நீச்சல் கற்றுக் கொள்ளும் 9 மாத குழந்தை: வைரலாகும் வீடியோ

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தாயார் ஒருவர் தமது 9 மாத குழந்தையானது நீச்சல் கற்றுக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகியுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தாயார் ஒருவர் தமது 9 மாத குழந்தையை நீச்சல் குளத்தில் தலை கீழாக விடப்பட்டு, அதில் இருந்து மீண்டு வருவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Roxanne Turner என்ற தாயார் தமது 9 மாத குழந்தைக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி ஒன்றை வழங்கி வருகிறார்.

குறித்த வீடியோவில் குழந்தை மாக்ஸ் நீச்சல் குளத்தில் தலைகீழாக விடப்படுகிறது. மாக்ஸ் மேலெழும்பி வருகிறது.

ஆனால் குறித்த வீடியோவானது பெற்றோர்கள் மத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களால் அந்த வீடியோவை ரசித்து பார்க்க முடியவில்லை எனவும், குழந்தையை கொடுமைப்படுத்துவதாகவே படுகிறது எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களின் இந்த கொந்தளிப்பானது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதன் விளைவே என தெரிவித்துள்ள Turner, தமது மகளின் நீச்சல் பயிற்சியையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி இது பெற்றோர்களின் கடமை எனவும், குழந்தைகளின் மன உறுதியை இது அதிகரிக்கச் செய்யும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்