ஆனி மாத ராசி பலன் 2020 : இந்த மாதம் மிகப்பெரிய நிகழ போகும் கிரக மாற்றம்... இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்க!

Report Print Kavitha in ஜோதிடம்

சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி.

ஆனி மாதம் மிதுன மாதம். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியனின் பயணம் தொடங்குகிறது

கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தில் இந்த மாதம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்க்கிறது.

அந்தவகையில் 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கிரக மாற்றம்

  • சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள செவ்வாய் ஆனி 4 ஆம் தேதி ஜூன் 18 ஆம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார்.

  • அதே நாளில் மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார்.

  • ராகு மிதுனத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார்.

  • குரு பகவானும், சனிபகவானும் மகர ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றனர்.

  • ஆனி 15ஆம் தேதி முதல் குரு மீண்டும் தனுசு ராசிக்கு வருகிறார்.

  • 11ஆம் தேதி சுக்கிரன் வக்ர கதி முடிகிறது. 28ஆம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது.

  • கேது தனுசு ராசியில் மீண்டும் குருவோடு இணைந்து பயணிக்கப் போகிறார்.

மேஷம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சூரியன் ராகு உடன் இருப்பது அதிக நன்மை. குரு, சனி, புதன், சுக்கிரன் என நான்கு கிரகங்கள் வக்ரம் பெற்று வலு குறைந்து இருக்கின்றனர்.

உங்களின் பண பிரச்சினை தீரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ராசி நாதன் 12ஆம் வீட்டில் அமர்வது சுமார்தான் எந்த பொருளும் வாங்கதீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம்.

மாணவ மாணவிகளுக்கு அற்புதமாக உள்ளது. படிப்பில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரிகள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருந்தால் லாபம் கிடைக்கும். தொழிலில் கவனம் இல்லாவிட்டால் நஷ்டம்தான். விழிப்புணர்வு இருக்க வேண்டிய மாதம்.

ரிஷபம்

சூரியன் இரண்டாமிடத்தில் ராகு உடன் சஞ்சரிப்பதால் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். கவனமாக பேசுங்கள் இல்லாவிட்டால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கை சில பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏற்படுத்துவார்.

வீட்டில் தம்பதியரிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கும் கவனமாக இருக்கவும். வேலைக்குச் செல்லும் போது கவனமாக பாதுகாப்புடன் செல்லவும். நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கவனம் தேவை.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

இல்லத்தரசிகளுக்கு வீட்டிற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்

உங்கள் தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் வளர்ச்சியும் வெற்றியும் வரப்போகிற மாதம். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் புதன் மற்றும் ராகு உடன் இணைந்து இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும்.

சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் மன நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். கடவுள் அருளினால் கவலைகள் பறந்தோடும்.

கடகம்

உங்கள் தன ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் பின்னர் உடனுக்குடன் சரியாகும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும்.

வீண் விரைய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு சொந்த நாட்டிற்கு திரும்பும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல மாதம்.

புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பார்கள். இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான மாதம் என்றாலும் அவ்வப்போது சோர்வும் களைப்பும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.

மருத்துவர் ஆலோசனை அவசியம். மாத முற்பகுதியில் பணவரவு அதிகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் மருத்துவ செலவுகள் அம்மா அப்பா, வாழ்க்கைத்துணைக்கு செலவு செய்யலாம்.

சிம்மம்

உங்கள் ராசி நாதன் சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. திடீர் பண வருமானம் வரும். வரவே வராது என்று நினைத்த பணம் உங்களை தேடி வரும்.

உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவினால் திக்கு முக்காடி போவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் திடீர் சலுகை கிடைக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு கடையை விரிவு படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல மாதம் அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சில மாதங்களாக ஓய்வில் இருந்த கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சலுகைகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வேலை விசயமாக செல்லும் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

கன்னி

உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

பத்தில் சூரியன் பதவி உயர்வை கொடுப்பார். நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்து மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நீண்ட நாட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர்கள் ஆலோசனையை பெறுவது அவசியம்.

உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். மனதிலும் உடலிலும் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மை நடைபெறும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

கடன் சுமைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

இந்த மாதம் உங்களுக்கு சுபமான மாதம் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உங்களை தேடி வரும்.

வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உயர்கல்வி படிப்பில் சில தடைகள் வரலாம் ஆசிரியர்களின் ஆலோசனை அவசியம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாமல் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

பண வரவு அதிகரிக்கும் கூடவே சுப செலவுகளும் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

சில பிரச்சினைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். அதே நேரத்தில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும் விட்டுக்கொடுத்து போங்கள்.

பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு புத்திய பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.

வீட்டிற்குத் தேவையான பணம் கிடைப்பதால் மன நிறைவு ஏற்படும். பணம் நகைகள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாய்ப்புகள் திடீரென கை நழுவிப்போவதால் சில நேரங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

தனுசு

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் அலுவலக இடமாற்றம் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அவ்வப்போது ஊடலுடன் கூடல் வரும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சாந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும்.

திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சின்ன காயம் வந்தால் கூட உடனே கவனிங்க. மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

மகரம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.

ஆறாம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், ராகு என நான்கு கிரகங்கள் தொடக்கத்தில் இணைவது பாதிப்பை தராது. சூரியன் மட்டும் அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வை தருவார்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட ம் கைகூடி வரும்.

வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அடிக்கடி பிரச்சினை வரும் பேச்சில் கவனமாக இருங்க. திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் கூடும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கும்பம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செழிப்பான காலம். உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு திருப்தியை தரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பெண்களால் நன்மை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும்.

உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கை கூடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும். புதன் இடமாற்றத்தால புத்திக்கூர்மை அதிகரிக்கும்.

வேலை மாற்றம், தன லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமையும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் கால கட்டம். வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, காது மூக்குத் தொண்டை வழியாக பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

மீனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். பிள்ளைகளால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. தேவையான பணம் கிடைக்கும்.

சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்கலாம். உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த மாதம் உங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம்.

அவ்வப்போது சோர்வு மந்தநிலை வரும் கவனமாக இருங்கள். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் வரலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்