அம்மாடியோவ்... இந்த பெண்ணின் சம்பளத்தை கேட்டால் மயக்கமே வந்துடும்!

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
447Shares
447Shares
ibctamil.com

அவுஸ்திரேலிய பெண்ணொருவர் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்து கட்டுப்பாடு பணியை செய்து வரும் நிலையில் இதன் மூலம் ஆண்டுக்கு $130,000 சம்பாதிக்கிறார்.

நாட்டில் சிட்னி நகரில் வசித்து வருபவர் எமி டவ்செட் (30), இவர் CFMEU என்ற கட்டுமானம், சுரங்க மற்றும் ஆற்றல் உற்பத்தி தொழிற்சங்கத்தில் வேலை செய்கிறார்.

கட்டுமான பணி நடக்கும் இடங்களில் சாலை போக்குவரத்தை சீர்ப்படுத்துவது தான் இவரின் பணியாகும்.

இந்த பணி செய்ய எமிக்கு ஒரு மணிநேரத்துக்கு $40 தரப்படுவதுடன், நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவுக்காக $45 வழங்கப்படுகிறது.

இதோடு உணவுக்கு $22 தரப்படுகிறது.

கட்டுமான திட்டத்தின் அளவை பொறுத்து ஒரு மணி நேரத்துக்கு தனியாக $2.10லிருந்து $3.95 வரை பணம் வழங்கப்படுகிறது.

பத்து மணி நேரத்துக்கு அதிகமாக எமி வேலை செய்தால் இரண்டு மடங்கு சம்பளம் தரப்படும்.

CFMEU அல்லாத வேறு போட்டி நிறுவன ஆட்கள் எமி வாங்குவதில் பாதி சம்பளம் தான் வாங்குகிறார்கள்.

ஊழியர்களுக்கு CFMEU இந்தளவு ஊதியம் தருவது கேலிக்கூத்தானது என போட்டி நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என நண்பர்களிடம் கூறினால் அந்த வேலை எங்களுக்கும் கிடைக்குமா என நண்பர்கள் தன்னிடம் கேட்பதாக எமி கூறுகிறார்.

CFMEU-ன் செயலாளர் பிரெயின் பார்க்கர் கூறுகையில், எங்களின் சில ஊழியர்கள் ஆண்டுக்கு $180,000 கூட வருமானம் ஈட்டுகிறார்கள்.

நாங்கள் தரும் சம்பளம் நியாயமானது தான், புதிய ஒப்பந்ததின் படி இன்னும் சில மாதங்களில் பல ஊழியர்களுக்கு 3.5 சதவீத சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்