும் நன்மை உண்டு.

மகரம்

மகர ராசி அன்பர்களே...உங்களுடைய ராசியிலேயே குரு பகவான் பலவீனமாகி சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் உங்களுடைய முயற்சி சற்று அதிகமாக இருக்கும்.

இந்த காலகட்டங்களில், இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட சில சலசலப்பு விஷயங்கள் சற்று குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.

மேலும் தொழில் சார்ந்த பிரச்சனைகளும், அதில் இருந்த மந்த நிலையும் தற்போது குறைந்து, அதில் மறுமலர்ச்சி காணப்படும்..

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில், குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் இதுவரை உங்களுக்கு இருந்த அலைச்சல், மனக்கஷ்டங்கள்,தொடர் மற்றும் தொலைதூரப் பயணங்கள் குறைந்து, அவை சுப விரயங்களாகவும், ஒரு பயனுள்ள பிரயாணங்கள் ஆகவும் மாறும் காலம் இது.

கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் சார்ந்த விஷயங்களில் சற்று நெருக்கம் ஏற்படும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் சற்று விலகும்.

ஆக இவர்களாகவே ஆன்மிக பயணங்கள் மேற்கொண்டு அதை சுப விரயமாக மாற்றினால் இவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

மீனம்

மீன ராசி அன்பர்களே... உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் நிறைந்த லாபங்கள் உண்டு.

சனிபகவான், உங்களுடைய ராசியை பார்ப்பதால் அதற்கு முன்பு இருந்த அந்த மந்த நிலை குறைந்து, இப்போது சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மேலும் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால், உங்களுக்கு நிறைந்த அதிர்ஷ்டமும் உண்டு அதுமட்டுமின்றி உங்களுக்கு உடல்நல குறைபாடுகள் சற்று குறைந்து காணப்படும் காலம் இது.

சனி சற்று சுபராகி உங்களுடைய புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அதற்கு முயற்சிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்