அவுஸ்திரேலியாவை அதிர வைத்த இந்திய திருமணம்: பிரம்மாண்டத்தின் உச்சம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது.

சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த Rosehill கார்டனுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய Divya மற்றும் Gurjab தம்பதிகளுக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே போல எல்லோரும் கேக்-ஐ சிறிய கத்தியால் தானே வெட்டுவார்கள். ஆனால் இந்த தம்பதி 2 மீற்றர் உயரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வாளை கொண்டு வெட்டினார்கள்.

திருமண பிரம்மாண்டம் இதோடு நிற்கவில்லை. பாலிவுட் சினிமா பாணியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள், பிரேசில் நடன கலைஞர்களின் நடனம் என கலை கட்டியது.

இந்தியாவின் டெல்லிக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அடிக்கடி பறக்கும் இந்த தம்பதிகள் இதுவரை கடந்த 6 மாதத்தில் 5 முறை வித்தியாசமான முறையில் திருமண நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்கள்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 விருந்தினர்கள் வந்திருந்தனர்.

இது குறித்து Divya கூறுகையில், திருமண வரவேற்பு நிகழ்வை சிறப்பாக நடத்த நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

எங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கள் மீது காட்டிய அன்பால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Divya அவுஸ்ரேலியாவில் வளர்ந்தாலும், இந்திய கலாச்சாரத்தை என்றும் மறந்ததில்லை.

சீக்கிய மதத்தை சேர்ந்தவரான இவர், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது எங்களுக்கு மிக முக்கியம் எனவும், எங்களின் அடுத்த சந்ததியினரும் இதை பின்பற்ற வேண்டும் என தாம் விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments