இறக்க போகும் பெண்ணின் கடைசி ஆசை: நிறைவேறியதால் வந்த ஆனந்த கண்ணீர்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
602Shares
602Shares
ibctamil.com

பெண் ஒருவர் விரைவில் உயிரிழக்க போகும் நிலையில் அவரின் கடைசி ஆசையை ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்ற நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் பெண்ணின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.

அதில் பெண் ஏறிய நிலையில் உடனிருந்த துணை மருத்துவர்களிடம் தனது கடைசி ஆசையாக கடற்கரைக்கு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணை ஆம்புலன்ஸிலேயே கடற்கரைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கடற்கரையில் ஸ்டக்சரில் இருந்தபடியே கடல் அழகை ஆனந்த கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்தார், அவருடன் துணை மருத்துவர் ஒருவரும் உடனிருந்தார்.

இது சம்மந்தான புகைப்படத்தை குறித்த ஆம்புலன்ஸ் நிறுவனம் பேஸ்புக்கில் பதிவு செய்ய அது வைரலாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்