அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: அதிரடியாக முறியடித்த பொலிஸ்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
86Shares
86Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாத்தின்போது கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கராவதிகளின் சதி திட்டத்தை அவுஸ்திரேலிய பொலிசார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் மெல்போர்ன் நகரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பயங்கரவாத தடுப்பு பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான குறித்த இளைஞர் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.

மட்டுமின்றி பெருங்கூட்டத்தினிடையே பயங்கரவாத தாக்குதல் நடத்துவது எப்படி என்ற தகவலை அல் கொய்தா இணைய பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் Federation Square பகுதியை பயங்கரவாத தாக்குதலுக்கு குறித்த இளைஞர் தெரிவு செய்து வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விடுக்கப்பட்டிருந்த பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்த பொலிசார்,

இருப்பினும் பொதுமக்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் கைதான இளைஞன் சோமாலிய பெற்றோருக்கு பிறந்த அவுஸ்திரேலியர் என தெரிய வந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்