மகளை மரப்பெட்டிக்குள் பூட்டி வைக்கும் தாய்: காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் அவரை மரப்பெட்டிக்குள் பூட்டி வைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கிராமப்புறத்தில் வசித்து வரும் Emma என்பவர் கணவரை இழந்து தனது 16 வயது பெண் குழந்தை Stephanie- ஐ தனியாக வளர்த்து வருகிறார்.

இவர்கள் வசிப்பது கிராமப்புறம் என்பதால், பெண்களுக்கு அதிக ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எம்மாவின் மகள் ஸ்டீபனி சிறுவயது குழந்தையாக இருக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

தனது வீட்டில் மரப்பெட்டி ஒன்றினை தயார் செய்துள்ள எம்மா, அதற்குள் மகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டி வைத்துவிடுகிறார்.

இதுகுறித்து எம்மா கூறியதாவது, எனது மகளின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியமானது, அவளை மரப்பெட்டிக்குள் பூட்டி வைத்தபின்னர் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும், ஒருவேளை அவளை பூட்டிவைக்கவில்லை என்றால் எனக்கு அச்சமாக இருக்கும்.

சிறுவயதில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், மனநலரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவள் தன்னைத்தானே அதிகம் காயப்படுத்திக்கொள்கிறாள், கடந்த 2 வருடங்களில் மட்டும் 12 முறை, தனது கைய், கால், வயிறு போன்றவற்றை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாள்.

எனது மகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அவளுக்கு தினசரி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டீபனி கூறியதாவது, என்னை இதுபோன்று பூட்டிவைத்திருப்பது சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது போன்று உணர்கிறேன், அது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments