வைரஸ் பற்றி ஜோதிட ரீதியான கணிப்பு! வைகாசியில் 3 கிரகங்களின் கூட்டணியால் ஆபத்து ஏற்படுமாம்?

Report Print Kavitha in ஜோதிடம்

கொரோனா வைரஸ் பற்றி ஜோதிட ரீதியான கணிப்புகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

கிரக கூட்டணி

சனி பகவான்மே 11 முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை மகர ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.

மே 14ம் தேதி குரு பகவான் வக்ர நிலை அடைகிறார். ஜூன் 29 வரை வக்ர கதியில் மீண்டும் தான் இருக்கும் தனுசு ராசிக்கு செல்கிறார்.

புதன் பகவான் ரிஷப ராசியில் ஜூன் 18 முதல் ஜூலை 12 வரை வக்ர நிலை அடைகிறார்.

ராகு பகவான் தற்போது மிதுனம் ராசியில் சஞ்சரித்தாலும் மிருகஷீரிடம் நட்சத்திற்கு மாறியுள்ளார்.

அதோடு வைகாசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன் ரிஷபத்தில் கூட்டணி சேருகின்றன.

அதுமட்டுமல்லாது மகரத்தில் உள்ள சனியும், குருவும் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு நகர்கின்றன. சுக்கிரனும் வக்ரமடைகிறார்.

மே 13ஆம் தேதி முதல் ரிஷபம் ராசியில் உள்ள சுக்கிரன் வக்ர கதியில் சஞ்சரிப்பார். மே 14ஆம் தேதி முதல் மகரம் ராசியில் அதிசாரமாக உள்ள குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார்.

தனுசு ராசியில் ஆறு கிரக கூட்டணி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூட்டணி சேர்ந்தன. அப்போது நிகழ்ந்த சூரிய கிரகணமும் மிகப்பெரிய கொள்ளை நோயை சீனாவில் தோற்றுவித்தது.

கொரோனா வைரஸ் என்ற அந்த கொள்ளை நோய் இந்தியாவிற்குள் வரும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினையில்லாமல் இருந்தது.

மகரத்தில் 3 கிரகங்கள்

மிதுனம் ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விரையில் இதன் தாக்கம் குறையும் என்று ஜோதிடர்கள் ஆறுதல் செய்தி சொன்னாலும் குரு பகவான் கடந்த மார்ச் மாதம் முதல் அதிசாரமாக மகரம் ராசியில் சனியோடு இணைந்துள்ளார் கூடவே செவ்வாய் பகவானும் இணைந்து ஒருவித கலவர மனநிலையை ஏற்படுத்தியோடு கொரோனாவின் வீரியத்தை அதிகப்படுத்தியது.

ரிஷபத்திற்கு மாறும் ராகு

முக்கிய கிரகங்களின் வக்ர சஞ்சாரத்தினால் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாவதோடு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையத்தொடங்கும்.

ராகு பகவான் செப்டம்பர் மாதம் மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கேதுவும் தற்போது உள்ள தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

இந்த கிரகங்களின் இடமாற்றம் நோய் பாதிப்பை படிப்படியாக குறைக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்