பெற்ற மகளை அடித்து கொன்ற தந்தை: பரோலில் செல்ல அனுமதித்த நீதிமன்றம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
89Shares
89Shares
ibctamil.com

பெண் குழந்தையை தந்தை கொலை செய்ததையடுத்து அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும் அவர் பரோல் கோரி விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் ரிக் கடால்டோ (29). இவர் மனைவி மிச்செல் கேத்தரின்.

இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும், இன்னொரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது பெண் குழந்தையை ரிக் பயங்கரமாக அடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதை பார்த்த மிச்செல் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில் அதை ரிக் தடுத்துள்ளார்.

இதையடுத்து மிக தாமதமாகவே குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தை இறந்துவிட்டது.

இது குறித்து விசாரித்த பொலிசார் ரிக் மற்றும் மிச்செலை கைது செய்தனர். இருவர் மீதான வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரலில் ஐந்து ஆண்டுகள் நன்னடத்தை சோதனையில் இருக்க மிச்செலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிரிழந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் தான் இந்த தண்டனை மிச்செலுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த கொலையை செய்த ரிக்குக்கு எட்டாண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே ரிக் மூன்றாண்டுகளுக்கு மேலாக பொலிஸ் காவலில் இருந்துள்ள நிலையில் அவர் பரோலுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்