இலங்கையில் குப்பை பொறுக்கும் அவுஸ்திரேலியர்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியர் ஒருவர் இலங்கையில் குப்பை பெறுக்கி வருவது அங்குள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியரான ஜோன் என்பவரே குறித்த சேவையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக சுற்றுலா பயணியாக இலங்கை சென்றுள்ள ஜோன் பெளத்த மதம் தொடர்பில் சில விடயங்களை கற்றுக் கொண்டு அவுஸ்திரேலியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இலங்கைக்கு புது திட்டத்துடன் சென்றுள்ளார்.

தனது வாழ்க்கையில் மீதமுள்ள காலம் முழுவதும் இலங்கையில் செலவிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் முக்கிய பகுதிகளில் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ஜோன், இலங்கை மக்களால் வியப்புடன் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்