அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுகிறது! வெளியேற மறுக்கும் அகதிகள்

Report Print Fathima Fathima in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவினால் அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுவதால் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வரும் அகதிகளை அந்நாட்டு அரசு பப்புவா நியூ கினியா உள்ள மானுஸ் தீவு மற்றும் நவ்ரூ தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இங்கு முகாம் செயல்படுவது சட்டவிரோதமானது என பப்புவா நியூ கினியா நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து முகாமை மூடுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

மேலும் அங்கு தங்கியுள்ள அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

இதன் ஒருகட்டமாக நேற்று மாலை 5 மணியிலிருந்து குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு வழங்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இது மனித உரிமைகளை மீறும் செயல் என வாதிடும் அகதிகள் பெரும்பாலும் வெளியேற மறுக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்நுழைந்து அகதிகளை வெளியேற்றலாம் என தெரிகிறது.

இதற்கிடையே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அகதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...