கூட்டத்தில் வேகமாக புகுந்த கார்: அந்தரத்தில் பறந்த மக்கள்! பலர் காயம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
278Shares
278Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் மக்கள் கூட்டத்தில் கார் வேகமாக புகுந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் மெல்போர்ன் நகரில் அந்நாட்டின் நேரப்படி மாலை 4.40க்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று நடந்து சென்ற மக்கள் மீது சரமாரியாக மோதியது.

இதில் பலர் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் பறந்தனர். சம்பவத்தில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிறுவன் ஒருவனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளான். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

காயமடைந்தவர்களின் நிலை குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து பொலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், திடீரென மக்கள் அலறும் சத்தம் கேட்டது, அப்போது கார் அவர்கள் மீது மோதிய நிலையில் பலர் அந்தரத்தில் பறந்தனர்.

கார் ஓட்டுனர் மது அருந்திருந்தாரா என்ற விவரம் தெரியவில்லை, இதை பார்க்கவே பயங்கரமாக இருந்தது என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நகர பொலிசார் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்