இன்று இரவு ஆரம்பமாகுகின்றது சந்திரகிரணம்! கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்?

Report Print Kavitha in ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழப் போகின்றது.

இரண்டாவது சந்திர கிரகணம் இன்று 5 ஆம் தேதி இரவு ஆரம்பித்து, ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும்.

ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் இன்று நடக்கவுள்ள சந்திர கிரகணம் ஒவ்வொரு ராசியின் மீதும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், இந்த கிரகணத்தினால் வெற்றியின் உச்சத்தைத் தொடுவீர்கள். மேலும் உங்களின் தொழில் வாழ்க்கையில் சாதகமான திருப்பத்தைக் காணக்கூடும்.

இருப்பினும், குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். வீட்டில் எந்த ஒரு வாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளையும் முயற்சி செய்து தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களின் பண வாய்ப்புக்கள் அதிகரிக்கும் மற்றும் உங்களின் பெரும்பாலான திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேற்றப்படும். அதே சமயம் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், யாருடனும் எந்தவிதமான சண்டையையும் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும். இதர விஷயங்கள் அதன்பின் தானாக வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள், கிரகணத்தின் போது எந்தவிரமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.

விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் மற்றும் ஆரோக்கியமும் பெரும் கவலையாக இருக்கும். எனவே இன்று வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நல்ல நேரம் அல்ல. நிதி இழப்புக்கள், ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை உங்களை பாடாய் படுத்தும். உங்களை நன்கு கவனித்து பாதுகாப்பாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் முந்தைய முதலீடுகளில் இருந்து லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.

இருப்பினும், குடும்பத்தில் சிறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் எழக்கூடும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், உபயோகிக்கும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். வருத்தத்திற்கு வழிவகுக்கும் விஷயங்களை நீங்கள் செய்யலாம் அல்லது கூறலாம்.

உங்கள் வேலையில் மிகவும் பொறுமையுடன் இருங்கள் மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

வேலைப்பளு அல்லது குடும்ப தகராறு காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் மனநிலை மோசமடையக்கூடும்.

இம்மாதிரியான சூழ்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது மற்றும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! அளவுக்கு அதிகமாக யோசிக்காதீர்கள். மனதிற்கு தேவையான அமைதியைக் கொடுங்கள்.

இருப்பினும், முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது, ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு சிந்திக்க மறவாதீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு புரிதலை உருவாக்குங்கள். இந்த நேரத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும்.

உங்கள் உடல் மற்றும் நிதி ஆரோக்கியம் மோசமடையக்கூடும். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்கள் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள்.

உங்கள் எதிரிகளைப் பற்றி எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள். ஆனால் இந்த நேரத்தில் அவர்களை எதிர்கொள்ள வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! தேவையில்லாத பிரயாணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உங்களுக்கு விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது.

உங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்