பிரபல இளம் மொடல் தற்கொலை: தந்தை வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் தகவல்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
207Shares
207Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் Bullying எனப்படும் கொடூர கிண்டலுக்கு 14 வயதேயான பிரபல மொடல் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாரம்பரியம் மிக்க Akubra Cowboy வகை தொப்பி விளம்பரங்களில் நடித்த புகழ் பெற்ற மொடல் சிறுமியான Amy Dolly Everett, Bullying என்று அழைக்கப்படும் வம்பிழுத்தலின் கோர விளைவாக தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த நிலையில் அவரது தந்தை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து சமூக வலைதள பயன்பாட்டாளர்களை உலுக்கியுள்ளது.

அதில் அவர், ”இந்த உலகத்திலுள்ள தீமைக்கு அவள் தப்பிக்க விரும்பியிருக்கிறாள்” டாலியின் மரணம் விலையேறப்பெற்ற பிற உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க உதவட்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் சிறுமியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்த விவரங்கள் எதையும் வெளியிடாத அவரது தந்தை அவர்களை அவளது அடக்க ஆராதனைக்கு அழைத்திருக்கிறார்.

புதனன்று, அவளது குடும்பம் ஊடகங்களுக்குக் கொடுத்த

செய்தியில், “டாலி மிகவும் இரக்கமுடைய, மற்றவர்கள் மேல் அக்கறை செலுத்தக்கூடிய அழகான ஒரு ஆன்மா, அவள் எப்போதும் விலங்குகள் மீதும், சிறு பிள்ளைகள் மீதும்

போர்டிங் பள்ளிகளில் படிக்கும் தன்னை விட எளிமையான பிள்ளைகள் மீதும் அக்கறை செலுத்தக்கூடியவள்” என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அவள் வரைந்த ”உன் குரல் நடுங்கினாலும் பேசு” என்று பின்னோக்கி வளைந்து சத்தமிடும் ஒரு மெலிந்த

பெண்ணின் படத்தை அவளது பெற்றோர்கள் வெளியிட்டனர்.” இந்த சக்தி வாய்ந்த செய்தி எங்கள் அழகு தேவதை பயணம் செய்த இருண்ட, பயம் நிறைந்த உலகைக் குறித்துக் கூறுகிறது” என்று அவளது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்