நடுக்கடலில் நான்கு நாட்களாக உயிருக்கு போராடிய ஏழு பேர்: திக் திக் நிமிடங்கள்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
138Shares
138Shares
ibctamil.com

பசிபிக் பெருங்கடலில் சென்ற படகு மூழ்கிய நிலையில் ரப்பர் படகில் ஏறி 4 நாட்கள் உணவு, நீர் இன்றி தவித்த 7 பேரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள குட்டி நாடு கிரிபாட்டீ, பசிபிக் பெருங்கடலின் நடுவில் இது அமைந்துள்ளது.

இந்நிலையில் 50 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு திடீரென மூழ்கியுள்ளது, அதிலிருந்த ஆறு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ரப்பர் படகில் ஏறி உயிர் தப்பித்துள்ளனர்.

நான்கு நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி உச்சி வெயிலில் அவர்கள் தவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து ராணுவ மீட்பு குழுவினர் ராடார் கருவி உதவியுடன் சிறிய படகில் இருப்பவர்களை கண்டுப்பிடித்து அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை கொடுத்துள்ளனர்.

இதோடு தங்களை தொடர்பு கொள்ள ரேடியோவையும் தந்துள்ளனர், தங்களின் நிலையை குழுவினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஞாயிறு அன்று மீன் பிடிக்கும் படகு மூலம் 7 பேரும் மீட்கப்பட்டனர், தண்ணீரில் விழுந்த மீதி பேர் தப்பித்திருப்பார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

50 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

காணாமல் போனவர்களை மீண்டும் தேடலாமா என்பது குறித்து காப்பாற்றப்பட்டவர்களிடம் சில முக்கிய தகவல்களை பெறப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படவுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்