மகளிர் தினத்தன்று அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து பெண் தற்கொலை

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இன்று பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இன்று மதியம் 2.40 மணியளவில் சிட்னி டவரின் 309 மீற்றர் உயரத்திலிருந்து அந்தப் பெண் குதித்தார்.

சிட்னி டவரைப் பார்வையிடுபவர்களின் பாதுகாப்புக்காக பார்வையாளர்கள் பாதுகாப்புக் கவசம் ஒன்றை அணிந்திருப்பார்கள். அதைக் கழற்றி வீசிவிட்டு இந்தப் பெண் குதித்துள்ளார்.

அவர் யார், எதற்காக குதித்தார் என்ற விவரங்கள் இது வரைக்கும் கிடைக்க வில்லை.

இந்த சம்பவத்தினால் சிட்னி டவர் கால வரையற்று மூடப்பட்டுள்ளது.

அவர் குதிக்கும்போது அவர் அருகே ஒரு சிறுமியும் இரண்டு முதியவர்களும் இருந்துள்ளனர்.

சிறுமி இன்னும் பயத்தில் அழுது கொண்டிருக்கிறாள். முதியவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மருத்துவ உதவிக் குழுக்கள் அவர்களை அதிர்ச்சியிலிருந்து விடுபடச் செய்ய உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers