2021 ஜனவரி மாதம்! எந்த ராசிக்காரர்களுக்கும் அட்டகாசமான மாசமாக இருக்கப் போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்
1632Shares

2021 ஜனவரி மாதம் கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளவோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் வெற்றியைப் பெற்றாலும், சில சமயங்களில் துன்பத்தை சந்திப்பீர்கள்.

வேலையைப் பற்றி கூற வேண்டுமானால், வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்கு பின் வெற்றி காண்பார்கள்.

நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படலாம். இதனால் உங்களின் மனநிம்மதி அதிகரிக்கும். அலுவலகத்தில் இம்மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். ஆனால் நடுவே சில சிக்கல்களை சந்திக்கலாம்.

இக்காலத்தில் உயர் அதிகாரிகளுடன் வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் விளைவாக மனரீதியாக வருத்தப்படுவீர்கள். உயர் அதிகாரிகளைத் தவிர மற்ற சகாக்களுடன் சண்டைப்போடுவதைத் தவிர்த்திடுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை, ஜனவரி மாதம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

பணத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நன்றாக இருக்காது. இக்காலத்தில் பெரிய செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இருப்பினும் வேலையுடன் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7, 10, 29, 34, 47, 58

அதிர்ஷ்ட நாள்: திங்கள், ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமை

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, அடர் மஞ்சள், சிவப்பு, நீலம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த மாதம் பொருளாதார முன்னணியில் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். பணத்தை விஷயங்களில் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது.

பணிபுரிபவர்கள், கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலனை தற்போது பெறுவீர்கள். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராயின், நீங்கள் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம்.

வணிகம் செய்பவர்களுக்கு சவாலான காலமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் பாதையில் பல தடைகள் இருக்கலாம். வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டிருந்தால், அதைத் தவிர்த்திடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், இந்த மாதம் குடும்ப உறுபினர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. நீங்கள் தனிமை உணர்வீர்கள்.

இம்மாத இறுதியில் உங்கள் துணையுடன் தகராறு ஏற்படக்கூடும். இது உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதுதவிர, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட எண்: 9, 11, 25, 36, 44, 53

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், திங்கள், புதன், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கிரீம், இளஞ்சிவப்பு, நீலம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! வேலையைப் பொறுத்தவரை, இம்மாதம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறலாம். இக்காலத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள் மற்றும் செய்யும் வேலையாலும் திருப்தி அடைவீர்கள்.

வியாபாரம் செய்பவர்கள், இந்த மாதம் ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும். உங்களின் வணிகத்தை உருவாக்க, புதிய உத்திகளை உருவாக்குவீர்கள்.

இது உங்களுக்கு சரியான முடிவுகளைத் தரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவராக இருந்தால், இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கலாம். திருமணமானவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். பண நிலைமை வலுவாக இருக்கும்.

உங்களின் வாழ்வை சிறப்பாக மாற்ற தொடர்ந்து கடினமாக உழைப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதத்தில் தலைவலி, வாய்வு பிரச்சனை, தூக்கமின்மை போன்றவற்றை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4, 8, 23, 30, 49, 52

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, புதன், சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு, நீலம், கிரீம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த மாதம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறலாம் அல்லது விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம்.

வேலையை மாற்ற நினைப்பவர்கள் இந்த காலத்தில் ஒரு நல்ல சலுகையைப் பெறலாம். வர்த்தகர்கள் மாத ஆரம்பத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

இந்த மாதத்தில் கூட்டாக செய்யும் எந்த வேலையும் உங்களுக்கு நன்றாக பயனளிக்கும். ஆனால் குறுக்குவழிகளில் செல்லாமல் இருப்பது நல்லது.

இல்லாவிட்டால் சேதத்தை சந்திக்கக்கூடும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருங்கள். இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7, 14, 23, 34, 48, 55

அதிர்ஷ்ட நாள்: திங்கள், சனிக்கிழமை, புதன், வெள்ளி

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள், கிரீம், சிவப்பு, வெள்ளை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த மாதம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் சற்று அதிகரிப்பதைக் காண்பீர்கள். திடீரென்று உங்கள் வாழ்க்கைத் துணையின் இயல்பில் சில பெரிய மாற்றங்களைக் காணலாம்.

சிறு விஷயங்களுக்காக உங்களிடையே வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் வீட்டுச் சூழல் பெரும்பாலும் பதட்டமாக இருக்கும். மன அழுத்தம் காரணமாக, உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

பணிபுரிபவர்களுக்கு, இந்த மாதத்தின் ஆரம்பம் சற்று பிஸியாக இருக்கும். இக்காலத்தில் பல முக்கிய பொறுப்புக்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இருப்பினும், உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வணிகர்கள் இந்த மாதத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடும்.

பண நிலைமை நன்றாக இருக்கும். நிதி குறித்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால், பெரிய பிரச்சனையை சந்திக்கமாட்டீர்கள். இம்மாத இறுதியில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5, 10, 17, 24, 30, 49, 57

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, வெள்ளி, புதன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, பச்சை, சிவப்பு, ஆரஞ்சு

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இம்மாத தொடக்கத்தில் பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் ஓரளவு அதிருப்தி அடைவார்கள். இக்காலத்தில் நீங்கள் அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். இருப்பினும் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

நேர்மறை எண்ணங்களுடன் கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். கூட்டாண்மை தொழில் செய்பவர்கள், பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

உங்கள் கூட்டாளரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தேவையற்ற செலவுகளை மாதத்தில் நடுவே செய்ய வேண்டியிருக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், தந்தையின் உதவியுடன் பெரிய பிரச்சனை தீர்க்கப்படும். திருமணமானவராக இருந்தால், இக்காலத்தில் உங்கள் துணையுடனான உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட எண்: 4, 16, 27, 33, 41, 50

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, வியாழன், சனிக்கிழமை, புதன்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். நீங்கள் பணிபுரிபவராயின் மாத தொடக்கம் உங்களுக்கு நன்றாக இருக்காது. இக்காலத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

மேலும் உங்களின் பணிகள் எளிதில் முடிக்கப்படாமல் இருக்கும். இக்காலத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தமும் அதிகமாக இருக்கும்.

வர்த்தகர்கள் சிறிய இழப்பை சந்திக்கக்கூடும். ஆனால் அதை சமாளிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் தொழிலதிபராக இருந்தால், முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். இதனால் நீங்கள் மனச்சோர்வடைவீர்கள். இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துவிடலாம்.

எனவே துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் உடல் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4, 12, 23, 37, 44, 59

அதிர்ஷ்ட நாள்: புதன், சனி, வியாழன், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மெரூன்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி கிடைக்காது.

பொருளாதார முன்னணியில், இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த காலத்தில், கிரகங்களின் நல்ல விளைவுகள் காரணமாக, உங்கள் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும்.

பணிபுரிபவர்களுக்கு, இம்மாத தொடக்கம் உங்களுக்கு கொஞ்சம் குறைவான அதிர்ஷ்டமே இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில சவால்கள் இருக்கலாம். இக்காலத்தில் குடும்பத்தினர் உங்களிடம் அதிருப்தி அடைவார்கள்.

அவர்களின் ஆதரவைப் பெற சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாத இறுதியில், உங்கள் துணையின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7, 11, 20, 33, 45, 54

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், திங்கள், ஞாயிறு, புதன்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு, இளஞ்சிவப்பு, நீலம்

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த மாதம் கிரகங்களின் நல்ல நிலைகளின் காரணமாக எதிலும் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவராக இருந்தால், பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. இம்மாதம் கடினமான பணியும் எளிதில் முடிக்கப்படும்.

வர்த்தகர்கள் இக்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நன்மைகளைப் பெறுவார்கள். வெவ்வேறு மூலங்களில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இக்காலம் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும்.

உங்கள் அன்புக்குரியவர்களுடனான உறவு பலப்படும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

உங்கள் தந்தையிடமிருந்து நிதி நன்மைகள் சாத்தியமாகும். இதுதவிர சொத்து தொடர்பான தகராறு ஏற்பட வாப்புள்ளது. ஆரோக்கியத்தில் எவ்வித பெரிய பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் உணவுகளில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 10, 27, 31, 44, 56

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி, வியாழன், புதன்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள்

மகரம்

மகர ராசிக்காரர்களே! வேலை முன்னணியில் இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்காது. பணிபுரிபவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள். பணியிடத்தில் ஒருவருடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் இத்தனை நாட்கள் நீங்கள் செய்த கடின உழைப்பு வீணாகிவிடும். வேலையை விட நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை கைவிடுவது நல்லது. இந்த மாதம் வர்த்தகர்களுக்கு நன்றாக இருக்கும்.

இந்த காலத்தில் நீங்கள் வீணாக ஓட வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் வீட்டில் பதற்றம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் காண்பீர்கள்.

உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் ஆழமாக இருக்கலாம். நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 5, 10, 28, 34, 47, 58

அதிர்ஷ்ட நாள்: சனி, திங்கள், புதன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள், மெரூன், வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த மாதம் வேலை முன்னணியில் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். இக்காலத்தில் உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைக் காண்பீர்கள். வேலை செய்பவர்கள், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதே சமயம் அரசு வேலைகளை விரும்புவோருக்கும், அந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் முன்பை விட இக்காலத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

இருப்பினும் இதனால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமானது. பணத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை பணத்தை சேமிப்பதில் கவனத்தை செலுத்துங்கள்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு தீவிரமடையும். இந்த மாதத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2, 17, 20, 38, 45, 50

அதிர்ஷ்ட நாள்: புதன், வியாழன், திங்கள், சனி

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு மகத்தான வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். பொருளாதார முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

இந்த காலத்தில் பல வகையான நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நன்கு சிந்தித்து பணிபுரிந்தால், கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தலாம்.

இக்காலத்தில் முதலீடு செய்தால், எதிர்பார்த்ததை விட அதிகமாக பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, ரியல் எஸ்டேட்டின் எந்தவொரு சிக்கலான முடிவும் உங்களுக்கு ஆதரவாக வரலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வழி திறக்கும்.

நீங்கள் பணிபுரியும் முறையின் சரியான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் பணிகள் ஏதேனும் தடைபட்டால், உங்கள் உயர் அதிகாரிகள் தங்கள் முழு ஆதரவையும் தருவார்கள். இந்த மாதம் வர்த்தகர்களுக்கு நல்லதாக இருக்கும்.

நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், அதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒருவேளை ஆரம்பித்தால் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற மாட்டீர்கள்.

உங்களின் வீட்டுச் சூழல் நன்றாக இருக்க விரும்பினால், உங்கள் பேச்சில் இனிமையைக் கொண்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7, 15, 26, 34, 41, 58

அதிர்ஷ்ட நாள்: சனி, திங்கள், செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்