ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020: இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்!

Report Print Kavitha in ஜோதிடம்
61714Shares

உங்கள் மாத ஜாதகத்தைப் தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் எதிர்காலம் தொடர்பான முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

அந்தவகையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.

மேஷம்

தனது வேகத்தால் காரியங்களை சாதிக்கும் மேஷ ராசி அன்பர் களே! இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

குருவின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியும்.

தொழில் ஸ்தானாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். பாக்கியாதிபதி குரு ராசியைப் பார்ப்பது சிறப்பு.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பது பலமாகும். குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் கூட மறையும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகள் முன்னேற்றத்தில் இருந்த தடை அகலும். பெண்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைத்துறையினர் பல்வேறு விதமான பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

பரிகாரம்: குன்றின் மேல் இருக்கும் குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

ரிஷபம்

தனது வாக்கினால் வாழ்வில் வசந்தத்தைப் பெறும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்த வீண் மனஸ்தாபங்கள் நீங்கும்.

தன ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அமர்ந்து அருள்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். பெண்களுக்கு: வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருள் சேர்க்கை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு: தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள். அரசியல்துறையினர் உங்களின் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள்.

அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு: திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

மிதுனம்

தனது நிதானத்தால் காரியங்களில் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் இருக்கிறார்.

ஏனைய கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு கூடும்.

கலைத்துறையினருக்கு: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்தபணம் வந்து சேரும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர மனக்குழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

கடகம்

ரத்த உறவுகளால் அனுகூலம் பெறும் கடக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் புதன் இருவரும் அலங் கரிக்கிறார்கள்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும்.

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும்.

லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு: எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.

கலைத்துறையினருக்கு: பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும்.

அரசியல்வாதிகளுக்கு: நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்.

பரிகாரம்: அபிராமி தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

சிம்மம்

தன்னம்பிக்கை சுடராய் வாழும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் அயனசயன போக ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பாதசார சஞ்சாரத்தால் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு குறையும். பெண்களுக்கு: எந்த விஷயத்திலும் கலந்தாலோசனை செய்து முயற்சிப்பது நன்மை தரும்.

பணத் தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு: சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.

அரசியல்துறையினருக்கு மக்களுக்காக சேவை செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவீர்கள்.

ஆன்மீக எண்ணங்களும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

பரிகாரம்: அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வணங்கிவர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கன்னி

அறிவுக்கூர்மையால் மற்றவர்களை அசத்தும் கன்னி ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் மிக அனுகூலமாக லாபஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.

பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு: பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களைப் படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி.

பரிகாரம்: வாராகி தேவியை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

துலாம்

தொழிலில் நுணுக்கங்களை அறிந்து செயல்படும் துலா ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் மிக அருமையான இடத்தில் சஞ்சரிக்கிறார்.

எளிதில் மற்றவரைக் கவரும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். பணவரத்து அதிகரித்தாலும் சுபச்செலவுகளும் அதிகரிக்கும்.

எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குருவின் சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். கலைத்துறையினருக்கு: மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

தெளிவான முடிவு களால் வாழ்க்கையில் வெற்றியைக் காணும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணியஸ்தானத்தில் இருக்கிறார்.

வாழ்க்கையில் முன்னேற்றமடைய திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் வெற்றி அடையும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் இருக்கும் தடை தாமதம் நீங்கும். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு: உறவினர்களிடம் பேசும் போது கவனமாகப் பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.

நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு: கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர பிரச்னைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

தனுசு

முதுபெரும் நம்பிக்கைகளின் மீது மரியாதை கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக சேர்க்கையால் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். திருமண காரியங்கள் கைகூடும்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

பரிகாரம்: நவகிரஹ குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்னை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.

மகரம்

சட்டத்தின் நுணுக்கங்கள் தெரிந்த மகர ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் ராசியை பார்க்கும் சூரியன் புதனால் மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மனதில் இருந்த சஞ்சலம் அகலும். பணதேவை ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும்.

பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு: காரிய வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது. கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

பரிகாரம்: நவகிரஹ சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலைப் பளு குறையும்

கும்பம்

உண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் சுக பாக்கியாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது.

அனுபவ அறிவும், செயல்திறனையும் பயன்படுத்தி காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு: மேலிடத்துடன் அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

மீனம்

வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த காலகட்டத்தில் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப் பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும்.

மனதில் துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறை யினருக்கு: கடன் அடையும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களுக்கு லாபம் ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை சரியாகச் செய்வீர்கள்.

வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்