நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்: பதைபதைக்கும் நிமிடத்தை கமெராவில் பதிவு செய்த பெண்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
518Shares
518Shares
ibctamil.com

அவுஸ்திரேலியாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் பெண்ணொருவர் குளித்து கொண்டிருந்த நிலையில் தண்ணீரில் தவறி விழுந்த இளைஞர் நீரில் மூழ்குவதை தற்செயலாக புகைப்படம் எடுத்துள்ளார்.

நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசியா பூங்காவில் அமைந்துள்ளது மெக்கன்சி நீர்வீழ்ச்சி.

இங்கு அனிகா பேடிங் (24) என்ற இளம்பெண் தனது நண்பர்களுடன் சனிக்கிழமை நீச்சலடிக்க சென்றார்.

அப்போது கமெரா மூலம் தன்னையும் தனது நண்பர்களையும் புகைப்படம் எடுத்தப்படி இருந்தார்.

அந்த சமயத்தில் பாறையின் மீது தனது மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்திருந்த தைவான் இளைஞர் தடுக்கி நீரில் விழுந்துள்ளார்.

தன்னையும் தனது நண்பர்களையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த அனிகாவின் கமெராவில் இளைஞர் மூழ்கும் காட்சியும் பதிவானது.

இதையடுத்து நீரில் மூழ்கிய இளைஞரின் நண்பர்கள் அவரை யாராவது காப்பாற்றுங்கள் என கத்தினார்கள்.

அப்போது அனிகா உட்பட அங்கிருந்த பலரும் போன் மூலம் அவசர உதவியை தொடர்பு கொள்ள முயன்ற நிலையில், நீர்வீழ்ச்சி இருக்கும் இடம் அடர்ந்த பகுதி என்பதால் யாருக்கும் சிக்னல் கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கிருந்த ஊழியர் தண்ணீரில் குதித்து இளைஞரை மீட்க முயன்றும் நீரில் வேகம் அதிகமாக இருந்ததால் அது முடியவில்லை.

பின்னர் தனது காரை எடுத்து கொண்டு அனிகா சில கிலோமீட்ட தூரம் சென்ற பின்னரே போனில் சிக்னல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் வந்த நிலையில் நீரில் மூழ்கிய இளைஞர் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகளில் சிக்கியதை உறுதி செய்தனர்.

மிகுந்த முயற்சிக்கு பின்னர் ஞாயிறு காலை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. இது நீச்சல் தடை செய்யப்பட்ட பகுதி என்று எழுதிவைக்கப்பட்ட வாசகம் தனது கண்ணில் படவேயில்லை என அனிகா கூறிய நிலையில் மூன்று இடங்களில் அப்படி எழுதிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்