கார் விபத்தில் பிரபல நடிகை பலி: மொத்த குடும்பமும் உயிரிழந்த சோகம்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
730Shares
730Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Home and Away புகழ் Jessica Falkholt தனது குடும்பத்துடன் பயணம் செய்த போது கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி கார் விபத்துக்குள்ளானது.

இதில் இவரது பெற்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சகோதரி மூன்று நாட்களுக்குப்பின் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த Jessica Falkholt புதனன்று உயிரிழந்ததாக Sydneyயிலுள்ள St George Hospital மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

29 வயதான அவர் Home and Away தொடரில் Hope Morrison என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார்.

தொடரின் ரசிகர்கள் உட்பட பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

farewell wonderful Jess ♡ beautiful pic by David Newman. ♡

A post shared by Pia. (@piamiller) on

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்