மே மாதம் முடிவுக்கு வரும் கொரோனா வைரஸ்! அன்றே கணித்த இந்திய சிறுவன்... கிரகண சேர்க்கை தான் காரணமா?

Report Print Kavitha in ஜோதிடம்

சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி கொண்டு வருகின்றது கொரோனா வைரஸ். இதனால் இன்று வரை லட்ச கணக்கான பேர் உயிரிழிந்துள்ளார்.

இந்நிலையில் ஜோதிடப்படி இந்த வைரஸ் பற்றி கடந்த ஆகஸ்ட் மாதமே அபிக்யா ஆனந்த் என்ற ஒரு இந்திய சிறுவன் கணித்திருக்கிறார்.

அபிக்யா ஆனந்து தனது ஜோதிட ஆய்வின் படி நவம்பரில் வைரஸ் பாதிப்பு உலகத்தை பீதியடைய வைக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

அதில் இந்த வைரஸ் பாதிப்பு 2020 ஏப்ரலில் தீவிரமடையும் என்றும் மே மாதம் 29ஆம் தேதி முடிவுக்கு வரும் என்றும் கணித்திருக்கிறார்.

அதாவது மார்ச் 29 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை கிரகங்களின் கூட்டணி சேர்க்கை மற்றும் பார்வையால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகும் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது அபிக்யா ஆனந்து ஜோதிட ஆய்வின் படி என்ற கூறியுள்ளார் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

கிரகண சேர்க்கை
 • கடந்த நவம்பர் மாதம் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.
 • நவம்பர் 30ஆம் தேதி தனுசு ராசியில் சந்திரன், சுக்கிரன் குரு, கேது, சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இணைந்தன. பின்னர் சுக்கிரன் இடப்பெயர்ச்சி அடைந்தாலும் டிசம்பர் மாதத்தில் அதே தனுசு ராசியில் சூரியன், சனி, கேது, குரு, சந்திரன், புதன், ஆகிய ஆறு கிரகங்கள் இணைந்தன.
 • இன்றைய தினம் திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் அதிசாரமாக மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
 • ஏற்கனவே சனிபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்க, அதே நேரத்தில் செவ்வாயும் இணைந்துள்ளார்.
 • மகரம் ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
 • மார்ச் 31ஆம் தேதி சந்திரன் மிதுனம் ராசியில் நுழைகிறார். மாலையில் திருவாதிரை நட்சத்திற்குள் நுழையும் சந்திரன் அங்கு ஏற்கனவே இருக்கும் ராகு உடன் சஞ்சரிக்கப்போகிறார்.
 • இந்த கிரகங்களின் சேர்க்கை பார்வையால் சளி தொந்தரவுகள் அதிகமாகும். ராகுவினால் இந்த பாதிப்புகள் எளிதாக மக்களுக்கு பற்றி பரவும்.
 • மார்ச் 29 இரவு முதல் ஏப்ரல் 2 வரையிலான காலகட்டத்தில் நோய் தாக்குதல் அதிகமாகி பரவும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே நல்லது.
இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?
 • துளசியை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
 • சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது நல்லது.
 • தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் மஞ்சள், இஞ்சி, வேப்பிலை சேர்த்து ஆவி பிடிப்பது சளி தொந்தரவுகள் தாக்காமல் காக்கும்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்