நான்கு கிரகங்கள் கூட்டணி... தை மாத்தில் மோசமான விளைவுகளை சந்திக்ப்போகும் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Report Print Kavitha in ஜோதிடம்
576Shares

​சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மகர ராசியில் சூரியன், குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இதன் அடிப்படையில் தை மாதத்தில் எந்தெந்த ராசியினர் சில மோசமான பலன்களைப் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.

மிதுனம்

பொதுவாக மிதுன ராசிக்கு தைமாதம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பது அடிப்படை விஷயம் என்றாலும், இந்த முறை எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.

சூரியனுடன் குரு, சனி, புதன் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்களுக்குச் சிறப்பான பலன் கிடைக்கும் என்றாலும், பெரிய பதவியில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள் அதிகாரிகளாக இருப்பவர்கள் போன்றோர் எந்த செயலை செய்தாலும், கையெழுத்துப் போடும் போதும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

நீண்ட தூர பயணங்களின் போது இரவு பயணத்தை தவிர்ப்பது அவசியம். அஷ்டம சனியாக இருப்பதால் உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கு அவர்களுடன் விளையாடுவது, பேசுவது அவசியம். குடும்ப பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் லாபம் தருவதாக இருந்தாலும், எதிலும் படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். இந்த மாதம் முழுவதும் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

​துலாம்

பல நன்மைகள் உண்டாகும் என்றாலும் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசிய நிலை உள்ளடு. நீங்கள் அதிகம் உழைத்தால் மட்டுமே முன்னேற்றத்தைப் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கும். இந்த மாதம் முழுவதும் அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிது இருக்கும். அலைச்சல் உண்டாகும்.

சனி பகவானின் அமைப்பு உங்களுக்கும், பெற்றோருக்கும் உடல் நலனில் பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. உங்களுக்காகவோ மற்றவருக்காகவோ கையெழுத்திடும்போது படித்து பார்த்து கவனமாக செயல்பட வேண்டும்.

பேச்சு, செயலில் கவனம் தேவை. யாரிடம் என்ன பேசுகிறோம், எதை கூறுகிறோம் என்பதில் கவனம் தேவை.

தொழில் செய்பவர்களுக்கு அதிக பயணம் செய்ய வேண்டி வரும். உற்சாக நிலை இருக்கும். குரு பகவானால் புதிய தொழில், வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி பகவானால் உறவில் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். சூரியனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாபம் கூடுதலாக இருந்தாலும் ஆரோக்கியம் பிரச்னை தருவதாக இருக்கும்.

உங்களின் கவனக்குறைவான செயல்பாட்டால் பெரிய பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாகச் செயல்படவும்.

மகரம்

அனைத்து வகையிலும் கவனமாகவும். அலைச்சலுடன் கூடிய மாதமாக இருக்கும். எந்த விஷயத்தை நீங்கள் செய்தாலும் உங்களின் முழு உடல் உழைப்பை கொட்ட வேண்டி இருக்கும். நிம்மதியாக சிறிது நேரம் கூட உங்களால் உட்கார முடியாத நிலை ஏற்படலாம். இருப்பினும் உங்கள் மன உறுதியை விட்டு விட வேண்டாம்.

ராகு 5ல் இருப்பதால் பெற்றோர் பிள்ளையிடையே பிரச்னை ஏற்படலாம். பிரச்னைகளை கைவிட்டு ஆறுதலாக செயல்படுங்கள்.

உங்களுக்கு தொழில், வியாபாரத்திற்காக கடன் பெற முயற்சி செய்தவர்களுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் உங்களின் தகுதி அறிந்து கடன் வாங்குவது அவசியம். ஏழரை சனி நடப்பதால் பெரிய கடன் தொகையைப் பெறுவது சிக்கலை உண்டாக்கலாம்.

சிறிய கடன் மூலம் தொழில் தொடங்கலாம். புதிய தொழில் வாய்ப்பு, வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் கடன் வாங்குதல், தொழில் தொடங்குவதற்கு முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி ஆலோசிப்பது அவசியம்.

கும்பம்

சுப நிகழ்விற்கான பேச்சு நடைபெறும். நல்லபடியாக நடந்து முடியும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு தாய் வழி சொத்து, பயன்கள் ஏற்படும். அதே சமயம் உங்கள் ராசிக்கு சுற்றுலா, ஆன்மிக பயணம், உத்தியோகம், தொழில் தொடர்பான பயணங்கள் அதிகளவில் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக உங்களின் சேமிப்பு கரையக்கூடும்.

ராகுவால் பெண்களுக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம். கேதுவால் பயணத்தில் பிரச்சினை, வயிறு சார்ந்த கோளாறு உண்டாகலாம்.

இருப்பினும் சூரியனின் அமைப்பு அனைத்து வகை பிரச்சினைகளையும் வென்று காட்டக்கூடிய வல்லமையைத் தரும்.

இந்த மாதம் உங்களின் வருமானம் எப்படியாக இருந்தாலும், பயணங்களால் செலவு அதிகரிக்கக் கூடும் என்பதால் உங்களின் சேமிப்பு கரைய வாய்ப்புள்ளதால், செலவில் சற்று கவனம் தேவை.

சூரியன், குரு இணைந்திருப்பதால் சிவ அருள் கிடைக்கும் என்பதால் இந்த ராசியினர் தை மாதத்தில் சிவ ஆலய வழிபாடு செய்வது நல்லது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்